நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news வங்கி எஃப்டி-யை மிஞ்சும் தபால் அலுவலக திட்டம்! 7.5% வட்டி, வரி விலக்குனு லாபம் அள்ளும் முதலீட்டாளர்கள்! 1 days ago
news ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 100% வரி விதிப்பு... அமெரிக்காவில் மசோதா நிறைவேற்றம்! 2 days ago
news Gen Z இளைஞர்கள் கவனத்திற்கு : ஹோம் லோன் எடுப்பதற்கு முன் இந்த ஐந்து விஷயங்களை மறந்துடாதீங்க 4 days ago
news யுபிஐ, இன்டர்நெட் இல்லாமலேயே பணம் அனுப்பலாம்... புதிய வசதியை அறிமுகம் செய்த ரிசர்வ் வங்கி! 11 Sep 2026
news Bank Strike | நாடு முழுவதும் நாளை வங்கிகள் செயல்படுமா..? ஊழியர் சங்கங்கள் சொல்வது என்ன? 10 Sep 2026
news பிசினஸ் தொடங்க கடன் வேணுமா? 16 அரசுத் திட்டங்கள்.. ஒரே தளம்.. வங்கிகளுக்கு அலையாமல் விண்ணப்பிப்பது எப்படி? 09 Sep 2026
news SBI வாடிக்கையாளர்களே அலார்ட்.. செப்டம்பர் 4 யூபிஐ சேவைகள் நிறுத்தப்படும்.. முழு விவரம் இதோ! 04 Sep 2026
news ரூ.10-க்கு ஐஸ்கிரீம் சந்தையில் என்ட்ரி ஆகும் ரிலையன்ஸ்.. அமுல், குவாலிட்டி வால்ஸுக்குப் போட்டியாக களமிறங்கும் 'பாம்பே கிரீமரி'! 03 Sep 2026
news செப்டம்பர் 15 முதல்... சர்க்கரையை 30 நாட்களுக்கு மேல் இருப்பு வைக்கத் தடை: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு! 02 Sep 2026
news உலகத்தின் Pure நெய் பட்டியலில் 6 வது இடத்தைப் பிடித்த அமுல்.. அதிகாரப்பூர்வ பட்டியலை வெளியிட்ட Tasteatles! 29 Aug 2026

தொழில்நுட்பம்

தமிழகத்தில் விண்வெளித் தொழில்களை ஊக்குவிக்க, இன்- ஸ்பேஸ் நிறுவனத்துடன் டிட்கோ ஒப்பந்தம்

Dec 12, 2024 12 Dec 2024 0 Views
தமிழகத்தில் விண்வெளித் தொழில்களை ஊக்குவிக்கவும், உற்பத்திப் பிரிவை தொடங்கவும், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ), இன்- ஸ்பேஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

தமிழ்நாடு பாதுகாப்புத் தொழில் துறை பெருவழித்தடத்தை செயல்படுத்துவதற்கான ஒரு முகமை நிறுவனமாக தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) செயல்பட்டு வருகிறது. விண்வெளி மற்றும் பாதுகாப்புத் துறை தொழில் நிறுவனங்களுக்கு ஏற்ற தொழில் பூங்காக்களை அமைத்து, அதன் மூலம் தொழில் முனைவோர் இடையேயான தொடர்புகளை மேம்படுத்துவதுடன், இத்துறைக்கு சாதகமான சூழலை ஏற்படுத்துவதே, தமிழ்நாடு பாதுகாப்பு தொழில்துறை பெருவழித்தடத்தின் நோக்கமாகும்.

தமிழகத்தில் பெருகிவரும் விண்வெளித் துறை சார்ந்த நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு, சுமார் 2000 ஏக்கர் பரப்பளவில் விண்வெளி தொழில்துறை மற்றும் உந்துசக்தி பூங்காவை அமைப்பதற்கு, டிட்கோ திட்டமிட்டுள்ளது. மேலும், இப்பூங்காவில் அமைய உள்ள நிறுவனங்களுக்கு ஆதரவாக, ஒரு திறன்மிகு மையத்தை உருவாக்கவும் டிட்கோ முடிவு செய்துள்ளது.

இன்- ஸ்பேஸ் என்பது, இந்தியாவிலுள்ள அரசு சாரா நிறுவனங்களின் அனைத்து விண்வெளி துறை நடவடிக்கைகளுக்கான ஒற்றைச் சாளர முகமை நிறுவனமாகும். இந்நிறுவனம், ஏவுதல் வாகனம், செயற்கைக்கோள்களை உருவாக்குதல், விண்வெளித் துறை சார்ந்த சேவைகளை வழங்குதல், விண்வெளி உள் கட்டமைப்பு வசதிகளை பகிர்தல் மற்றும் புதிய வசதிகளை நிறுவுதல் போன்ற பல்வேறு விண்வெளி நடவடிக்கைகளை, ஊக்குவித்தல், மேற்பார்வையிடுதல் ஆகியவற்றை செயல்படுத்தும். டிட்கோ நிறுவனம் இன்ஸ்பேஸ் நிறுவனத்துடன் இணைந்து ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் தமிழகத்தில் விண்வெளி தொழில்களை ஊக்குவிக்கவும், உற்பத்திப் பிரிவை தொடங்குவதற்கான வழிமுறைகளை வழங்கவும் திட்டமிட்டுள்ளது. அதன்படி, விண்வெளித் துறை முன்னேற்றத்திற்காக சிட்கோ நிறுவனத்தால் அமைக்கப்பட உள்ள திறன்மிகு மையத்திற்கு தேவையான தொழில்நுட்ப வழிகாட்டுதலை வழங்குவதோடு மட்டுமல்லாமல், இந்த பூங்காவில் அவற்றின் உற்பத்தி வசதிகளை அமைப்பதில் இன்- ஸ்பேஸ் நிறுவனம் முக்கிய பங்காற்றும்.

மேலும் விண்வெளி மற்றும் அதைச் சார்ந்த துறை தொழில்களை தமிழகத்தில் நிறுவ ஊக்குவிப்பதிலும் இன்-ஸ்பேஸ் நிறுவனம் பங்களிக்கும். டிட்கோ நிறுவனம், விண்வெளி உற்பத்திக்கான நிறுவனங்களைத் தொடங்குவதற்கு தேவையான தொழிற் பூங்காவை அமைக்கும். விண்வெளித் தொழிற்துறை நிறுவனங்களுக்கு சிறப்பு சலுகைகள் மற்றும் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை உருவாக்கும்.

இந்த ஒப்பந்தம் விண்வெளித் துறையில், புத்தொழில் விண்கலம், ராக்கெட் மற்றும் உதிரி பாகங்கள் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, வடிவமைப்பு, தயாரிப்பு போன்றவற்றிற்கு பெரிதும் உதவும். உலக விண்வெளி தொழிற்துறையில் தமிழகம் ஒரு மிகச் சிறந்த முனையமாக உருவெடுக்க இந்த ஒப்பந்தம் பெரும் பங்கு வகிக்கும்.