நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news டாடா சன்ஸ் நிறுவனத்தின் அடுத்த தலைவர் யார்.. தீவிர தேடுதலில் டாடா குழுமம்.. 15 Aug 2026
news 1 பில்லியன் மதிப்பிலான 10 மற்றும் 20 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகளை விரைவில் புழக்கத்திற்கு வரும்.. RBI அனுமதி! 12 Aug 2026
news யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணமா.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்! 08 Aug 2026
news விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வரும்.. RBI கவர்னர் சொன்ன முக்கிய அப்டேட்! 06 Aug 2026
news ஸ்விக்கி, சொமேட்டோ சாம்ராஜ்யத்திற்கு சிக்கல்: உணவு டெலிவரி சந்தையில் குதிக்கிறது ஃபிளிப்கார்ட்.. அதுவும் பெங்களூரில்! 03 Aug 2026
news நம் பணத்தை சேமிப்பதற்கான 3 அக்கவுண்ட் ஃபார்முலா பற்றிய விளக்கம் 31 Jul 2026
news ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்.. ஆதார் கார்டு ரயில் டிக்கெட் விலை எல்லாம் மாறப்போகுது.. நோட் பண்ணுங்க! 28 Jul 2026
news ஆகஸ்ட் மாதம் SBI, HDFC உள்ளிட்ட அனைத்து வங்கிகளும் 14 நாட்கள் செயல்படாது.. RBI வங்கி விடுமுறை அறிவிப்பு விவரங்கள் இதோ! 27 Jul 2026
news Tomato Price | வரத்து குறைவால் தக்காளி விலை கடும் சரிவு.. ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா..? 25 Jul 2026
news UBERல் 10 % ஊழியர்கள் பணிநீக்கம் :இந்திய IT -BPO துறைக்கான மாற்றங்களும் எச்சரிக்கையும் 24 Jul 2026

பொருளாதாரம்

புதிய அப்டேட்டை வெளியிட தயாராகும் மத்திய அரசு..... பெட்ரோலுக்கு மட்டும் இல்லை இனி டீசலுக்கும் E20....

Jul 06, 2026 06 Jul 2026 0 Views
எத்தனாலை நேரடியாக டீசலுடன் கலக்க முடியாது என்பதால், அதற்குச் சிறந்த மாற்றாக எத்தனாலில் இருந்து ஐசோபியூட்டனாலைத் தயாரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைக்கும் விதமாக பெட்ரோலுடன் எத்தனால் கலப்பு என்பது நடைமுறைப்படுத்தப் பட்டது. இது கடந்த சில ஆண்டுகளாக நடைமுறை இருக்கும் நிலையில் தற்போது டீசலிலும் 15 சதவீதம் வரை ஐசோபியூட்டனால் (isobutanol) கலவையை அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்களுடன், உயிரி எரிபொருள் ( biofuel ) பயன்பாட்டை நோக்கிய அடுத்த கட்டத்திற்கு இந்தியா தயாராகி வருவதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

அரசின் மாற்று எரிபொருள் உத்தி குறித்துப் பேசிய கட்கரி, எத்தனாலை நேரடியாக டீசலுடன் கலக்க முடியாது என்பதால், அதற்குச் சிறந்த மாற்றாக எத்தனாலில் இருந்து ஐசோபியூட்டனாலைத் தயாரிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகக் கூறினார்.

எத்தனாலை நேரடியாக டீசலுடன் கலக்க முடியாது. எனவே நாங்கள் எத்தனாலில் இருந்து ஐசோபியூட்டனாலை உற்பத்தி செய்கிறோம் என்று கூறிய கட்கரி, ஐசோபியூட்டனால் டீசலுக்கு மாற்றாக அமையும் என்றும் குறிப்பிட்டார்.

டீசலில் 15 சதவீத ஐசோபியூட்டனால் கலவையை அனுமதிப்பதற்கான பணிகளை அரசு மேற்கொண்டு வருவதாகக் கூறிய அமைச்சர், இது இந்தியாவின் எரிபொருள் துறையில் ஒரு முக்கிய மைல்கல் என்று விவரித்தார்.

100 சதவீத எத்தனால் மற்றும் ஐசோபியூட்டனால் மூலம் இரண்டு ஜெனரேட்டர்களை நாங்கள் வெற்றிகரமாக இயக்கியுள்ளோம். இந்த எரிபொருட்களில் இயங்கும் வகையிலான இயந்திரங்களை உருவாக்க முடியும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளார்.

பல வழக்கமான உயிரி எரிபொருட்களுடன் ஒப்பிடுகையில், அதிக ஆற்றல் அடர்த்தி, சிறந்த இயந்திரப் பொருத்தம் மற்றும் குறைவான உமிழ்வு ஆகியவற்றைக் கொண்டிருப்பதால், ஐசோபியூட்டனால் ஒரு நம்பிக்கைக்குரிய அடுத்த தலைமுறை உயிரி எரிபொருளாகக் கருதப்படுகிறது. இதன் பயன்பாடு இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைப்பதோடு, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் உயிரி எரிபொருட்களுக்கான கூடுதல் தேவையையும் உருவாக்கும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.

அரசின் E20 எத்தனால் கலப்புத் திட்டத்தை பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் நியாயப்படுத்திப் பேசிய சில நாட்களிலேயே இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விரிவான விளக்கமளித்த அமைச்சகம், எத்தனால் உற்பத்தியானது நீர் வளங்களை அளவுக்கு அதிகமாகக் குறைக்கிறது. வாகன இயந்திரங்களைச் சேதப்படுத்துகிறது, காப்பீடு அல்லது உத்தரவாதத்தை செல்லாததாக்குகிறது அல்லது சுற்றுச்சூழலுக்குத் தீங்கு விளைவிக்கிறது போன்ற குற்றச்சாட்டுகளை மறுத்தது. அறிவியல் ஆய்வுகள், ஒழுங்குமுறைப் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் எத்தனால் கலந்த எரிபொருட்களின் உலகளாவிய பயன்பாட்டு அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதாக தெரிவித்துள்ளது.

மேலும், நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு முன்னதாகவே, பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலப்பு இலக்கை இந்தியா எட்டியுள்ளதையும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இத்திட்டம் 1.9 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான அந்நியச் செலாவணியைச் சேமிக்கவும், கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கவும், கார்பன் உமிழ்வைக் குறைக்கவும் உதவியுள்ளது. அதேவேளையில் விவசாயிகளுக்கு வருவாய் வாய்ப்புகளையும் அதிகரித்துள்ளது.