உங்கள் வணிகத்தில் நேர்மறையான பணப்புழக்கத்தை அதிகரிக்க உதவி குறிப்புகள்.

குறிப்பு மூன்று : Cash Conversion Cycle (பணம் மாற்றம் சுழற்சி). இதை CCC என்று வைத்துக் கொள்வோம். இது ஒரு ஃபார்முலா இது நாட்களின் எண்ணிக்கையில் கணக்கிடப்படும். நாம் வணிகத்தில் செய்யும் நடப்பு முதலீடு (Working Capital) திரும்ப நமது கைகளுக்கு வருவதற்கு எத்தனை நாட்கள் ஆகிறது என்று கணக்கீடு செய்வதுதான் இந்த CCC ஃபார்முலா.

உதாரணத்திற்கு நாம் ₹50, 000 பொருட்களை சப்ளையரிடமிருந்து 30 நாட்கள் கிரெடிட் பீரியடில் வாங்குகிறோம் என்று வைத்துக்கொள்வோம். நாம் வாங்கிய இந்த பொருள் நமது கிடங்கில் 60 நாட்கள் உள்ளது பிறகு இதை நம்முடைய B2B வாடிக்கையாளர்களுக்கு 45 நாட்களில் கிரெடிட் கொடுக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம்.

இதில் CCC என்னவென்றால் 75 நாட்கள் ஆகும். அதாவது நாம் முதலீடு செய்த ₹50 000 பணம் திரும்ப நமது கைகளுக்கு வருவதற்கு 75 நாட்கள் ஆகும் என்று இதற்கு அர்த்தம். கொடுக்கப்பட்டுள்ள வரைபடத்தை பார்ப்பதன் மூலம் உங்களால் இதனை மிகச் சரியாகப் புரிந்து கொள்ள முடியும்.

இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவெனில், இந்த CCC காலத்தை எவ்வாறு குறைப்பது என்பது நாம் திட்டமிட வேண்டிய முக்கியமான ஒன்றாகும். ஏனென்றால் அப்பொழுதுதான் நாம் நமது முதலீடு செய்த பணம் விரைவாக நமது கைகளுக்கு வருவதை உறுதி செய்ய முடியும். மேலே சொன்ன உதாரணத்தில், நமது பணம் சுற்றி வருவதற்கு குறைந்தது 75 நாட்கள் ஆகிறது. அப்படியென்றால் வருடத்திற்கு 365/75 = 5. அதாவது ஐந்து முறைகள் மட்டுமே பணம் சுற்றும். அதாவது வருடத்திற்கு நமது Sales Turnover ₹50,000 x 5 = ₹2,5000/- ஆக இருக்கும். (குறிப்பு :இதில் லாபக் கணக்கை எடுத்துக் கொள்ளவில்லை).

எளிதாக சொல்ல வேண்டுமென்றால் பணம் அதிக முறை தொழிலில் சுற்றினால் மட்டுமே நமது Sales Turnover அதிகமாக இருக்கும். இதன் மூலம் இலபத்தை அதிகரிக்க முடியும். இதில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்களில் ஒன்று, நமது Sales Turnover அதிகரிக்க வேண்டும் என்றால், ஒன்று மறுபடியும் முதலீடு செய்ய வேண்டும் அல்லது CCC நாட்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும். இந்த CCC ஃபார்முலாவில் உள்ள மூன்று முக்கிய நபர்கள் 1. Debtors 2.Creditors மற்றும் 3.Goods அதாவது சரக்குகள். இதனை கவனிப்பதான் மூலம் நம்முடைய பணம் ஒவ்வொரு இடத்திலும் எத்தனை நாட்கள் தங்கி இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும்.

மூவரையும் தனித்தனியாக பார்வையிட மேலே சொன்ன இந்த ஃபார்முலாவின் வாயிலாக சேர்த்து பார்க்கும் பொழுது மிக தெளிவான விளக்கம் கிடைக்கும். இந்த CCC ஃபார்முலாவை ஒவ்வொரு ப்ராடக்ட்ஸ் பிரிவுகளாக பார்க்கும் பொழுது எது அதிக லாபம் கொடுக்கிறது அல்லது எவ்வளவு விரைவாக பணம் சுற்றுகிறது என்பதையும் அறிந்து கொள்ள முடியும்.

மற்றும் உங்களுடைய Working Capital இடைவெளி எவ்வளவு என்பதையும் அறிந்து கொள்ள முடியும். மேல்சொன்ன உதாரணத்திற்கு நமக்கு வரவேண்டிய பணம் 105 நாட்களுக்கு பிறகு வரும் (60 + 45). ஆனால் நமது சப்ளையர்களுக்கு 30 நாட்களுக்குள் பணத்தைk கொடுக்க வேண்டும். இந்த CCC நாட்கள் எவ்வளவு என்று ஒவ்வொரு Listed Company – யும் தங்களுடைய அறிக்கையில் அவசியம் தெரிவிக்க வேண்டும்.

அனைவரும் இதுபோன்ற நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டு உங்களுடைய வணிகத்தில் லாபம் சம்பாதிக்க நமது வணிகம் மாத இதழ் வாயுலாக என்னுடைய வாழ்த்துக்கள்.