8-வது ஊதியக் குழு: இந்திய கடற்படை கேப்டன் சம்பளம் எவ்வளவு உயரும்? அவசியம் படிங்க.!!

இந்தியப் பாதுகாப்பின் முக்கியமான தூணாகக் கருதப்படும் இந்திய கடற்படையில் கேப்டன் (Captain) பதவி மிகவும் மதிப்புமிக்க மற்றும் பொறுப்புள்ள ஒன்றாகும். இது இந்திய ராணுவத்தில் கர்னல் பதவிக்கும், விமானப்படையில் குரூப் கேப்டன் பதவிக்கும் இணையானது.
தற்போது அவர்களுக்கான சம்பளம், ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைக்கேற்ப வழங்கப்பட்டு வருகிறது.கேப்டன்கள் பே பேண்ட் 4 .ன் கீழ் ஊதியம் பெறுகின்றனர்.
இவர்களின் அடிப்படை சம்பளம்: தோராயமாக ₹87,000 (₹37,400 முதல் ₹67,000 வரையிலான சம்பளம் + ₹8,700 தர ஊதியம்) ஆகும்.வீட்டு வாடகைப்படி (HRA), போக்குவரத்துப்படி, கடல் சேவைப்படி, கடின பகுதிப்படி மற்றும் சீருடை பராமரிப்புப்படி போன்ற பல்வேறு படிகள் அனைத்தையும் சேர்க்கும்போது, ஒரு கேப்டன் ₹1.5 லட்சம் முதல் ₹2 லட்சம் வரை சம்பளமாகப் பெறுவார்.

8வது ஊதியக் குழு

8வது ஊதியக் குழு அமல்படுத்தப்பட்டால், கேப்டனின் சம்பளம் கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதன்படி ஃபிட்மென்ட் காரணி 2.47 மடங்காக அதிகரிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் அடிப்படைச் சம்பளம் தோராயமாக இரண்டரை மடங்கு அதிகரிக்கலாம்.
எதிர்பார்க்கப்படும் புதிய சம்பளம்: தற்போதைய அடிப்படைச் சம்பளம் ₹87,000 என்று வைத்துக்கொண்டால், 2.47 ஃபிட்மென்ட் காரணியின்படி, புதிய அடிப்படைச் சம்பளம் தோராயமாக ₹2,14,890 (சுமார் ₹2.15 லட்சம்) ஆக இருக்கும்.அதாவது, அடிப்படைச் சம்பளம் மட்டும் தோராயமாக ₹1.3 லட்சம் அதிகரிக்கும்.அகவிலைப்படி (DA), வீட்டு வாடகைப்படி (HRA) மற்றும் பிற சலுகைகள் சேர்க்கப்படும்போது, கேப்டனின் மொத்த சம்பளம் மாதம் சுமார் ₹3 லட்சம் வரை உயரலாம்.

(ஃபிட்மென்ட் காரணி (Fitment Factor) என்பது அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அடிப்படை ஊதியத்தை உயர்த்துவதற்குப் பயன்படுத்தப்படும் ஒரு பெருக்கியாகும். இது அடிப்படை ஊதியத்தை ஒரு குறிப்பிட்ட எண்ணால் பெருக்கி, திருத்தப்பட்ட அடிப்படை ஊதியத்தைக் கண்டறிய உதவுகிறது. பணவீக்கம் மற்றும் ஊழியர்களின் தேவைகள் போன்ற பல்வேறு காரணிகளைப் பொறுத்து இந்த காரணி தீர்மானிக்கப்படுகிறது)