நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news வங்கி எஃப்டி-யை மிஞ்சும் தபால் அலுவலக திட்டம்! 7.5% வட்டி, வரி விலக்குனு லாபம் அள்ளும் முதலீட்டாளர்கள்! Just now
news ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 100% வரி விதிப்பு... அமெரிக்காவில் மசோதா நிறைவேற்றம்! 1 days ago
news Gen Z இளைஞர்கள் கவனத்திற்கு : ஹோம் லோன் எடுப்பதற்கு முன் இந்த ஐந்து விஷயங்களை மறந்துடாதீங்க 2 days ago
news யுபிஐ, இன்டர்நெட் இல்லாமலேயே பணம் அனுப்பலாம்... புதிய வசதியை அறிமுகம் செய்த ரிசர்வ் வங்கி! 11 Sep 2026
news Bank Strike | நாடு முழுவதும் நாளை வங்கிகள் செயல்படுமா..? ஊழியர் சங்கங்கள் சொல்வது என்ன? 10 Sep 2026
news பிசினஸ் தொடங்க கடன் வேணுமா? 16 அரசுத் திட்டங்கள்.. ஒரே தளம்.. வங்கிகளுக்கு அலையாமல் விண்ணப்பிப்பது எப்படி? 09 Sep 2026
news SBI வாடிக்கையாளர்களே அலார்ட்.. செப்டம்பர் 4 யூபிஐ சேவைகள் நிறுத்தப்படும்.. முழு விவரம் இதோ! 04 Sep 2026
news ரூ.10-க்கு ஐஸ்கிரீம் சந்தையில் என்ட்ரி ஆகும் ரிலையன்ஸ்.. அமுல், குவாலிட்டி வால்ஸுக்குப் போட்டியாக களமிறங்கும் 'பாம்பே கிரீமரி'! 03 Sep 2026
news செப்டம்பர் 15 முதல்... சர்க்கரையை 30 நாட்களுக்கு மேல் இருப்பு வைக்கத் தடை: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு! 02 Sep 2026
news உலகத்தின் Pure நெய் பட்டியலில் 6 வது இடத்தைப் பிடித்த அமுல்.. அதிகாரப்பூர்வ பட்டியலை வெளியிட்ட Tasteatles! 29 Aug 2026

தொழில்

ஓசூர் விமான நிலையம்: 12 கிராமங்களில் இருந்து 2,900 ஏக்கர் நிலம் கையகப்படுத்தத் திட்டம்!

Dec 23, 2025 23 Dec 2025 0 Views
தமிழ்நாடு அரசு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் விமான நிலையம் அமைப்பதில் மிகத் தீவிரமாக உள்ளது. தொழில் ரீதியாகவும், உற்பத்தி ரீதியாகவும் வேகமாக வளரும் நகரமான ஓசூரில், பெங்களூருவுக்கு அருகாமையில் இருப்பதால், டாடா, ஓலா, டிவிஎஸ் போன்ற பல முன்னணி நிறுவனங்கள் தங்கள் ஆலைகளை அமைத்துள்ளன. இந்த வளர்ச்சிக்கு மேலும் உந்துதல் அளிக்கும் வகையில் விமான நிலையம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

நிலம் கையகப்படுத்தும் விவரங்கள் மற்றும் கிராமங்கள்
ஓசூர் – பேரிகை – பாகலூர் – சூளகிரி பகுதிகள் இணையக்கூடிய இடத்தில் விமான நிலையத்தைக் கட்டமைக்க அரசு முடிவு செய்துள்ளது. ஆண்டுக்கு மூன்று கோடி பயணிகளைக் கையாளும் வகையில் இதை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. ஓசூர் விமான நிலையத்தை அமைக்க மொத்தம் 2,979 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. இதில் 845 ஏக்கர் நிலம் ஏற்கெனவே அரசுக்குச் சொந்தமானது. மீதமுள்ள நிலம் தனியாரிடம் இருந்து (விவசாய நிலங்கள் உட்பட) கையகப்படுத்தப்பட உள்ளது. ஓசூர் தாலுகாவில் 10 கிராமங்களும், சூளகிரி தாலுகாவில் சில கிராமங்களும் இதில் அடங்கும். முக்கியமாகப் பலவனப்பள்ளி, முதாலி, அடவனபள்ளி, தேசபள்ளி, அட்டூர், காருபள்ளி, நந்திமங்கலம், வெங்கடேசபுரம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நிலம் கையகப்படுத்துவது தொடர்பான விரிவான அறிக்கை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவர் ஆய்வு செய்த பிறகு முதலமைச்சருக்கு அனுப்பிவைக்கப்படும். முதலமைச்சர் ஸ்டாலின் இது தொடர்பான அரசாணை வெளியிட்டவுடன் நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்படும். இந்தப் பணிகளைப் பிப்ரவரிக்குள் முடிக்க அதிகாரிகள் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.