ஐபிஓ பங்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ள கோல் இந்தியா!

அரசுக்கு சொந்தமான கோல் இந்தியாவின் பிரிவான பாரத் கோக்கிங் கோல் லிமிடெட் (BCCL) நிறுவனம் ஐபிஓ வெளியிட திட்டமிட்டுள்ளது. இதற்காக வரைவு ரெட் ஹெர்ரிங் ப்ராஸ்பெக்டஸை (DRHP) மூலதன சந்தை ஒழுங்குமுறை அமைப்பான இந்தியப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியத்திடம் (SEBI) தாக்கல் செய்துள்ளது.