நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news இந்திய ரயில்வேயில் 3,548 பணியிடங்கள்... விண்ணப்பிக்கும் எளிய முறைகள்..! Just now
news இந்தியாவில் அதிகரிக்கும் 3 ஆன்லைன் மோசடிகள் : பாதிக்கப்பட்ட 67 % பேருக்கு பணம் கிடைக்கவில்லையா ? ஆய்வு முடிவுகளால் அதிர்ச்சி 1 days ago
news டாலருக்கு எதிராக கலக்கும் ரூபாய்.. ஆர்பிஐ-யின் மாஸ்டர் பிளான் ஒர்க்அவுட்... கலக்கலான 5 காரணங்கள்! 1 days ago
news விமானம் போல குளியலறை ஹாட் ஷவருடன் 24 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ஸ்லீப்பர் வருது.. முழு விவரம் உள்ளே! 3 days ago
news ஹவுசிங் லோன் EMI ஏறப்போகுது! PNB, Bank of Baroda உட்பட 4 வங்கிகள் வட்டி உயர்த்தியதால் அதிர்ச்சியில் மக்கள்! 4 days ago
news பால், பெட்ரோல்-டீசலைத் தொடர்ந்து எகிறிய வெங்காய விலை.. மிடில் கிளாஸ் மக்களுக்குத்தான் அடிமேல் அடி! 6 days ago
news அடுத்தகட்ட மெகா வளர்ச்சிக்குத் தயாராகும் ஜியோ.. பங்குச்சந்தை அறிமுகம் குறித்து ஆகாஷ் அம்பானி பகிர்ந்த தகவல்! 09 Oct 2026
news யுபிஐ வணிகப் பரிவர்த்தனைக்கு கட்டணம் விதிக்கும் நடைமுறை : ஜனவரிக்கு தள்ளிப்போகிறதா? 08 Oct 2026
news அக்டோபர் 8ம் தேதி கூடும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம், உள்ளீட்டு வரி வரவு உள்ளிட்ட முக்கிய முடிவுகளை எடுக்க திட்டம் 07 Oct 2026
news RBI வெளியிட்ட புதிய ஃப்ளோட்டிங் ரேட் வட்டி விகிதம் : 1 லட்சம் முதலீடு செய்தால் எவ்வளவு வட்டி கிடைக்கும் ? கணக்கீடு 06 Oct 2026

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு

இந்திய ரயில்வேயில் 3,548 பணியிடங்கள்... விண்ணப்பிக்கும் எளிய முறைகள்..!

Oct 16, 2026 • Just now • 0 Views
இந்திய ரயில்வேயில் பட்டதாரிகளுக்கான 3,548 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. NTPC Graduate பிரிவில் இடம்பெறும் இந்த வேலைவாய்ப்புகளுக்கு மாத அடிப்படைச் சம்பளம் ₹29,200 முதல் ₹35,400 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பிக்க நவம்பர் 6, 2026 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தக் காலியிடங்களில் சரக்கு ரயில் மேலாளர் பணிக்கு 2,750 இடங்கள் உள்ளன.
மூத்த எழுத்தர் மற்றும் தட்டச்சுப் பணிக்கு 371 இடங்களும்,
இளநிலை கணக்கு உதவியாளர் பணிக்கு 300 இடங்களும்,
தலைமை வணிக மற்றும் பயணச்சீட்டு மேற்பார்வையாளர் பணிக்கு 127 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 2027 ஜனவரி 1-ம் தேதியின்படி வயது 18 முதல் 33 வரை இருக்க வேண்டும். தகுதியுள்ள பிரிவினருக்கு விதிகளின்படி வயது தளர்வு வழங்கப்படும்.

ஒவ்வொரு பணிக்குமான கல்வி மற்றும் மருத்துவத் தகுதிகளை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் சரிபார்க்க வேண்டும். விண்ணப்பிக்கும் முன்பு ஆதார் அட்டையில் உள்ள பெயர், பிறந்த தேதி ஆகியவை பத்தாம் வகுப்புச் சான்றிதழுடன் பொருந்துகிறதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

தேவையான கல்விச் சான்றிதழ்கள், புகைப்படம், கையொப்பம் உள்ளிட்டவற்றைத் தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். rrbapply.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

கட்டணம் செலுத்த நவம்பர் 8-ம் தேதி கடைசி நாளாகவும், விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய நவம்பர் 9 முதல் 18 வரை கால அவகாசமும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட கணினித் தேர்வுகள், சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவப் பரிசோதனை ஆகியவற்றின் அடிப்படையில் தேர்வு நடைபெறும்.

மூத்த எழுத்தர் மற்றும் இளநிலை கணக்கு உதவியாளர் பணிகளுக்கான தட்டச்சுத் திறன் தேர்வு தொடர்பான நிபந்தனைகளையும் சரிபார்க்க வேண்டும்.

முழுமையான விதிகள் மற்றும் அடுத்தடுத்த அறிவிப்புகளுக்கு rrb.indianrailways.gov.in இணையதளத்தைப் பார்க்கலாம்.