பிரபலமான கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான மாருதியின் விற்பனை குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.
மொத்த விற்பனை: கடந்த் அக்டோபர் மாதத்தில் இந்நிறுவன வாகனங்களின் விற்பனை 7 சதவிகிதம் உயர்ந்து, 2,20,894 யூனிட்களாக உள்ளது. முந்தைய ஆண்டு இதே மாதத்தில் இது 2,06,434 யூனிட்களாக இருந்தது.
வணிக வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களின் உள்நாட்டு விற்பனை 1,80,675 யூனிட்களாகவும், பயணிகள் வாகன விற்பனை 10.48%அதிகரித்து 1,76,318 யூனிட்களாக உள்ளது. மேலும் இவ்வாகனங்களின் ஏற்றுமதி 31,304 யூனிட்கள் ஆகும்.
மேலும் டொயோட்டா கிர்லோஸ்கரில் பயன்படுத்தப்படும் இன்ஜின்கள் அல்லது டயர்கள் போன்ற உதிரி பாகங்களை மாருதி நிறுவனத்திடமிருந்து பெறும் ஒப்பந்தப்படி (OEM) மாருதி நிறுவனம் 8,915 யூனிட்களை விற்பனை செய்துள்ளது.
சிறிய கார்கள் (பலேனோ, ஸ்விஃப்ட், வேகன்ஆர்): இவற்றின் விற்பனை 76,143 யூனிட்களாக அதிகரித்துள்ளது.
எஸ்யுவி என்று அறியப்படும் விளையாட்டுப் பயன்பாட்டு வாகனங்கள் (பிரெஸ்ஸா, கிராண்ட் விட்டாரா, ஜிம்னி): 77,571 யூனிட்கள் விற்பனையாகி, சந்தையில் வலுவான இடத்தினைப்ப் பதிவு செய்துள்ளன.
அதேநேரத்தில் மினி கார்களான (ஆல்டோ, எஸ்-பிரஸ்ஸோ): போன்றவற்றின் விற்பனை 9,067 யூனிட்களாகக் குறைந்துள்ளது என்பதுவும் குறிப்பிடத்தக்கது.


