நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news Gen Z இளைஞர்கள் கவனத்திற்கு : ஹோம் லோன் எடுப்பதற்கு முன் இந்த ஐந்து விஷயங்களை மறந்துடாதீங்க 9 hours ago
news யுபிஐ, இன்டர்நெட் இல்லாமலேயே பணம் அனுப்பலாம்... புதிய வசதியை அறிமுகம் செய்த ரிசர்வ் வங்கி! 5 days ago
news Bank Strike | நாடு முழுவதும் நாளை வங்கிகள் செயல்படுமா..? ஊழியர் சங்கங்கள் சொல்வது என்ன? 6 days ago
news பிசினஸ் தொடங்க கடன் வேணுமா? 16 அரசுத் திட்டங்கள்.. ஒரே தளம்.. வங்கிகளுக்கு அலையாமல் விண்ணப்பிப்பது எப்படி? 09 Sep 2026
news SBI வாடிக்கையாளர்களே அலார்ட்.. செப்டம்பர் 4 யூபிஐ சேவைகள் நிறுத்தப்படும்.. முழு விவரம் இதோ! 04 Sep 2026
news ரூ.10-க்கு ஐஸ்கிரீம் சந்தையில் என்ட்ரி ஆகும் ரிலையன்ஸ்.. அமுல், குவாலிட்டி வால்ஸுக்குப் போட்டியாக களமிறங்கும் 'பாம்பே கிரீமரி'! 03 Sep 2026
news செப்டம்பர் 15 முதல்... சர்க்கரையை 30 நாட்களுக்கு மேல் இருப்பு வைக்கத் தடை: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு! 02 Sep 2026
news உலகத்தின் Pure நெய் பட்டியலில் 6 வது இடத்தைப் பிடித்த அமுல்.. அதிகாரப்பூர்வ பட்டியலை வெளியிட்ட Tasteatles! 29 Aug 2026
news டாடா சன்ஸ் நிறுவனத்தின் அடுத்த தலைவர் யார்.. தீவிர தேடுதலில் டாடா குழுமம்.. 15 Aug 2026
news 1 பில்லியன் மதிப்பிலான 10 மற்றும் 20 ரூபாய் பிளாஸ்டிக் நோட்டுகளை விரைவில் புழக்கத்திற்கு வரும்.. RBI அனுமதி! 12 Aug 2026

உலக வர்த்தகம்

UPI பண பரிவர்த்தனைக்கு மீண்டும் கட்டணமா ? மத்திய அரசு எடுக்கப்போகும் முடிவு

Jul 17, 2026 17 Jul 2026 0 Views
மத்திய அரசு மீண்டும் UPI பண பரிவர்த்தனைக்கு சேவை கட்டணம் வசூலிக்க ஆலோசனை நடத்தி வருவதாக சொல்லப்படுகின்றது. இந்த ஆலோசனைக்கான காரணம் என்ன என்பது குறித்து விரிவாக இந்த தொகுப்பில் பார்ப்போம்

இன்றைய காலகட்டங்களில் நாம் ஒரு பொருளை வாங்கும்போது பர்சில் இருந்து பணத்தை எடுப்பதற்கு பதில் பாக்கெட்டில் இருந்து போனை எடுத்து அதன் மூலம் தான் பணத்தை தருகிறோம். G pay, phone pay மூலம் தான் பெரும்பாலானோர் பண பரிவர்த்தனையை செய்து முடிக்கின்றனர். டிஜிட்டல் முறையில் தான் தற்போது பெரும்பாலானோர் பணத்தை கொடுத்து வாங்கி வருகின்றனர்.

இவ்வாறு G pay, phone pay மூலம் நடக்கும் பண பரிவர்த்தனைக்கு தற்போது எந்த ஒரு கட்டணமும் இல்லை. அதன் காரணமாக தற்சமயம் டிஜிட்டல் பண பரிவர்த்தனை பெருமளவில் அதிகரித்துள்ளது. இந்நிலையில் தான் மத்திய அரசு ஒரு திட்டத்தை ஆலோசித்து வருகின்றது. அதாவது பெரிய கடைகள் மற்றும் அதிக தொகையில் நடக்கும் பண பரிவர்த்தனைக்கு மட்டும் இனி கட்டணம் வசூலிக்கலாமா ? என்ற யோசனையில் மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருகிறார்களாம்மத்திய அரசு இந்த சேவை கட்டணத்தை மீண்டும் கொண்டு வரலாம் என யோசித்து வருவதற்கு சில காரணங்கள் இருக்கின்றதாம். அதாவது இந்த சேவை கட்டணத்தை ஒருகட்டத்தில் மத்திய அரசு வசூலிப்பதை நிறுத்திவிட்டது. இந்தியாவில் டிஜிட்டல் முறையில் பண பரிவர்த்தனையை அதிகரிக்கவே இந்த சேவை கட்டணத்தை மத்திய அரசு நிறுத்தினர். அதன் பின் பெருமளவில் இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை பெருகியது. பெரும்பாலானோர் phone pay ,G pay மூலம் தான் பண பரிவர்த்தனை செய்து வருகின்றனர்.

பெருமளவில் டிஜிட்டலில் பண பரிவர்த்தனை செய்து வருவதால் இந்த சேவையை இலவசமாக நடத்துவதால் எந்த லாபமும் இல்லை. இதற்கான அரசு தரும் மானியமும் போதவில்லை என வங்கிகள் மற்றும் பேமெண்ட் நிறுவனங்கள் சொல்கின்றனர். எனவே தான் ஆண்டுக்கு ஒரு கோடிக்கு மேல் வியாபாரம் செய்யும் பெரிய வணிகர்களிடமும் பெரிய கடைகளில் 2000 ரூபாய்க்கு மேல் நடக்கும் UPI பண பரிவர்த்தனைக்கும் கட்டணம் வசூலிக்கலாம் என்ற யோசனையில் மத்திய அரசு இருக்கின்றது. அதுவும் 0 . 05 முதல் 0 . 07 % வரை கட்டணம் வசூலிக்கலாம் என அரசு ஆலோசனை நடத்தி வருகின்றனர்

தற்போது வரை இந்த சேவை கட்டணம் வசூலிப்பது குறித்து ஆலோசனை தான் நடத்தப்பட்டு வருகின்றது. இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை. ஒருவேளை சேவை கட்டணம் வசூலிப்பதாக மத்திய அரசு முடிவெடுத்தால் இதனால் சிறு தொழில் செய்பவர்கள் மற்றும் சாதாரண பொதுமக்களுக்கு இதனால் எந்த பாதிப்பும் இல்லை. பெரிய கடைகள் மற்றும் 2000 ரூபாய்க்கு மேல் பண பரிவர்த்தனை நடக்கும் போது தான் இந்த சேவை கட்டணம் வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது