நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news வங்கிப் பணிகள் முடங்கப் போகுதா? செப். 28 முதல் 30 வரை SBI வங்கிக்கு லீவு.. உங்கள் வேலைகளை சீக்கிரமா முடிங்க! 8 mins ago
news வங்கி எஃப்டி-யை மிஞ்சும் தபால் அலுவலக திட்டம்! 7.5% வட்டி, வரி விலக்குனு லாபம் அள்ளும் முதலீட்டாளர்கள்! 2 days ago
news ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 100% வரி விதிப்பு... அமெரிக்காவில் மசோதா நிறைவேற்றம்! 3 days ago
news Gen Z இளைஞர்கள் கவனத்திற்கு : ஹோம் லோன் எடுப்பதற்கு முன் இந்த ஐந்து விஷயங்களை மறந்துடாதீங்க 5 days ago
news யுபிஐ, இன்டர்நெட் இல்லாமலேயே பணம் அனுப்பலாம்... புதிய வசதியை அறிமுகம் செய்த ரிசர்வ் வங்கி! 11 Sep 2026
news Bank Strike | நாடு முழுவதும் நாளை வங்கிகள் செயல்படுமா..? ஊழியர் சங்கங்கள் சொல்வது என்ன? 10 Sep 2026
news பிசினஸ் தொடங்க கடன் வேணுமா? 16 அரசுத் திட்டங்கள்.. ஒரே தளம்.. வங்கிகளுக்கு அலையாமல் விண்ணப்பிப்பது எப்படி? 09 Sep 2026
news SBI வாடிக்கையாளர்களே அலார்ட்.. செப்டம்பர் 4 யூபிஐ சேவைகள் நிறுத்தப்படும்.. முழு விவரம் இதோ! 04 Sep 2026
news ரூ.10-க்கு ஐஸ்கிரீம் சந்தையில் என்ட்ரி ஆகும் ரிலையன்ஸ்.. அமுல், குவாலிட்டி வால்ஸுக்குப் போட்டியாக களமிறங்கும் 'பாம்பே கிரீமரி'! 03 Sep 2026
news செப்டம்பர் 15 முதல்... சர்க்கரையை 30 நாட்களுக்கு மேல் இருப்பு வைக்கத் தடை: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு! 02 Sep 2026

பொருளாதாரம்

அதிகரிக்கும் பெட்ரோல் தட்டுப்பாடு: இலவச பேருந்துகளை அறிவித்த ஆஸ்திரேலியா!!

Apr 01, 2026 01 Apr 2026 0 Views
ஈரான் போர் உலகம் முழுவதுமே கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டை அதிகப்படுத்தி இருக்கிறது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளிலும் கடுமையான பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு நிலவகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை மத்திய அரசு மாற்று ஆதாரங்கள் மூலமாக கச்சா எண்ணெய் கொள்முதல் செய்துகிறது.

இந்தியாவில் தற்போது பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை, எனர்ஜி லாக்டவுன் போன்ற சூழலோ இல்லை. ஆனால் அண்டை நாடுகளின் நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. பாகிஸ்தான் , இலங்கை ஆகிய நாடுகளில் எல்லாம் பெட்ரோல் மற்றும் டீசல் விலை பெருமளவு உயர்வு கண்டிருக்கிறது. பிலிப்பைன்ஸில் எனர்ஜி லாக்டவுன் அறிவிக்கப்பட்டு விட்டது.

இந்த சூழலில் ஆஸ்திரேலியாவும் இந்த பட்டியலில் இணைந்திருக்கிறது. ஆஸ்திரேலியாவில் தற்போது கடுமையான பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை பல மடங்கு உயர்ந்திருக்கிறது. இதனால் ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே ஆஸ்திரேலியாவில், விக்டோரியா மற்றும் தாஸ்மானியா ஆகிய மாநிலங்களில் பொதுமக்களுக்கு இலவச பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

விக்டோரியா மாநிலத்தில் ஒரு மாத காலத்திற்கு மக்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம். தாஸ்மானியாவில் ஜூலை 1ஆம் தேதி வரை மக்கள் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் இலவசம் என்பதால் மக்கள் தனிப்பட்ட வாகனங்களை பயன்படுத்துவதையோ இதற்காக பெட்ரோல் டீசல் வாங்குவதையோ குறைத்துக் கொள்வார்கள், இதனால் எரிபொருள் சேமிக்கப்படும் இருக்கக்கூடிய குறைந்த அளவு இருப்பினை சாமர்த்தியமாக பயன்படுத்தும் வகையில் இந்த இரண்டு மாநிலங்களிலும் இப்படி ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.

இது தவிர ஆஸ்திரேலியாவின் பல்வேறு மாநிலங்களிலும் இதே நிலைமைதான் நீடிக்கிறது. பெட்ரோல், டீசல் கிடைக்காமல் பல்வேறு மக்களும் தவித்து வருகின்றனர். பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவதால் பணவீக்கம் அதிகரித்து வருவதாக ஆஸ்திரேலிய மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்திருக்கிறது. மேற்காசிய போர் முடிவுக்கு வந்து எண்ணெய் விநியோகம் சீரடைந்தால் மட்டுமே இந்த நிலைமை சரியாகும் என ஆஸ்திரேலிய மத்திய வங்கி கூறி இருக்கிறது. மேலும் பல்வேறு பொருட்களின் விலைவாசி உயரும் என்ற எச்சரிக்கையும் எடுத்திருக்கிறது. இதற்கிடையே ஆஸ்திரேலிய அரசு தனியார் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் இருந்து பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருளை வாங்குவதற்கான விதிகளை தளர்த்தி இருக்கிறது.

ஈரான் நாட்டு போர் காரணமாக ஹார்முஸ் ஜலசந்தியில் எண்ணெய் கப்பல்கள் அனுமதிக்கப்படவில்லை. எனவே வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வந்த நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.