நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணமா.. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்! 2 days ago
news விரைவில் பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வரும்.. RBI கவர்னர் சொன்ன முக்கிய அப்டேட்! 4 days ago
news ஸ்விக்கி, சொமேட்டோ சாம்ராஜ்யத்திற்கு சிக்கல்: உணவு டெலிவரி சந்தையில் குதிக்கிறது ஃபிளிப்கார்ட்.. அதுவும் பெங்களூரில்! 03 Aug 2026
news நம் பணத்தை சேமிப்பதற்கான 3 அக்கவுண்ட் ஃபார்முலா பற்றிய விளக்கம் 31 Jul 2026
news ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்.. ஆதார் கார்டு ரயில் டிக்கெட் விலை எல்லாம் மாறப்போகுது.. நோட் பண்ணுங்க! 28 Jul 2026
news ஆகஸ்ட் மாதம் SBI, HDFC உள்ளிட்ட அனைத்து வங்கிகளும் 14 நாட்கள் செயல்படாது.. RBI வங்கி விடுமுறை அறிவிப்பு விவரங்கள் இதோ! 27 Jul 2026
news Tomato Price | வரத்து குறைவால் தக்காளி விலை கடும் சரிவு.. ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா..? 25 Jul 2026
news UBERல் 10 % ஊழியர்கள் பணிநீக்கம் :இந்திய IT -BPO துறைக்கான மாற்றங்களும் எச்சரிக்கையும் 24 Jul 2026
news Solar Panel | 3 கிலோவாட் சோலார் பேனல் ஒரு நாளைக்கு எவ்வளவு மின்சாரம் உற்பத்தி செய்யும்? அரசு மிகப்பெரிய மானியம்! 23 Jul 2026
news LPG Cylinder | இனி இந்த வீடுகளுக்கு சிலிண்டர் கிடையாது.. எல்பிஜி பயனர்களுக்கு ஷாக் நியூஸ்! 22 Jul 2026

நிதி மற்றும் பொருளாதாரம்

கிரெடிட் கார்டு பயன்படுத்தும்போது இந்த நான்கு தவறுகளை மட்டும் தவிர்த்துவிடுங்கள்

Jul 13, 2026 13 Jul 2026 0 Views
இந்தியாவில் கிரெடிட் கார்டு பயன்பாட்டாளர்களின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகின்றது. இந்த நிலையில் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் என்ன செய்ய வேண்டும் ? என்னென்ன தவறுகளை கிரெடிட் கார்டு பயன்பாட்டாளர்கள் தவிர்க்க வேண்டும் என்பது தொடர்பாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்

கிரெடிட் கார்டு வாங்க சிலர் விருப்பப்படுவார்கள். ஆனால் பலர் கிரெடிட் கார்டு வாங்குவதற்கு தற்போது தயக்கம் காட்டி வருகின்றனர். சமீபத்தில் வெளியான ஒரு கணக்கெடுப்பில் இந்தியாவில் தான் கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர்கள் குறைவாம். அமெரிக்கா போன்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியாவில் தான் கடன் வாங்க தகுதியானவர்கள் கிரெடிட் கார்டு வாங்குவோரின் எண்ணிக்கை மிக குறைவு என தகவல் வந்துள்ளது.

அதுவும் கடந்தாண்டை விட இந்த ஆண்டு புதிதாக கிரெடிட் கார்டு வாங்கியவர்களின் எண்ணிக்கை மிக மிக குறைவாம். ஆனாலும் இன்னும் சிலர் தொடர்ந்து கிரெடிட் கார்டு பயன்படுத்திக்கொண்டு தான் வருகின்றனர். அவ்வாறு கிரெடிட் கார்டை பயன்படுத்தி வருபவர்கள் இந்த நான்கு தவறுகளை மட்டும் செய்துவிடாதீர்கள்.

வங்கி கொடுக்கும் பணம்
நாம் ஒவ்வொரு முறை கிரெடிட் கார்டை பயன்படுத்தும்போது நான் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டியது என்னவென்றால், இது நம்முடைய பணம் அல்ல. வங்கி கடனாக கொடுத்த பணம். அந்த பணத்தை நாம் திருப்பி கொடுக்க வேண்டும். எனவே இது வங்கியின் பணம் என நினைத்துக்கொண்டு பார்த்து செலவு செய்ய வேண்டும்

முழு தவனையும் கட்ட வேண்டும்
நாம் கிரெடிட் கார்டிற்கான தவணையை முழுமையாகவே கட்டிவிட வேண்டும். சில சமயங்களில் பேங்க் உங்களிடம், முழு பணமும் இல்லை என்றால் ஒரு சிறிய தொகையை மட்டும் கட்டினால் போதும் என சொல்வார்கள். அதை நம்பி கட்டினால் மீதமிருக்கும் பணத்திற்கான வட்டி பலமடங்கு அதிகரிக்கும். எனவே தவணையை முழுமையாக காட்டுவதே நல்லது. இந்த மினிமம் தொகையை மட்டும் தவணையாக கட்டுவது சரியல்ல. அது வட்டியை தான் அதிகப்படுத்தும்

ரிவார்ட்ஸ் -கேஷ்பேக் நம்ப வேண்டாம்
நாம் ஒரு பொருளை வாங்கினால் ரிவார்ட்ஸ் மற்றும் கேஷ்பேக் வரும் என்ற சலுகைகள் வந்தால் அதனை நம்பி அந்த பொருளை வாங்க வேண்டாம். அப்படி தேவையில்லாத ஒரு பொருளை சலுகைகளுக்காக வாங்கினால் தேவையில்லாத செலவு தான். எனவே ரிவர்ட்ஸ் மற்றும் கேஷ்பேக் போன்ற சலுகைகளை நம்ப வேண்டாம்

பில் கட்டும் தேதி
பில் கட்டுவதற்கான தேதியை மறக்காமல் குறிப்பிட்ட தேதிக்குள் பில்லை கட்டிவிடுவது நல்லது. அப்படி இல்லையென்றால் வங்கி உங்களுக்கு அபராதம் போடுவது மட்டுமல்லாமல் உங்களின் சிபில் ஸ்கோரையும் குறைத்துவிடும். எனவே தேதி மறக்காமல் பில்லை கட்டிவிட வேண்டும்

எனவே கிரெடிட் கார்டு பயன்படுத்தும்போது இந்த நான்கு தவறுகளையும் தவிர்த்துவிட்டு அவசிய தேவைக்காக பார்த்து பயன்படுத்தினால் நன்றாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது