
“பண நோட்டுகள் போலி – தங்கம், வெள்ளி மற்றும் பிட்காயின் முதலீடுகளை செய்யுங்கள்!” – ராபர்ட் கியோசாகி
உலகப் புகழ்பெற்ற நிதி கல்வியாளர் மற்றும் ‘Rich Dad Poor Dad’ என்ற புத்தகத்தின் எழுத்தாளரான ராபர்ட் கியோசாகி, சமீபத்தில் உலக நிதி முறையை எதிர்த்துத் தன்னுடைய விமர்சனங்களைத் தெரிவித்து, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அவர் தனது சமீபத்திய அறிக்கையிலும் சமூக வலைதளப் பதிவுகளிலும், “பாரம்பரிய நாணயங்கள் போலியானவை” என கூறி, பொதுமக்கள் பிட்ட்காயின், தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
“Fiat Currencies are fake money” (பாரம்பரிய நாணயங்கள் போலி பணம்), என்று அவர் நேரடியாகக் கூறியதோடு, மத்திய வங்கிகள் தொடர்ந்து பணம் அச்சடிப்பது, பணத்தின் மதிப்பை குறைக்கும் நடவடிக்கையாக உள்ளது என்றும் அவர் விமர்சித்துள்ளார். இந்த சூழ்நிலையில், மக்களுக்கு உண்மையான மதிப்பு கொண்ட டிஜிட்டல் சொத்துகள் மற்றும் பூமியில் கிடைக்கும் இயற்கை மதிப்புகளில்தான் பாதுகாப்பு இருப்பதாக அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ராபர்ட் கியோசாகி ஏற்கனவே பிட்காயின் குறித்து பலமுறை வலியுறுத்தியுள்ளார். கடந்த வருடம் பிட்ட்காயினின் விலை குறைந்த போதும், அதை “வசதியான வாங்கும் சந்தர்ப்பம்” என கூறியிருந்தார். தற்போதைய சர்வதேச நிதி நிலைமை, வட்டி விகித உயர்வுகள், நிலையான பணவீக்கம் போன்றவை பாரம்பரிய நாணயங்களில் நம்பிக்கையை குறைத்து, கிரிப்டோகரன்சி மற்றும் விலையுயர்ந்த உலோகம் போன்ற சொத்துகளுக்கு ஆதரவாக செல்லும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
அத்துடன், அவர் தெரிவித்ததாவது: “நீங்கள் பணம் சேமிக்கிறீர்கள் என்றால், நீங்கள் பணவீக்கத்தில் தேய்ந்து கொண்டிருப்பவர்தான். பதிலாக, பிட்ட்காயின், தங்கம், வெள்ளி போன்ற மதிப்புள்ள சொத்துகளில் முதலீடு செய்வது தான் நியாயமான முடிவு,” என தனது பார்வையை தெளிவாக கூறியுள்ளார்.
இந்த உரையாடல், உலகில் நிலவும் நிதி மாற்ற நிலைகளைப் பற்றியும், கிரிப்டோகரன்சி மீதான அதிகரிக்கும் நம்பிக்கையைப்பற்றியும் சிந்திக்க வைக்கும். கார்ப்பரேட் முதலீட்டாளர்கள், இளைஞர்கள் மற்றும் நிதி துறையில் ஆர்வமுள்ளவர்கள், ராபர்ட் கியோசாகியின் கருத்துகளை புதிய பார்வையுடன் கவனிக்கத் தொடங்கியுள்ளனர். அவரது இந்த கூற்று, பாரம்பரிய நாணயங்களை மாறுதலுக்கு உட்படுத்தும் ஒரு முக்கிய கட்டமாக பார்க்கப்படுகிறது.