தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தகுதியுள்ள ரேஷன் அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கான பணிகளைத் தமிழ்நாடு அரசு தீவிரப்படுத்தியுள்ளது. கூட்ட நெரிசலைத் தவிர்க்கவும், விநியோகத்தை முறைப்படுத்தவும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.
வீடு தேடி வரும் டோக்கன் மற்றும் நேரக் கட்டுப்பாடு
ரேஷன் கடை ஊழியர்கள் அட்டைதாரர்களின் வீடுகளுக்கே நேரடியாகச் சென்று டோக்கன்களை வழங்க வேண்டும். இந்த டோக்கன்களில் பரிசுத் தொகுப்பு பெற்றுக்கொள்ள வேண்டிய நாள் மற்றும் நேரம் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். ஜனவரி 2-ம் தேதிக்குள் அனைத்து மண்டலங்களிலும் டோக்கன்களை அச்சிட்டு விநியோகத்திற்குத் தயாராக வைத்திருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒரு நாளைக்கு 400 பேருக்கு மட்டுமே விநியோகம்
ரேஷன் கடைகளில் கூட்டம் சேருவதைத் தவிர்க்க, முதல் நாளில் 200 பேருக்கும், இரண்டாம் நாள் முதல் நாளொன்றுக்கு மொத்தம் 400 பேருக்கும் (காலையில் 200, பிற்பகலில் 200) விநியோகம் செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள சுமார் 2.2 கோடி ரேஷன் கார்டுகளில், அரிசி குடும்ப அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டுமே இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். ரொக்கப்பணம் எவ்வளவு என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதலமைச்சர் விரைவில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொங்கல் பரிசுத் தொகுப்பு: வீடு தேடி வரும் டோக்கன்! ரேஷன் கடைகளுக்கு புதிய உத்தரவு!


