StableCoin Law – டொனால்டு டிரம்ப் ஒப்புதல்!

அமெரிக்காவின் அதிபர் டொனால்டு டிரம்ப், தற்போது ஸ்டேபிள்காயின் (Stablecoin) தொடர்பான முக்கியமான சட்டத்திற்கு கையெழுத்திட்டுள்ளார். 2025-ல் வர்த்தக உலகத்துக்குள் கிரிப்டோவை முழுமையாக கொண்டு வர இந்த சட்டம் வழிவகுக்கும் என நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.

StableCoin Law – என்ன இந்த சட்டம்?

இந்த புதிய சட்டத்தின் மூலம், டாலர் மதிப்பை சார்ந்த கிரிப்டோ கரன்சிகள், மிக தெளிவான விதிகளுடன் வளர்ச்சிக்கான வழியில், கட்டுப்பாடுகளுக்குள் கொண்டு வரப்படுகின்றன. இது, நிதி நிறுவனங்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும் ஒரு பாதுகாப்பான சூழலை உருவாக்கும்.

அமெரிக்க அரசின் கண்காணிப்பு:

ஸ்டேபிள்காயின்கள் இயக்கப்பட வேண்டிய விதிமுறைகளை தற்போது அமெரிக்க நிதி கட்டுப்பாட்டு அமைப்புகள் நேரடியாக கண்காணிக்கும். இது கிரிப்டோ தொழில்நுட்பத்தின் மீது உள்ள சந்தேகங்களை குறைத்து, வங்கி மற்றும் நிதி நிறுவனங்களும் கிரிப்டோவுடன் பணியாற்ற வழிவகுக்கும்.

முதலீட்டாளர்களுக்கு நன்மை:

இந்த சட்டம் அமலில் வந்த பிறகு, கிரிப்டோவின் மதிப்பும், நிலைத்தன்மையும் உயரும் என கணிக்கப்படுகிறது. சிறு முதலீட்டாளர்கள் முதல் பெரிய நிறுவனங்கள் வரை அனைவருக்கும் இது ஒரு நம்பகமான முதலீட்டு வாய்ப்பு ஆக அமையும்.

உலக கிரிப்டோ சந்தையில் புதிய அத்தியாயம்!

ட்ரம்ப் எடுத்த இந்த நடவடிக்கை, அமெரிக்கா மட்டுமின்றி உலகளவில் கிரிப்டோவின் சட்டப்பூர்வ அடையாளத்துக்கு வழிவகுக்கும். இது இந்திய முதலீட்டாளர்களுக்கும் கிரிப்டோ முதலீடுகளை பற்றிய  புதிய சிந்தனையை உருவாக்கும் வகையில் இருக்கலாம்.

இது போன்ற சட்டங்களை உலக அளவில் அனைத்து அரசுகளும் முன்னெடுத்தால், கிரிப்டோ முதலீடுகளுக்கான பாதுகாப்பு நம்பகத்தன்மையும் அடிப்படையும் சரிபடுத்தப்பட வாய்ப்புகள் அதிகம் என பொருளாதார வல்லுநர்கள் கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.