நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news நம் பணத்தை சேமிப்பதற்கான 3 அக்கவுண்ட் ஃபார்முலா பற்றிய விளக்கம் 33 mins ago
news ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்.. ஆதார் கார்டு ரயில் டிக்கெட் விலை எல்லாம் மாறப்போகுது.. நோட் பண்ணுங்க! 3 days ago
news ஆகஸ்ட் மாதம் SBI, HDFC உள்ளிட்ட அனைத்து வங்கிகளும் 14 நாட்கள் செயல்படாது.. RBI வங்கி விடுமுறை அறிவிப்பு விவரங்கள் இதோ! 4 days ago
news Tomato Price | வரத்து குறைவால் தக்காளி விலை கடும் சரிவு.. ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா..? 6 days ago
news UBERல் 10 % ஊழியர்கள் பணிநீக்கம் :இந்திய IT -BPO துறைக்கான மாற்றங்களும் எச்சரிக்கையும் 24 Jul 2026
news Solar Panel | 3 கிலோவாட் சோலார் பேனல் ஒரு நாளைக்கு எவ்வளவு மின்சாரம் உற்பத்தி செய்யும்? அரசு மிகப்பெரிய மானியம்! 23 Jul 2026
news LPG Cylinder | இனி இந்த வீடுகளுக்கு சிலிண்டர் கிடையாது.. எல்பிஜி பயனர்களுக்கு ஷாக் நியூஸ்! 22 Jul 2026
news RBI Polymer Notes | வருகிறது ரூ.10, 20 பிளாஸ்டிக் நோட்டுகள்.. ரிசர்வ் வங்கி புது திட்டம்..! 21 Jul 2026
news Solar Panel | வீட்டில் சோலார் பேனல் வச்சிருக்கீங்களா..? உடனே இதை பண்ணுங்க..! 18 Jul 2026
news UPI பண பரிவர்த்தனைக்கு மீண்டும் கட்டணமா ? மத்திய அரசு எடுக்கப்போகும் முடிவு 17 Jul 2026

தொழில்நுட்பம்

கோவையில் சர்வதேச பருத்தி கவுன்சில் கூட்டம்; புதிய தர அளவீட்டு கருவி அறிமுகம்

Jan 17, 2025 17 Jan 2025 0 Views
ஜவுளித்துறையின் சிறப்பான வளர்ச்சிக்கான, நவீன முன்னேற்றங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து, தொழில்துறை தலைவர்கள் மற்றும் நிபுணர்கள் கலந்து கொண்ட 'பருத்தி தினம் 2024' நிகழ்வு கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது.

சர்வதேச பருத்தி கவுன்சில் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், நிலைத்தன்மை, தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய வர்த்தகத்தில் கவனம் செலுத்துதல், உலகளாவிய பருத்தி உற்பத்தியில் அமெரிக்க பருத்தி மற்றும் இந்திய ஜவுளித் துறையின் பங்கு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.

மேலும், இதில் தொழில்துறையின் வளர்ச்சி மற்றும் எதிர்கால வெற்றியை ஊக்குவிக்கும் புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவை குறித்தும் முக்கிய விவாதங்கள் இடம்பெற்றன.

முன்னதாக பருத்தி கவுன்சில் செயல்பாடுகள் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. இதில் காட்டன் யு.எஸ்.ஏ இன் தெற்காசியாவிற்கான விநியோகப் பிரிவு இயக்குனர் வில்லியம் பெட்டன்டோர்ப் சுபிமா, தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி மார்க் லெவ்கோவிட்ஸ், சர்வதேச பருத்தி கவுன்சில் பிரதிநிதி பியூஷ் நரங் மற்றும் ஹில் அண்ட் நோல்டன் இயக்குனர் இவா மரியா பில்லே ஆகியோர் பேசினர்.

இது போன்ற கூட்டங்கள், இந்திய ஜவுளி ஆலைகளுக்கும், இது சார்ந்த நிறுவனங்களுக்கும் புதிய வாய்ப்புகளை வழங்கும். தற்போது அதிகரித்து வரும் தேவைகளுக்கு ஏற்ப நவீன தொழில் நுட்பங்களின் வரவு பயனளிக்கிறது. மேலும் நீளமான இழைகள் கொண்ட பருத்தி மீதான இறக்குமதி வரி நீக்கப்பட்டதன் காரணமாக உயர்தர யு.எஸ்.பிமா பைபரை இந்திய ஆலைகள் எளிதில் வாங்குவதோடு உலக அளவில் போட்டித்தன்மை நிறைந்த ஜவுளித்துறையில் மேம்பட்ட தயாரிப்புகளை வழங்க முடிவதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு மகுடம் சூட்டும் விதமாக, காட்டன் யு.எஸ். சார்பில்,புதிய தர அளவீட்டு கருவி அறிமுகம் செய்யப்பட்டது.