NMMS எனப்படும் NATIONAL MEANS CUM MERIT SCHOLARSHIP SCHEME EXAMINATION (தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவி தொகை திட்ட தேர்வு) மூலம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ₹1,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வாகும் மாணவர்களுக்கு 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை, மொத்தம் 4 ஆண்டுகளுக்கு, ₹48,000 உதவித்தொகை கிடைக்கும். இந்தத் தேர்வின் மூலம் தமிழ்நாட்டிலிருந்து சுமார் 6,695 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிப்பதற்கான இறுதித் தேதி இன்று!
2025-2026 ஆம் கல்வியாண்டிற்கான திறனறிவுத் தேர்வு 2026 ஜனவரி 10ஆம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. தற்போது 8ஆம் வகுப்பு பயிலக்கூடிய அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். மாணவர்கள் டிசம்பர் 15ஆம் தேதியான இன்றுக்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தோடு ₹50 கட்டணத்தையும் சேர்த்துத் தாங்கள் கல்வி பயிலும் பள்ளி தலைமை ஆசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தை https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பம் சமர்ப்பிக்கக் கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.
NMMS தேர்வு: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ₹48,000 உதவித்தொகை அறிவிப்பு!


