பங்குச் சந்தையில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் (FIIs) எப்போதுமே லாபகரமான பங்குகளைத் துல்லியமாகத் தேர்ந்தெடுப்பதில் வல்லவர்கள். 2025-ஆம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக ₹1.61 லட்சம் கோடி மதிப்புள்ள பங்குகளை விற்று வெளியேறினாலும், குறிப்பிட்ட சில பங்குகளில் தொடர்ந்து முதலீடு செய்துள்ளனர். கடந்த மூன்று காலாண்டுகளாக அவர்கள் அமைதியாகச் சேர்த்த 12 பங்குகளில், 7 பங்குகள் மல்டிபேக்கராக மாறி முதலீட்டாளர்களுக்கு அபரிமிதமான லாபத்தை வழங்கியுள்ளன.
3,600% வரை உயர்ந்து மிரள வைத்த பங்குகள்
இந்தத் பட்டியலில் மிட்வெஸ்ட் கோல்ட் நிறுவனம் 3,658% உயர்ந்து ₹4,193 என்ற உச்சத்தை எட்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து A1 Acid பங்கு 338% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் 173% உயர்ந்து ₹17,768 என்ற விலையைத் தொட்டுள்ளது. அரிசி ஏற்றுமதி நிறுவனமான ஜி.ஆர்.எம் ஓவர்சீஸ் 132% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள நிலையில், எல்&டி பைனான்ஸ் பங்கானது நடப்பு ஆண்டில் 122% அதிகரித்து ₹300 என்ற விலையை எட்டியுள்ளது.
பாதுகாப்பு மற்றும் நுகர்வோர் துறையில் லாப மழை
பாதுகாப்புத் துறை சார்ந்த அப்பல்லோ மைக்ரோசிஸ்டம்ஸ் 106% உயர்வையும், ஆக்சிஸ்கேட்ஸ் டெக்னாலஜிஸ் 109% ஏற்றத்தையும் கண்டுள்ளன. இந்த 7 மல்டிபேக்கர் பங்குகளைத் தவிர, கார் டிரேட் டெக் (85%), நவீன் ப்ளூரைன் (80%), டைமெக்ஸ் குரூப் (80%), மற்றும் தமிழகத்தின் தங்கமயில் ஜுவல்லரி (75%) போன்ற பங்குகளும் முதலீட்டாளர்களுக்குச் சிறப்பான லாபத்தை வாரி வழங்கியுள்ளன.
FII-கள் சந்தையில் பெரிய அளவில் பங்குகளை விற்பனை செய்தாலும், வலுவான பிசினஸ் மாடல் கொண்ட நிறுவனங்களைத் தொடர்ந்து ஆதரிக்கின்றனர். 2024 டிசம்பரில் முதலீடே இல்லாமல் இருந்த பல பங்குகளில், 2025-க்குள் அவர்கள் 6% முதல் 10% வரை பங்குகளை உயர்த்தியுள்ளனர். இந்த ‘சைலண்ட் ஸ்ட்ராடஜி’யைப் பின்பற்றி முதலீடு செய்தவர்களுக்கு 2025-ஆம் ஆண்டு ஜாக்பாட் ஆண்டாக அமைந்துள்ளது.
FII-களின் 7 லக்கி பங்குகள்: 2025-ல் பெரும் லாபம் கொடுத்த மல்டிபேக்கர் பங்குகள்!


