ப்ரோகிராமர் வேலைக்கு இனி நேரடி இன்டெர்வியூ முக்கியம் – கூகுள் அறிவிப்பு | Google Programmer Jobs Hiring Update 2025

கூகுள் போன்ற பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் பணியமர்த்தும் செயல்முறைகளில் தற்போது ஒரு முக்கிய மாற்றம் உண்டாகியுள்ளது. ஏஐ தொழில்நுட்பம் ஆன்லைன் நேர்காணல்களில் அதிகமாகப் பயன்படுத்தப்படுவதால், உண்மையான திறமைகளை இந்த முறையில் சரியாகப் பரிசோதிக்க இயலாமல் இருக்கிறது.

குறிப்பாக பொறியியல் மற்றும் ப்ரோகிராமிங் பணிகளுக்கான நேர்காணல்களில், AI மூலம் உதவி பெறுதல் வழக்கமானதாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலைமை கூகுள் போன்ற நிறுவனங்களுக்கு ஒரு பெரிய சவாலாக மாறியது.

இந்த பிரச்சினைக்கு தீர்வாக, திரு. சுந்தர் பிச்சை அவர்கள் ஏஐ பயன்பாட்டை சமாளிக்க, இனி பொறியியல் மற்றும் ப்ரோக்ராமிங் பணியிடங்களுக்கு குறைந்தது ஒரு சுற்று நேரடி நேர்காணல்கள் (in-person interviews) கட்டாயமாக நடைபெறும் என அறிவித்தார்.

இது “பணியாளர்களின் அடிப்படைத் திறன்களை சரிபார்க்கும் நோக்கத்துடன் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏஐ உதவியால் நேரடி அழுத்தங்களைச் சமாளிக்காமல் தேர்ந்தெடுக்கப்படும் திறமையற்றவர்களைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கை இது என் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் மட்டும் இல்லை—மற்ற tech நிறுவனங்களும் இதற்கேற்பமாக மாற்றங்களைச் செய்கிறார்கள். உதாரணமாக, Amazon–ல் நியமனத்துக்கு முன் AI-ஐப் பயன்படுத்த வேண்டாம் என்று உறுதிமொழிய உள்ளது; Anthropic நிறுவனம் AI-ஐ முழுமையாக மறுத்துள்ளது; Cisco, McKinsey போன்ற நிறுவனங்கள் நேரிடை நேர்காணல்களை மீண்டும் அறிமுகப்படுத்துகின்றன; UK-இல் Deloitte-உம் பணியாளர்களை நேரடியாக நேர்காணல் செய்யத் தொடங்கியுள்ளது.