ரஷ்யா கச்சா எண்ணெய் கொள்முதல் – இந்தியா 3 ஆண்டில் ₹1.5 லட்சம் கோடி சேமிப்பு!

2022 மே மாதம் முதல் 2025 மே மாதம் வரை ரஷ்யாவிலிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கி பெரும் கட்டண சலுகைகளைப் பெற்றுள்ளது. சர்வதேச சந்தை விலை ₹5,871 ஆக இருப்பினும், ரஷ்யா ₹5,232 மட்டுமே விலையில் வழங்கியதன் மூலம் ₹639 பிரீமியம் ஒவ்வொரு பீப்பாயுக்கும் குறைந்தது. அதன் மூலம் கடந்த 3 ஆண்டில் இந்தியா ₹1,49,989 கோடி சேமித்து இருக்கிறது. இது வருடத்திற்கு சராசரியாக ₹96,923 கோடி வசூலை குறைத்துள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்த முடிவுக்கு அனைத்து தொழில்முனைவோர் சங்கம் (All Entrepreneurs Association) பாராட்டு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் திரு.ஜெயபால் கூறியதின்படி: “நாம் சுதந்திரம் பெற்ற பிறகு அமெரிக்காவுடன் வர்த்தக உறவுகள் 1991-ல் தொடங்கியது. இந்தியாவின் ஏற்றுமதியில் அமெரிக்காவின் பங்கு 17.9%, ஆனால் அதே நேரத்தில் உலக விற்பனையில் இந்தியாவின் பங்கு வெறும் 2.7% மட்டுமே. ரஷ்யாவுடன் கச்சா எண்ணெய் கொள்முதல் மூலம் ஏற்பட்ட சேமிப்பு தொழில்முனைபவர்களுக்கும் நாட்டின் மொத்த பொருளாதாரத்திற்கும் வளர்ச்சியை உறுதி செய்கிறது” என அவர் கூறினார்.

தொகுப்புக் குறைவை தவிர்க்க, ரஷ்யாவுடனான கூட்டமைப்பு இந்திய எரிசக்தி, விவசாயம், சிறு-நடுத்தர தொழில்துறை முதலியவற்றை கருத்தில் கொண்டு இந்த கொள்முதல் திட்டத்தை மத்திய அரசு எடுத்த இந்த நடவடிக்கை தொழில்முனைவோராலும் தயாரிப்பு துறையாலும் வெகுவாக பாராட்டப்பட்டது.