பாரத் பே நிறுவனத்தின் புதிய தலைமை மனிதவள அதிகாரியாக (CHRO) ஹர்ஷிதா கன்னா நியமனம்!

இந்தியாவின் முன்னணி ஃபின்டெக் (FinTech) நிறுவனங்களில் ஒன்றான பாரத் பே (BharatPe) நிறுவனத்தின் புதிய தலைமை மனிதவள அதிகாரியாக (CHRO) ஹர்ஷிதா கன்னா நியமிக்கப்பட்டுள்ளார்.

மனிதவள மேம்பாட்டுத்துறையில் 18 ஆண்டுகளுக்கும் அனுபவம் பெற்ற இவர் இதற்கு முன் ஹோம் கிரெடிட் இந்தியா (Home Credit India),அல்காடெல் லூசென்ட் (Alcatel Lucent),சி.எஸ்.சி (CSC),ஹெவிட் (Hewitt)போன்ற நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து பாரத் பே நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) நலின் நெகி கூறுகையில், “உயர் செயல்திறன் கலாச்சாரத்தை (High-performance Culture) உருவாக்குவதில் அவர் முக்கியப் பங்கு வகிப்பார்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும் என்ஐஐடி (NIIT) நிறுவனத்தின் புதிய தலைமை மனிதவள அதிகாரியாக ஷில்பா துபா (Shilpa Dhuba) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மேக்ஸ் லைஃப் இன்சூரன்ஸ், வால்மார்ட், இந்துஸ்தான் கோகோ-கோலா, ஜிஎஸ்கே போன்ற பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.