உலக நிதித்துறையை உலுக்கிய $500 மில்லியன் மோசடி! இந்தியத் தொழிலதிபரால் BlackRock திணறல்!

உலகளாவிய நிதிச் சந்தையில் பெரும் ஆதிக்கம் செலுத்தும் பிளாக்ராக் (BlackRock) நிறுவனத்தின் தனிநபர் கடன் பிரிவு, 500 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் (சுமார் ₹4,170 கோடி) அதிகமான நிதி இழப்பை ஏற்படுத்தும் பெரிய மோசடிக்கு உள்ளாகியுள்ளது. இது உலகத் தனியார் கடன் துறையில் மிகப்பெரிய மோசடிகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

மோசடி பின்னணி
அமெரிக்க வாழ் இந்திய வம்சாவளித் தொழிலதிபரான பங்கிம் பிரம்மபட் தனது தலைமையிலான பிராட்பேண்ட் டெலிகாம், பிரிட்ஜ்வாய்ஸ் மற்றும் கேரியாக்ஸ் கேபிடல் நிறுவனங்கள் மூலம் இந்த மோசடியினை அரங்கேற்றியுள்ளார்.
இந்த கடனுக்கான பிணையாக வாடிக்கையாளர்களிடமிருந்து வரவேண்டிய தொகைகளை சொத்து மதிப்பாக காட்டி இணைத்துள்ளார்.அவர் போலியான வாடிக்கையாளர்கள்,போலியான இமெயில்கள் மற்றும் போலியான ரசீதுகளை உருவாக்கி இந்த மோசடியினை அரங்கேற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
.
சந்தேகம்:

இந்த ஆண்டின் தொடக்கத்தில், எச்.பி.எஸ் ஊழியர் ஒருவர் வாடிக்கையாளர்களுக்கான சில மின்னஞ்சல் முகவரிகளில் சீரற்ற தன்மைகளைக் கண்டறிந்தபோதுதான் சந்தேகம் வலுக்கத் தொடங்கியது.இது குறித்து அவரிடம் கேட்டபோது சில விளக்கங்களைத் தந்து சமாளித்ததாகவும், மேலும் சமாளிக்க இயலாத நிலையில் கேரியாக்ஸ் கேபிடல் உள்ளிட்ட‌ அவரது நிறுவனங்களும், அவரும் தனித்தனியே திவால் அறிவிப்பினை வெளியிட்டனர்.

பிளாக்ராக்-க்கு சொந்தமான எச்.பி.எஸ் (HPS) என்ற கடன் பிரிவு 2020 செப்டம்பரில் கடன் வழங்கத் தொடங்கியது. 2024 ஆகஸ்டில் கடன் அளவு கிட்டத்தட்ட $430 மில்லியன் வரை உயர்த்தப்பட்டது.