நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news பிசினஸ் தொடங்க கடன் வேணுமா? 16 அரசுத் திட்டங்கள்.. ஒரே தளம்.. வங்கிகளுக்கு அலையாமல் விண்ணப்பிப்பது எப்படி? 8 hours ago
news SBI வாடிக்கையாளர்களே அலார்ட்.. செப்டம்பர் 4 யூபிஐ சேவைகள் நிறுத்தப்படும்.. முழு விவரம் இதோ! 5 days ago
news ரூ.10-க்கு ஐஸ்கிரீம் சந்தையில் என்ட்ரி ஆகும் ரிலையன்ஸ்.. அமுல், குவாலிட்டி வால்ஸுக்குப் போட்டியாக களமிறங்கும் 'பாம்பே கிரீமரி'! 6 days ago
news செப்டம்பர் 15 முதல்... சர்க்கரையை 30 நாட்களுக்கு மேல் இருப்பு வைக்கத் தடை: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு! 02 Sep 2026
news உலகத்தின் Pure நெய் பட்டியலில் 6 வது இடத்தைப் பிடித்த அமுல்.. அதிகாரப்பூர்வ பட்டியலை வெளியிட்ட Tasteatles! 29 Aug 2026
news டாடா சன்ஸ் நிறுவனத்தின் அடுத்த தலைவர் யார்.. தீவிர தேடுதலில் டாடா குழுமம்.. 15 Aug 2026
news 1 பில்லியன் மதிப்பிலான 10 மற்றும் 20 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகளை விரைவில் புழக்கத்திற்கு வரும்.. RBI அனுமதி! 12 Aug 2026
news யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணமா.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்! 08 Aug 2026
news விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வரும்.. RBI கவர்னர் சொன்ன முக்கிய அப்டேட்! 06 Aug 2026
news ஸ்விக்கி, சொமேட்டோ சாம்ராஜ்யத்திற்கு சிக்கல்: உணவு டெலிவரி சந்தையில் குதிக்கிறது ஃபிளிப்கார்ட்.. அதுவும் பெங்களூரில்! 03 Aug 2026

பொது செய்திகள்

90 வயதில் 100% சம்பளம் ஓய்வூதியமா வேண்டும்.. 8வது ஊதியக் குழுவிடம் ஓய்வூதியதாரர்களின் அதிரடி கோரிக்கை!

Jun 09, 2026 09 Jun 2026 0 Views
8வது ஊதியக் குழுவிடம் ஓய்வூதியதாரர்கள் வச்ச அதிரடி டிமாண்ட் இதோ! 65 வயசுல கடைசிச் சம்பளத்துல 70%, அப்படியே படிப்படியா உயர்ந்து, 90 வயசைத் தொட்டா முழுசா 100% பென்ஷன் தரணும்னு சொல்லியிருக்காங்க. மெடிக்கல் செலவெல்லாம் எகிறுற இந்த காலத்துல, இது மட்டும் ஓகே ஆனா நம்ம ரிட்டயர்டு லைஃப் வேற லெவல்ல மாறும்!
8th pay pension
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியத்தை மாற்றி அமைப்பதற்காக 8வது ஊதியக் குழு (8th Pay Commission) அமைக்கப்பட்டுள்ளது. இதனால், சுமார் 50 லட்சம் அரசு ஊழியர்களும், 56 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
தற்போது ஓய்வூதியதாரர் அமைப்புகள், அரசுக்கு ஒரு புதிய மற்றும் சுவாரசியமான கோரிக்கையை முன்வைத்துள்ளன. "வயது அதிகரிக்க அதிகரிக்க, ஓய்வூதியத் தொகையையும் உயர்த்த வேண்டும்" என்பதுதான் அது.

வயது ஏற ஏற உயரும் ஓய்வூதியம்: புதிய திட்டம் என்ன?
வயதான காலத்தில் மருத்துவச் செலவுகளும், வாழ்க்கைச் செலவுகளும் கணிசமாக உயர்வதால், அதற்கு ஏற்ப ஓய்வூதியத்தை உயர்த்த வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. அதன்படி முன்மொழியப்பட்ட புதிய ஓய்வூதியப் பட்டியல் இதோ:

65 வயதில்: கடைசியாக வாங்கிய சம்பளத்தில் 70% ஓய்வூதியமாகத் தர வேண்டும்.
70 வயதில்: கடைசிச் சம்பளத்தில் 75%
75 வயதில்: கடைசிச் சம்பளத்தில் 80%
80 வயதில்: கடைசிச் சம்பளத்தில் 85%
85 வயதில்: கடைசிச் சம்பளத்தில் 90%
90 வயது மற்றும் அதற்கு மேல்: கடைசிச் சம்பளத்தில் முழுமையாக 100% தொகையையும் ஓய்வூதியமாக வழங்க வேண்டும்.

ஒரு ஊழியர் ஓய்வு பெறும்போது வாங்கிய கடைசிச் சம்பளம் ரூ. 50,000 என்று வைத்துக்கொள்வோம். அவர் 90 வயதை எட்டும்போது, அவருக்கு முழுமையாக ரூ. 50,000-மே ஓய்வூதியமாக கிடைக்க வேண்டும் என்பதுதான் இக்கோரிக்கையின் சுருக்கம்.

ஓய்வூதியதாரர்களின் மற்ற முக்கியக் கோரிக்கைகள் என்ன?
வயது சார்ந்த ஓய்வூதியம் மட்டுமின்றி, இன்னும் சில முக்கிய கோரிக்கைகளும் 8வது ஊதியக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன:

குறைந்தபட்ச ஓய்வூதியம் உயர்வு: குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகையை, கடைசிச் சம்பளத்தில் 67% ஆக உயர்த்த வேண்டும் (அல்லது கடைசி 10 மாதச் சம்பளத்தின் சராசரியாக இருக்க வேண்டும்).

ஃபிட்மென்ட் ஃபாக்டர் (Fitment Factor) மாற்றம்: ஓய்வூதியத்தைக் கணக்கிடப் பயன்படும் காரணியை (Fitment Factor) சாதகமாக மாற்றியமைக்க வேண்டும்.

அகவிலை நிவாரணம் (DR): விலைவாசி உயர்வுக்கு ஏற்ப வழங்கப்படும் அகவிலை நிவாரண முறையை, ஓய்வூதியதாரர்களுக்கு அதிகப் பலன் தரும் வகையில் மாற்றி அமைக்க வேண்டும்.

குடும்ப ஓய்வூதியம்: குடும்ப ஓய்வூதியப் பலன்களை (Family Pension) இன்னும் கூடுதலான நபர்களுக்குக் கிடைக்கும்படி விரிவுபடுத்த வேண்டும்.
இந்தக் கோரிக்கைகள் அனைத்தையும் 8வது ஊதியக் குழு தீவிரமாகப் பரிசீலித்து வருகிறது. இந்த பரிந்துரைகள் அனைத்தையும் அரசு அப்படியே ஏற்குமா என்பது இன்னும் உறுதியாகவில்லை என்றாலும், பாதுகாப்புத் துறை மற்றும் ரயில்வே ஊழியர்கள் உள்ளிட்ட லட்சக்கணக்கான ஓய்வூதியதாரர்களிடையே இது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.