நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news வங்கி எஃப்டி-யை மிஞ்சும் தபால் அலுவலக திட்டம்! 7.5% வட்டி, வரி விலக்குனு லாபம் அள்ளும் முதலீட்டாளர்கள்! Just now
news ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 100% வரி விதிப்பு... அமெரிக்காவில் மசோதா நிறைவேற்றம்! 1 days ago
news Gen Z இளைஞர்கள் கவனத்திற்கு : ஹோம் லோன் எடுப்பதற்கு முன் இந்த ஐந்து விஷயங்களை மறந்துடாதீங்க 2 days ago
news யுபிஐ, இன்டர்நெட் இல்லாமலேயே பணம் அனுப்பலாம்... புதிய வசதியை அறிமுகம் செய்த ரிசர்வ் வங்கி! 11 Sep 2026
news Bank Strike | நாடு முழுவதும் நாளை வங்கிகள் செயல்படுமா..? ஊழியர் சங்கங்கள் சொல்வது என்ன? 10 Sep 2026
news பிசினஸ் தொடங்க கடன் வேணுமா? 16 அரசுத் திட்டங்கள்.. ஒரே தளம்.. வங்கிகளுக்கு அலையாமல் விண்ணப்பிப்பது எப்படி? 09 Sep 2026
news SBI வாடிக்கையாளர்களே அலார்ட்.. செப்டம்பர் 4 யூபிஐ சேவைகள் நிறுத்தப்படும்.. முழு விவரம் இதோ! 04 Sep 2026
news ரூ.10-க்கு ஐஸ்கிரீம் சந்தையில் என்ட்ரி ஆகும் ரிலையன்ஸ்.. அமுல், குவாலிட்டி வால்ஸுக்குப் போட்டியாக களமிறங்கும் 'பாம்பே கிரீமரி'! 03 Sep 2026
news செப்டம்பர் 15 முதல்... சர்க்கரையை 30 நாட்களுக்கு மேல் இருப்பு வைக்கத் தடை: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு! 02 Sep 2026
news உலகத்தின் Pure நெய் பட்டியலில் 6 வது இடத்தைப் பிடித்த அமுல்.. அதிகாரப்பூர்வ பட்டியலை வெளியிட்ட Tasteatles! 29 Aug 2026

தொழில்

பெண்களுக்காகவே தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! ₹4 லட்சம் வரை பிணையம் தேவையில்லை – அடாவடி வசூலைத் தடுக்க புதிய சட்டம்!

Dec 23, 2025 23 Dec 2025 0 Views
தமிழ்நாட்டில் சுயதொழில் புரிவோர், சிறு வணிகர்கள் மற்றும் சாமானிய மக்கள் கடன் பெறுவதை எளிதாக்கவும், கடன் வழங்கும் நிறுவனங்களின் அத்துமீறல்களைத் தடுக்கவும் தமிழ்நாடு அரசு ஒரு புதிய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது.

சட்டத்தின் முக்கிய மாற்றங்கள்
கடன் வழங்குபவர்களின் அடாவடி வசூல், அதிக வட்டிச் சுரண்டல் மற்றும் பொதுமக்களை அச்சுறுத்துவதைத் தடுக்கும் நோக்குடன் “தமிழ்நாடு கடன் வழங்கும் நிறுவன விதிகள் 2025” என்ற பெயரில் இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

கடன் பிணைய (அடமானம்) நீக்கம்:

சாதாரண கடன்கள் ₹4 லட்சம் வரையிலான கடன்களுக்கு ஜாமீன் அல்லது அடமானம் எதையும் கேட்கக் கூடாது.

சுய உதவி குழுக்கள் (SHG) சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு, இந்த பிணையற்ற கடன் வரம்பு ₹10 லட்சம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.

சட்டத்தின் இதர விதிகள்
கட்டாயப் பதிவு: கடன் வழங்கும் எந்தவொரு தனிநபர் அல்லது நிறுவனமும், கட்டாயமாக அரசின் ஆன்லைன் போர்ட்டலில் ₹10,000 கட்டணம் செலுத்திப் பதிவு செய்து, 60 நாட்களுக்குள் சான்றிதழைப் பெற வேண்டும்.

ஆவணங்களைத் திருப்பி அளித்தல் கடன் பெற்றவர் முழு கடனையும் திரும்பச் செலுத்திய 30 நாட்களுக்குள் நிறுவனம் அந்த நபரின் ஆவணங்களைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும்.

தீர்ப்பாயம் கடன் தொடர்பான புகார்களைத் தீர்க்க ஒரு தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் மக்கள் புகார் அளித்தால், இரு தரப்பிலும் விசாரணை நடத்தி 60 நாட்களுக்குள் தீர்வு வழங்க வேண்டும்.

யாருக்குப் பலன்?
₹4 லட்சம் வரையிலான கடன்களுக்கு அடமானம் தேவையில்லை என்ற இந்த அறிவிப்பு, சுய தொழில் தொடங்குவோர், சிறு வணிகம் செய்வோர் மற்றும் முதன்முதலாகத் தொழில் உலகில் கால்பதிக்கும் சொத்து இல்லாதவர்களுக்குப் பெரும் பலனளிக்கும். குறிப்பாக, சுய உதவி குழுக்களைச் சேர்ந்த பெண்கள் எந்தச் சொத்தையும் பிணையாகக் கொடுக்காமல் ₹10 லட்சம் வரை கடன் பெற்று, தங்கள் நிறுவனங்களை மேம்படுத்திக்கொள்ள இது வழிவகுக்கும்.