நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news வங்கி எஃப்டி-யை மிஞ்சும் தபால் அலுவலக திட்டம்! 7.5% வட்டி, வரி விலக்குனு லாபம் அள்ளும் முதலீட்டாளர்கள்! 1 days ago
news ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 100% வரி விதிப்பு... அமெரிக்காவில் மசோதா நிறைவேற்றம்! 2 days ago
news Gen Z இளைஞர்கள் கவனத்திற்கு : ஹோம் லோன் எடுப்பதற்கு முன் இந்த ஐந்து விஷயங்களை மறந்துடாதீங்க 4 days ago
news யுபிஐ, இன்டர்நெட் இல்லாமலேயே பணம் அனுப்பலாம்... புதிய வசதியை அறிமுகம் செய்த ரிசர்வ் வங்கி! 11 Sep 2026
news Bank Strike | நாடு முழுவதும் நாளை வங்கிகள் செயல்படுமா..? ஊழியர் சங்கங்கள் சொல்வது என்ன? 10 Sep 2026
news பிசினஸ் தொடங்க கடன் வேணுமா? 16 அரசுத் திட்டங்கள்.. ஒரே தளம்.. வங்கிகளுக்கு அலையாமல் விண்ணப்பிப்பது எப்படி? 09 Sep 2026
news SBI வாடிக்கையாளர்களே அலார்ட்.. செப்டம்பர் 4 யூபிஐ சேவைகள் நிறுத்தப்படும்.. முழு விவரம் இதோ! 04 Sep 2026
news ரூ.10-க்கு ஐஸ்கிரீம் சந்தையில் என்ட்ரி ஆகும் ரிலையன்ஸ்.. அமுல், குவாலிட்டி வால்ஸுக்குப் போட்டியாக களமிறங்கும் 'பாம்பே கிரீமரி'! 03 Sep 2026
news செப்டம்பர் 15 முதல்... சர்க்கரையை 30 நாட்களுக்கு மேல் இருப்பு வைக்கத் தடை: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு! 02 Sep 2026
news உலகத்தின் Pure நெய் பட்டியலில் 6 வது இடத்தைப் பிடித்த அமுல்.. அதிகாரப்பூர்வ பட்டியலை வெளியிட்ட Tasteatles! 29 Aug 2026

தொழில் கட்டுரைகள்

"10 ஏக்கர்... 5 தொழில்கள்..." - வருடம் ₹20 லட்சம் அள்ளும் பட்டதாரி விவசாயி

Jul 11, 2026 11 Jul 2026 0 Views
திருவாரூர் அருகே ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்து 10 ஏக்கரில் ஆண்டுக்கு 20 லட்சம் வருமானம் பெறும் பட்டதாரி விவசாயி சாதனை.

காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி செய்து குறைந்த வருமானம் கிடைப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து வரும் நிலையில், மாற்று சாகுபடி மற்றும் ஒருங்கிணைந்த பண்ணைய முறையை பின்பற்றி ஆண்டுக்கு ரூ.20 லட்சம் வரை லாபம் ஈட்டி, பிற விவசாயிகளுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறார் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம் பட்டதாரி விவசாயி கணேஷ் கமலக்கண்ணன்.

திருவாரூர் அருகே அரசவனங்காடு கிராமத்தைச் சேர்ந்த பி.காம் பட்டதாரியான கணேஷ் கமலக்கண்ணன், கடந்த 2003-ம் ஆண்டு முதல் தனது 10 ஏக்கர் விளைநிலத்தில் ஒருங்கிணைந்த பண்ணைய முறையை அறிமுகப்படுத்தினார். ஆரம்பத்தில் நெல் சாகுபடியுடன் 2 ஏக்கரில் மீன் பண்ணையை அமைத்து, அதன் கரையோரங்களில் தென்னை மரக்கன்றுகளை நட்டார். இந்த முயற்சி நல்ல பலனைத் தந்ததைத் தொடர்ந்து, தற்போது மீன் பண்ணையை 5 ஏக்கராக விரிவுபடுத்தியுள்ளதுடன், தென்னை மரங்களின் எண்ணிக்கையையும் 100 ஆக உயர்த்தியுள்ளார்.

