தாயுமானவர் திட்டம் – முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான வீடு தோறும் ரேஷன்!


தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் முதல்வரின் தாயுமானவர் திட்டம், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரேஷன் பொருட்களை நேரடியாக வீடு தோறும் கொண்டு சேர்க்கும் வகையில் அமைகிறது. இந்த திட்டம் சமூக நலத்திட்டங்களில் தனித்துவமான இடத்தை பெற்றுள்ளது.

பயனாளர்கள் யார்?

70 வயதுக்கு மேற்பட்ட சுமார் 20.42 லட்சம் முதியோர், 1.27 லட்சம் மாற்றுத்திறனாளிகள் என்று மொத்தம் 21.7 லட்சம் குடும்பங்கள் இந்த சேவையால் நேரடியாக பயனடைகின்றன.

சேவை நடைமுறை:


மாதந்தோறும் இரண்டாவது சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் ரேஷன் பொருட்கள் வீடுகளுக்கு கொண்டு செல்லப்படும்.                                                

இதன் மூலம் அரசு அதிகாரிகள் பெயர் பட்டியல் தயாரித்து, பயனாளர்களின் வீடுகளுக்கு சென்று பொருட்களை வழங்குவார்கள்.
எலக்ட்ரானிக் எடை மற்றும் இ-பாஸ் இயந்திரம் மூலம் சரியான அளவு உறுதி செய்யப்படும்.

திட்டத்தின் சிறப்பு

இந்த திட்டத்துக்காக அரசு ரூ. 30.16 கோடி செலவினை ஏற்றுக்கொண்டுள்ளது.
ரேஷன் கடைக்கு வர முடியாத முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் சிரமத்தை குறைக்கிறது.