13,000 பேரை பணிநீக்கம் செய்த Verizon: “உழைப்பை யாரும் எடுத்துவிட முடியாது” – முன்னாள் CEO எழுதிய உருக்கமான கடிதம்!

உலகளாவிய தொலைத்தொடர்பு நிறுவனமான வரிசோன் (Verizon) தனது வரலாற்றிலேயே மிக அதிகமான பணிநீக்கம் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. இதில் சுமார் 13,000-க்கும் அதிகமான ஊழியர்கள் (மொத்த ஊழியர்களில் 13%) வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இந்த துயரச் சூழலுக்கு மத்தியில், இந்நிறுவனத்தின் முன்னாள் உயர் அதிகாரியான தாமி எர்வின் (Tami Erwin), லிங்க்ட்இன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட உணர்ச்சிப்பூர்வமான கடிதத்தால் உலகளவில் கவனம் ஈர்த்துள்ளனர்.ஊழியர்களின் வலியைப் புரிந்துகொண்ட தலைவர்தாமி எர்வின் பற்றி: இவர் வரிசோன் நிறுவனத்தில் 35 ஆண்டுகள் பணியாற்றி, தலைமைச் செயல் அதிகாரி (CEO) பதவி வரை உயர்ந்தவர். 2022-இல் நிறுவனத்தை விட்டு வெளியேறினார்.
கடிதத்தின் சாரம்: பணியிழப்புச் செய்தியைக் கேட்டதும் ஆழமாக பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ள தாமி எர்வின், “இந்தச் செய்திகளுக்குப் பின்னால் உள்ள மனிதர்களைப் பற்றி நான் யோசிக்கிறேன்” என்று கூறினார்.
ஆறுதல்: வேலை இழந்தவர்களுக்கு அவர் ஆறுதல் கூறி, “நீங்கள் துயரப்பட உங்களுக்கு அவகாசம் கொடுங்கள். ஒரு வேலை என்பது உங்களின் அடையாளம், உங்களின் உறவுகள், உங்களின் பெருமை. அதை இழப்பது மிகவும் தனிப்பட்ட விஷயமாகும்” என்று உணர்வுபூர்வமாகத் தெரிவித்தார்.மனிதாபிமானம் குறித்த விமர்சனம்வரிசோன் நிறுவனம் போட்டியாளர்களைச் சமாளிக்க முடியாமல் வாடிக்கையாளர்களை இழந்து வருவதால், புதிய தலைமைச் செயல் அதிகாரி அதிரடி மாற்றங்களைச் செய்து வருகிறார். வெளியேறும் ஊழியர்களுக்கு உதவுவதற்காக 20 மில்லியன் டாலர் மறுபயிற்சி நிதியையும் நிறுவனம் அறிவித்துள்ளது.ஆனால், தாமி எர்வின் தனது கடிதத்தில், “தொழில்நுட்ப மாற்றம் அவசியம்தான். ஆனால், மனிதாபிமானம் இல்லாமல் செய்யப்படும் எந்த மாற்றமும் சிறந்த தலைமை பண்பு அல்ல,” என்று வெளிப்படையாக விமர்சித்துள்ளார்.வெற்றிக்கு ஊக்கமளிக்கும் வார்த்தைகள்”தொழில்நுட்பம் ஒரு நிறுவனத்தை மாற்றுவதாக இல்லை. மனிதர்கள்தான் அதைச் செய்கிறார்கள்” என்று வலியுறுத்திய அவர், நிறுவனத் தலைவர்கள் வெறும் கணினி அமைப்புகளை மட்டும் நவீனமயமாக்கக் கூடாது; அவர்கள் செயல்முறைகள், தகவல் பரிமாற்றம் மற்றும் பொறுப்புக் கூறல் ஆகியவற்றையும் நவீனமயமாக்க வேண்டும் என்று கூறினார்.இறுதியாக, பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு உத்வேகம் அளிக்க, “உங்கள் வரிசோன் அனுபவம் வீண் போகாது. அது உங்களுக்குப் பல புதிய கதவுகளைத் திறக்கும். உங்கள் தலையை நிமிர்ந்து வைத்துக் கொள்ளுங்கள். உங்களால் ஏற்படுத்தப்பட்ட தாக்கத்தை யாரும் எடுத்துவிட முடியாது.”உங்கள் கதை முடிவடையவில்லை. அது பரிணாமம் அடைந்து வருகிறது,” என்று வாழ்த்தி, அவர்கள் அடுத்த கட்ட வெற்றிக்குத் தயாராக வேண்டும் என்று கூறியுள்ளார்.