நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news வங்கி எஃப்டி-யை மிஞ்சும் தபால் அலுவலக திட்டம்! 7.5% வட்டி, வரி விலக்குனு லாபம் அள்ளும் முதலீட்டாளர்கள்! 1 days ago
news ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 100% வரி விதிப்பு... அமெரிக்காவில் மசோதா நிறைவேற்றம்! 2 days ago
news Gen Z இளைஞர்கள் கவனத்திற்கு : ஹோம் லோன் எடுப்பதற்கு முன் இந்த ஐந்து விஷயங்களை மறந்துடாதீங்க 4 days ago
news யுபிஐ, இன்டர்நெட் இல்லாமலேயே பணம் அனுப்பலாம்... புதிய வசதியை அறிமுகம் செய்த ரிசர்வ் வங்கி! 11 Sep 2026
news Bank Strike | நாடு முழுவதும் நாளை வங்கிகள் செயல்படுமா..? ஊழியர் சங்கங்கள் சொல்வது என்ன? 10 Sep 2026
news பிசினஸ் தொடங்க கடன் வேணுமா? 16 அரசுத் திட்டங்கள்.. ஒரே தளம்.. வங்கிகளுக்கு அலையாமல் விண்ணப்பிப்பது எப்படி? 09 Sep 2026
news SBI வாடிக்கையாளர்களே அலார்ட்.. செப்டம்பர் 4 யூபிஐ சேவைகள் நிறுத்தப்படும்.. முழு விவரம் இதோ! 04 Sep 2026
news ரூ.10-க்கு ஐஸ்கிரீம் சந்தையில் என்ட்ரி ஆகும் ரிலையன்ஸ்.. அமுல், குவாலிட்டி வால்ஸுக்குப் போட்டியாக களமிறங்கும் 'பாம்பே கிரீமரி'! 03 Sep 2026
news செப்டம்பர் 15 முதல்... சர்க்கரையை 30 நாட்களுக்கு மேல் இருப்பு வைக்கத் தடை: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு! 02 Sep 2026
news உலகத்தின் Pure நெய் பட்டியலில் 6 வது இடத்தைப் பிடித்த அமுல்.. அதிகாரப்பூர்வ பட்டியலை வெளியிட்ட Tasteatles! 29 Aug 2026

தொழில்நுட்பம்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு: பழைய ஐடி-க்கு குட்பை..!!

Apr 01, 2026 01 Apr 2026 0 Views
உலக அளவில் கோடிக்கணக்கான மக்களின் அதிகாரப்பூர்வ தகவல் தொடர்பு முறையாக ஜிமெயில் திகழ்கிறது. நம் வீட்டிற்கு எப்படி முகவரி இருக்கிறதோ அப்படி நமக்கான டிஜிட்டல் முகவரியாக திகழ்கிறது ஜிமெயில் ஐடி தான். நட்பு ரீதியாகவும் சரி தொழில் ரீதியாகவும் சரி, உள்ளூரில் இருந்து வெளிநாடுகள் வரை அதிகாரபூர்வமாக ஒருவரை தொடர்பு கொள்ள வேண்டுமென்றால் நாம் அனைவரும் பயன்படுத்துவது கூகுளின் ஜிமெயில் தான்.

ஆனால் 90ஸ் கிட்ஸ்களுக்கு ஜிமெயில் பயன்படுத்துவதில் ஒரு பெரிய பிரச்சனை நீண்ட காலமாகவே நீடித்து வருகிறது. அதுதான் ஜிமெயிலில் நமக்கு இருக்கக்கூடிய user name. சிறுவயதில் நமக்கு விளையாட்டாக சில பெயர்கள் கொடுத்து ஜிமெயில் யூசர் நேம் கிரியேட் செய்திருப்போம். தற்போது வேலைக்கு செல்லும் போதும் , தொழில் ரீதியாக மற்றவர்களை தொடர்பு கொள்ளும் போதும் தான் இந்த யூசர் நேம் கொண்ட ஜிமெயில்களை வழங்குவது சற்றே தயக்கமாக இருக்கிறது.

