பிட்காயின் – பொக்கிஷமா? மாயையா? – திரு. ஸ்ரீராம் நாராயணன்

தற்போது அதிக லாபத்தை கொடுத்துக் கொண்டிருக்கும் சிறந்த முதலீடாக மக்களிடையே பரவலாக பேசப்படுகிறது பிட்காயின் முதலீடுகள். அது சரியானது தானா? ஒரு நிலையான முதலீட்டாளரின் பார்வையில் பிட்காயின் எந்த இடத்தை தக்க வைத்திருக்கிறது? பிட்காயினில் தொடர்ந்து முதலீடு செய்யலாமா? என்பதற்கு சாமானிய முதலீட்டாளராக  தனது கருத்தை பதிவு செய்து இருக்கிறார் திரு. ஸ்ரீராம் நாராயணன் அவர்கள். அவர் தனது கருத்தை பதிந்திருப்பதாவது…

பிட்காயின் இப்போது ஒரு கோடி ரூபாயை தாண்டி பறக்கிறது! ஒரு காலத்தில் ₹1 லட்சம் மட்டுமே இருந்த நிலையில் முதலீடு செய்ய மறுத்தேன். இன்று அதனை நோக்கி விலையேற்றத்தைப் பார்க்கும் போது — “நூறு மடங்கு லாபம் கிடைத்திருக்கலாம்!” என்ற எண்ணம் தோன்றும். ஆனாலும், எனக்கு வருத்தம் இல்லை. ஏனென்றால் க்ரிப்டோகரன்சிகளின் அடிப்படை மீதான என் மதிப்பீடு அப்போதும் மாறவில்லை, இப்போதும் மாறவில்லை.

பணம் பெருக்கும் வழிகள் என்று இரண்டு உண்டு.

1. கடன் கொடுத்து வட்டி ஈட்டுவது – உறுதியான வருமானம்.


2. முதலீடு – எதிர்கால வளர்ச்சியை நோக்கிய நிதி எதிர்பார்ப்பு .


பங்குச் சந்தை முதலீடு:
பங்குகளைப் பார்த்து முதலீடு செய்வதற்கு பல பகுப்பாய்வுகள் உள்ளன – துறையின் வளர்ச்சி, நிறுவனத்தின் நிதி நிலை, Market Trends, Management Quality, Technical & Fundamental Analysis போன்றவை.
மியூச்சுவல் ஃபண்டுகளும் இப்படியே – ஃபண்டின் வரலாறு, ஃபண்ட் மேனேஜரின் திறன், உள்ள நிறுவனங்களின் தன்மை போன்றவற்றை வைத்து முடிவு செய்யலாம்.

உதாரணமாக டாடா மோட்டார்ஸ் – வலுவான சொத்துகள், நம்பிக்கைக்குரிய வரலாறு, எதிர்கால கார்களுக்கான தேவையின் அடிப்படையில் வளர்ச்சி சாத்தியங்கள்.

அதே கணக்கில் பிட்காயின்?
• எந்த அடிப்படையும் இல்லை
• Intrinsic Value இல்லை
• நடைமுறை பயன்பாடுகள் இல்லை
• Regulatory acceptance இல்லை
• ஒரு எதிர்பார்ப்பு: “விலை ஏறும்!”

இதை நாம் Tulip Mania வுடன் ஒப்பிட்டு பார்க்கலாம் – ஒரு வேளையில் எல்லாம் சரியென நினைத்து நுழைந்தவர்கள் பின்னர் முதலீட்டில் பேரழிவை சந்தித்தனர்.

தங்கம் – சரியானதாக இருக்குமா?
தங்கம் பல்லாயிரம் ஆண்டுகளாக மதிப்பிடப்பட்ட மதிப்புமிக்க உலோகம். அரசுகளும், தனிநபர்களும் தங்கத்தை சேமித்து வைத்திருப்பது அதன் நிலைத்த மதிப்பின் அறிகுறி.

டாலர் – எவ்வாறு ஏற்றுக் கொள்ளலாம்?
இதேமாதிரி அமெரிக்கா, அதன் Dollar Dominance ஐ பாதுகாக்கும் வகையில், எதிர்ப்பை ஏற்படுத்தும் எந்த முயற்சியும் கடுமையாக எதிர்கொள்கிறது.

இப்போது பிட்காயின் – ஆதரிக்கக்கூடியவா?
அது Anonymity வழங்கும் கருவி. யார் யாருக்கு பணம் அனுப்புகிறார்கள் என்ற தகவல் எதுவும் தெளிவாக தெரியாது. சட்டபூர்வ வெளிக்குள் இதை கொண்டுவருவது மிகவும் கடினம்.
மேலும், பிட்காயின் இன்று ஒரு Speculative Asset மட்டுமே – உண்மையான முதலீடு அல்ல.

வாரன் பஃபெட் சொல்வது என்ன ?
“அசலை இழக்காதே” என்பதுதான் முதலீட்டாளர்களுக்கான முதன்மை விதி. பிட்காயின் மீது அவர் நம்பிக்கை வைக்கவில்லை என்பதும், எனக்கு முக்கியமான அறிவுரை.

எனது முடிவு:
நான் ஒரு Conservative முதலீட்டாளர். எனது Risk Appetite, Investment Strategy, Financial Goals அனைத்தையும் கொண்டு பார்க்கையில், பிட்காயின் இன்று எனக்கு பொருத்தமான முதலீடு இல்லை.
ஆனால் உங்கள் பார்வையும், உங்கள் தேவையும் வேறாக இருக்கலாம்.
நாளை என் கருத்தும் மாறலாம், உங்கள் கருதும் கோணமும் மாறலாம்.
அதுவரை… நீங்கள் பிட்காயின் முதலீட்டாளராக இருந்தால், உங்கள் முதலீடு பாதையில் சிறக்க வாழ்த்துகள்!