நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news டாடா சன்ஸ் நிறுவனத்தின் அடுத்த தலைவர் யார்.. தீவிர தேடுதலில் டாடா குழுமம்.. 15 Aug 2026
news 1 பில்லியன் மதிப்பிலான 10 மற்றும் 20 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகளை விரைவில் புழக்கத்திற்கு வரும்.. RBI அனுமதி! 12 Aug 2026
news யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணமா.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்! 08 Aug 2026
news விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வரும்.. RBI கவர்னர் சொன்ன முக்கிய அப்டேட்! 06 Aug 2026
news ஸ்விக்கி, சொமேட்டோ சாம்ராஜ்யத்திற்கு சிக்கல்: உணவு டெலிவரி சந்தையில் குதிக்கிறது ஃபிளிப்கார்ட்.. அதுவும் பெங்களூரில்! 03 Aug 2026
news நம் பணத்தை சேமிப்பதற்கான 3 அக்கவுண்ட் ஃபார்முலா பற்றிய விளக்கம் 31 Jul 2026
news ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்.. ஆதார் கார்டு ரயில் டிக்கெட் விலை எல்லாம் மாறப்போகுது.. நோட் பண்ணுங்க! 28 Jul 2026
news ஆகஸ்ட் மாதம் SBI, HDFC உள்ளிட்ட அனைத்து வங்கிகளும் 14 நாட்கள் செயல்படாது.. RBI வங்கி விடுமுறை அறிவிப்பு விவரங்கள் இதோ! 27 Jul 2026
news Tomato Price | வரத்து குறைவால் தக்காளி விலை கடும் சரிவு.. ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா..? 25 Jul 2026
news UBERல் 10 % ஊழியர்கள் பணிநீக்கம் :இந்திய IT -BPO துறைக்கான மாற்றங்களும் எச்சரிக்கையும் 24 Jul 2026

பொருளாதாரம்

July New Rules | எல்பிஜி சிலிண்டர் முதல் ஆதார் அப்டேட் வரை.. ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் புதிய ரூல்ஸ்.. அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!

Jun 25, 2026 25 Jun 2026 0 Views
ஜூலை மாதம் தொடங்குவதுடன், பொதுமக்களின் அன்றாட செலவையும் நிதி திட்டமிடலையும் பாதிக்கும் பல முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன.

ஒவ்வொரு மாதத் தொடக்கத்திலும் சில முக்கிய நிதி மற்றும் நிர்வாக விதிமுறைகள் மாற்றம் அடைவது வழக்கம். மேலும், ஜூலை 1 முதல் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையையும் செலவுத் திட்டத்தையும் பாதிக்கக்கூடிய பல மாற்றங்கள் அமலுக்கு வர உள்ளன. ஆதார் புதுப்பிப்பு முதல் எரிவாயு விலை வரை பல துறைகளில் இந்த மாற்றங்கள் எதிரொலிக்கவுள்ளன.

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), மின்னஞ்சல் முகவரி புதுப்பிப்புக்காக வசூலிக்கப்பட்டு வந்த கட்டணத்தை தற்காலிகமாக ரத்து செய்வதாகவும், இலவசமாக மின்னஞ்சல் புதுப்பிக்கும் சேவை ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. குறிப்பாக இலவசமாக மின்னஞ்சல் முகவரியை புதுப்பிக்கும் சேவை அடுத்த 6 மாதங்கள் வரை தொடரும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆதார் அட்டைதாரர்கள் சேவை மையங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமின்றி, வீட்டிலிருந்தபடியே தங்களது மொபைல் போன் மூலம் மின்னஞ்சல் முகவரியை எளிதாகப் புதுப்பித்துக் கொள்ளலாம்.

சர்வதேச சந்தை நிலவரத்தின் அடிப்படையில் ஜூலை 1 முதல் வணிக எரிவாயு, இயற்கை எரிவாயு மற்றும் விமான எரிபொருள் விலைகளிலும் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சாமானிய மக்கள் சிக்கலை சந்திக்க நேரிடலாம். ஏற்கனவே போர் பதற்றத்தால் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை தாறுமாறாக உயர்ந்து வரும் நிலையில் ஜூலை மாதம் வரும் மாற்றம் மக்களிடையே அதிர்ச்சியை கிளப்பலாம்.

ஜூலை முதல் சில வங்கி கிரெடிட் கார்டுகளுக்கான சலுகை விதிமுறைகளும் மாற்றப்படுகின்றன. குறிப்பிட்ட அளவு செலவினை மேற்கொண்ட வாடிக்கையாளர்களுக்கே சில சிறப்பு பயண வசதிகள் தொடரும். இதனால், கிரெடிட் கார்டைப் பயன்படுத்துபவர்கள் புதிய விதிகளை முன்கூட்டியே தெரிந்துகொள்வது முக்கியமாகும்.

ஜூலை மாத வாரந்திர விடுமுறைகள் மற்றும் மாநில வாரியான பண்டிகைகள் காரணமாக பல நாட்கள் வங்கிகள் இயங்காது. எனவே பணப் பரிவர்த்தனை, காசோலை, வங்கி சேவைகள் போன்றவற்றை முன்கூட்டியே திட்டமிடுவது அவசியம். ஜூலை 1 முதல் அமலாகும் இந்த மாற்றங்கள், பொதுமக்களின் அன்றாட நிதி நடவடிக்கைகளால் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவை என்பதால், முன்கூட்டியே தெரிந்துகொண்டு செயல்படுவது புத்திசாலித்தனமான முடிவாக இருக்கும்.