இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தியாளரான மாருதி சுசுகி நிறுவனம், தனது பிரபலமான மாடலான கிராண்ட் விட்டாரா (Grand Vitara) கார்களில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, மொத்தம் 39,506 வாகனங்களைத் திரும்பப் பெறுவதாக (Recall) அறிவித்துள்ளது.
காரணம்
2024 டிசம்பர் 9 ஆம் தேதி முதல் 2025 ஏப்ரல் 9 ஆம் தேதி வரை தயாரிக்கப்பட்ட கிராண்ட் விட்டாரா கார்களில் சிலவற்றில் வேகமானி அசெம்பிளியில் (ஸ்பீடாமீட்டர்) இருக்கும் எரிபொருள் நிலை காட்டி மற்றும் எச்சரிக்கை விளக்கு ஆகியவை சரியாக இயங்காமல் இருப்பதாக கண்டறியப்பட்டது.
துல்லியான எரிபொருள் அளவு தெரியாததால், வாடிக்கையாளருக்கு வரும் சிக்கல்களைத் தவிர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே விற்கப்பட்ட கார்களின் உரிமையாளர்களுக்கு, மாருதி சுசுகி அங்கீகரிக்கப்பட்ட டீலர் மையங்களில் இருந்து இலவசமாக ஆய்வு செய்து, பழுதடைந்த பகுதியை மாற்றுவதற்கான தகவல் கிடைக்கும்.


