பிட்காயின் வரலாற்றில் பெரும் அதிர்ச்சியாக சதோஷி காலத்தைய வாலெட்டில் இருந்து சுமார் $9 பில்லியன் மதிப்புள்ள 80,000 பிட்காயின்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது பிட்காயின் முதலீட்டாளர்களிடையே பேரதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. இது டிஜிட்டல் முதலீட்டாளர் உலகில் பெரும் கலக்கத்தை உருவாக்கியுள்ளது.
மிக முக்கியமான செய்தியாக, பிட்காயின் வரலாற்றில் “சதோஷி-கால” வாலெட்டில் இருந்து 80,000 பிட்காயின்கள் இன்று விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மொத்த மதிப்பு $9 பில்லியனுக்கு மேல் (இந்திய ரூபாயில் 75,000 கோடிக்கு மேல்!) ஆகும். இந்த விற்பனை காரணமாக பிட்காயின் விலையில் திடீரென வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இந்த தகவலை இன்று வெளியிட்ட Galaxy Digital நிறுவனம், இது ஒரு “சதோஷி கால முதலீட்டாளரின்” வெளியேற்றம் என உறுதிப்படுத்தியுள்ளது. இது டிஜிட்டல் நாணய உலகில் நடந்த மிகவும் பழமையான, முக்கியமான முதலீட்டின் முழுமையான வெளியேற்றமாக பார்க்கப்படுகிறது.
எதைக் குறிப்பிடுகிறது இது?
இந்த வாலெட்டின் செயல்பாடு பிட்காயின் உருவாக்கப்பட்ட ஆரம்ப காலமான 2009-2011 இடையே பதிவு செய்யப்பட்டது.
ஒரு காலத்தில் எந்தவித இயக்கமும் இல்லாமல் தூங்கிக்கொண்டிருந்த இந்த வாலெட், இப்போது மிகப்பெரிய அளவில் மூலதனத்தை நகர்த்தியுள்ளது.
இதன் விளைவுகள்:
• பிட்காயின் விலையில் கடுமையான இறக்கம்
• முதலீட்டாளர்களிடம் கலக்கம் மற்றும் சந்தை பரபரப்பு
• டிஜிட்டல் நாணயங்களில் நம்பிக்கையின் தாக்கம்
Galaxy Digital நிர்வாகம் இதனைப் பற்றி தெரிவித்த கருத்து,
“இது உலகம் முழுவதும் டிஜிட்டல் சொத்துகளில் முதலீடு செய்தவர்களுக்கான மிக முக்கியமான திருப்புமுனையாக இருக்கலாம். இந்த வகை வெளியேற்றம் இன்னும் பல முதலீட்டாளர்கள் வெளியேறும் வாய்ப்பை உருவாக்கும்.”
சதோஷி நகமோட்டோவின் நேரடி தொடர்புடைய வாலெட்டா? அல்லது ஆரம்ப கால கோ-டெவலப்பர் ஒருவரா? என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால் அதன் தாக்கம், உலக சந்தையை குலுக்கி விட்டது என சொல்லலாம்.
பிட்காயின் வரலாற்றில் அதிர்ச்சி: சதோஷி கால வாலெட்டில் $9 பில்லியன் காயின் விற்பனை!