மீன் வளர்ப்புக்கான தீவனச் செலவைக் குறைக்கும் நோக்கில், நாட்டுக்கோழி, கருங்கோழி, வனராஜா, கிரிராஜா உள்ளிட்ட உயர்ரக கோழிகளை வளர்த்து வருகிறார். தற்போது அவரது பண்ணையில் 300-க்கும் மேற்பட்ட கோழிகள் உள்ளன. அதேபோல் தலைச்சேரி, போயர் உள்ளிட்ட ரகங்களைச் சேர்ந்த 100 ஆடுகளையும் வளர்த்து வருகிறார்.

இதுமட்டுமின்றி, பண்ணைக்கு அருகில் 2 ஏக்கர் பரப்பளவில் காய்கறி தோட்டமும் அமைத்துள்ளார். நெல், மீன், தென்னை, கோழி, ஆடு மற்றும் காய்கறி சாகுபடி என மொத்தம் 10 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த பண்ணையை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். இந்த பண்ணையை வேளாண்மைத் துறையினரும் மற்ற விவசாயிகளுக்கு முன்னுதாரணமாக சுட்டிக்காட்டி வருகின்றனர்.

இதுகுறித்து கணேஷ் கமலக்கண்ணன் கூறுகையில், "ஒரு ஏக்கர் நெல் சாகுபடிக்கு சுமார் ரூ.20 ஆயிரம் செலவாகிறது. ஆறு மாதங்கள் உழைத்த பிறகும் கிடைக்கும் லாபம் மிகவும் குறைவு. ஆனால், ஒரு ஏக்கர் மீன் பண்ணையில் 2,000 மீன்குஞ்சுகளை வளர்த்து, ஆறு மாதங்களில் சுமார் 2 டன் மீன்களை உற்பத்தி செய்ய முடியும். இதற்கு ரூ.1 லட்சம் முதலீடு செய்தால், ரூ.2 லட்சம் வரை லாபம் கிடைக்கும். ஆண்டுக்கு ஒரு ஏக்கரிலேயே ரூ.4 லட்சம் வரை வருமானம் ஈட்ட முடியும். இந்த அனுபவமே என்னை மீன் பண்ணையை 5 ஏக்கராக விரிவுபடுத்த ஊக்கமளித்தது," என்றார்.

மேலும், "கோழி வளர்ப்பின் மூலம் முட்டை மற்றும் நாட்டுக்கோழி விற்பனையில் ஆண்டுக்கு சுமார் ரூ.75 ஆயிரம் வருமானம் கிடைக்கிறது. 100 ஆடுகள் மூலம் ஆண்டுக்கு சராசரியாக ரூ.4 லட்சம் வருமானம் கிடைக்கிறது. காய்கறி சாகுபடியில் இருந்து ரூ.25 ஆயிரம் வரை வருமானம் கிடைக்கிறது. இவை அனைத்தையும் சேர்த்து ஆண்டுக்கு ரூ.20 லட்சம் வரை லாபம் கிடைக்கிறது," என்று தெரிவித்தார்.

இந்த ஒருங்கிணைந்த பண்ணையின் மூலம் ஆண்டு முழுவதும் 10 விவசாயத் தொழிலாளர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பும் வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர நெல் சாகுபடியையும் தொடர்ந்து மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார். "முதல் ஆண்டு வருமானத்தை எதிர்பார்க்காமல் உழைப்பை முதலீடாக செலுத்தினால், இரண்டாவது ஆண்டிலிருந்து இரட்டிப்பு வருமானம் ஈட்டுவது விவசாயத்தில் சாத்தியமே. விவசாயிகள் மாற்றுச் சாகுபடி மற்றும் ஒருங்கிணைந்த பண்ணைய முறையை தைரியமாக மேற்கொள்ள வேண்டும்," என்று கணேஷ் கமலக்கண்ணன் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.