இதற்காக புதிதாக ஐடி கிரியேட் செய்யவும் மனமில்லை, காமெடியான யூசர் நேம் கொண்ட ஜிமெயில் ஐடி-யையும் வழங்க முடியாது என மதில் மேல் பூனையாக தவித்து வந்த 90ஸ் கிட்ஸ்களுக்கு இனி அந்த பிரச்சினை இல்லை. கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருக்கக்கூடிய பதிவில் 2004 ஆம் ஆண்டு ஒரு மிகச்சிறந்த ஆண்டு ஆனால் உங்களுடைய ஜிமெயில் முகவரி அப்போது தொடங்கிய அதே பெயரிலேயே இருக்க வேண்டும் என்று அவசியம் கிடையாது எனக் கூறியிருக்கிறார்.

இனி v0t3f0rp3dr02004@gmail.com அல்லது mrbrightside416@gmail.com போன்ற ஜிமெயில் யூசர் நேம்களுக்கு குட் பை சொல்லிவிடுங்கள் என கூறியுள்ளார். அதாவது இனி எளிமையாக உங்களின் யூஸரெ நேமை மாற்றி கொள்ளலாம். உங்களுடைய கூகுள் அக்கவுண்டில் settings பக்கத்திற்கு செல்லுங்கள் அங்கே உங்களுக்கு பொருத்தமான பெயரை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள் எனக் கூறியிருக்கிறார்.

நீங்கள் உங்களுடைய பழைய யூசர் நேமையும் தொடர்ந்து பயன்படுத்தலாம், புதிய யூசர்நேமையும் தொடர்ந்து பயன்படுத்தலாம் என கூறியிருக்கிறார். எனவே நீண்ட ஆண்டுகளாக ஜிமெயில் பயனர்கள் முன் வைத்த கோரிக்கையை கூகுள் நிறைவேற்றி இருக்கிறது. எனவே பயனர்கள் தங்களுடைய மின்னஞ்சல் முகவரியை இனி மாற்றிக் கொள்ளலாம். இதற்கு முன்பு இந்த வசதி கிடையாது ஆனால் இன்று முதல் @gmail.com என்பதற்கு முன்னால் இருக்கக்கூடிய உங்களுடைய பெயரை நீங்கள் எளிதாக மாற்றிக் கொள்ள முடியும்.

இதனால் உங்களுடைய ஃபோட்டோ அதில் இருக்கக்கூடிய காண்டாக்ட் எண்கள் மற்றும் தகவல்கள் அழியாது. உங்களுடைய பழைய யூசர் நேமும் தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும் புதிய யூசர் நேமும் பயன்பாட்டில் இருக்கும் என கூகுள் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. பெயர் மட்டுமே மாறுமே தவிர மற்ற அனைத்து அம்சங்களும் அப்படியே தான் இருக்கும் என்பதால் பயனர்கள் எந்தவித தயக்கமும் இல்லாமல் தங்களுடைய பழைய ஐடிக்கு மாற்றாக புதிய யூசர்நேமை உருவாக்கிக் கொள்ளலாம் என கூகுள் நிறுவனம் உறுதி தந்திருக்கிறது.

ஒரு பயனர் அதிகபட்சமாக மூன்று முறை தங்களின் யூஸர் நேமை மாற்றி கொள்ளலாம். ஒரு ஆண்டில் ஒரு முறை மட்டுமே மாற்றி கொள்ள முடியும். இதற்கு ஜிமெயில் கணக்கில் லாகின் செய்து Manage your Google Account என்பதை கிளிக் செய்ய வேண்டும். அதில் "Personal info" என்பதை கிளிக் செய்து அதில் "Google Account email" என்பதை தேர்வு செய்தால் "Change Google Account email" என்ற பட்டன் வரும் அதை கிளிக் செய்தால், யூசர் நேமை மாற்றி கொள்ளலாம். உடனடியாக அனைத்து சர்வர்களிலும் அப்டேட் செய்யப்பட்டு புதிய யூசர் நேம் காட்டிவிடும்.