மூன்றாம் ஆண்டில் நமது வணிகம் செய்தித்தளம் – உதயமாகிறது ‘COTE’

நமது வணிகம் செய்தித்தளம், 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ், சிட்னி நகரில் தொடங்கப்பட்ட நமது வணிகம் தொழில் கூட்டமைப்பின் ஒரு அங்கமாகும். 2019 ஆம் ஆண்டு கோவையில்  உலக தமிழ் வணிக கூட்டமைப்பாக விரிவு படுத்தப்பட்ட தொழில்முனைவோர்களுக்கான அமைப்பின் பிரத்யேக செய்தித்தளமாக  வெற்றி நடையிட்டு, வரும் செப்டம்பர் 2025 ஆம் நாள் இரண்டாம் ஆண்டை நிறைவு செய்து, மூன்றாம் ஆண்டை துவங்குகிறது.

நமது வணிகம் செய்தித்தளம், இணைய வழி ஊடகமாகவும், அஞ்சல் மற்றும் மின்னஞ்சல் ஊடகமாகவும், வலைதள தொலைக்காட்சியாகவும், ஆண்ட்ராய்டு மொபைல் செயலியாகவும், சமூக வலைதளம் மூலமாகவும் மாதத்திற்கு சுமார் ஒரு லட்சம் வாசகர்களை சென்றடைகிறது.

நமது வணிகம் தொழில் கூட்டமைப்பின் ஏழாம் ஆண்டில் COTE – Chamber Of Trade & Enterprises கிளைகள் தமிழகமெங்கும்  விரிவுபடுத்தப்பட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் அரசு சார்ந்த தொழில் உதவிகள், கடன்கள், தொழில் வாய்ப்புகள், தொழில்நுட்பம் சார்ந்த பயிற்சிகள், நிதி  சார்ந்து வழிகாட்டுதல்கள், முதலீட்டு வாய்ப்புகள், வாய்ப்புகளை குழுவாக பகிர்ந்து கொள்ளுதல், தொழில் தகவல்களை பகிர்ந்து கொள்ளுதல், ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் மற்ற மாவட்டத்திற்கு தேவையான கொள்முதல்களுக்கு உதவுதல் போன்ற பல வாய்ப்புகளை உருவாக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதற்கான பிரம்மாண்ட நிகழ்வு வரும் செப்டம்பர் மாதம் 2025 – இல் கோவையில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் தமிழகத்திலிருந்து ஐந்து “COTE” கிளைகள் தொடங்கி வைக்கப்பட உள்ளது. இந்நிகழ்வில் அரசு அலுவலர்கள், மாவட்ட அரசு பிரதிநிதிகள் மற்றும் தொழில்துறையில் சாதனை படைத்தவர்கள் கலந்து கொண்டு “COTE” கிளைகளை செயல்பாட்டுக்கு முன்மொழிகின்றனர்.

இதில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த “Coimbatore Chamber Of Trade & Enterprises” – கிளை ஒருங்கிணைப்பாளர் திரு.அருண்குமார் அவர்கள் முன்னெடுப்பில் 25 தொழில் முனைவோர்களுடன், தமிழகத்தின் முதல் அமைப்பாக தங்களை பதிவு செய்து கொண்டுள்ளனர். நமது வணிகம், COTE சார்பாக 38 மாவட்டங்களிலும் கிளை ஒருங்கிணைப்பாளர்கள் வரவேற்கப்படுகின்றனர்.

“COTE” அமைப்பு, அடுத்து 30 ஆண்டுகளில்  உலகளாவிய அளவில், தமிழ் தொழில் முனைவோர்களின் வரப்பிரசாதமாக இருக்கும் என்பதில் எந்த ஒரு ஐயப்பாடும் இல்லை.

கிளை ஒருங்கிணைப்பாளராக தொடர்புக்கு : +919489168989