சிட்டி யூனியன் வங்கி ஏழு விருதுகள் வென்று சாதனை!

அண்மையில், 2025 ஜனவரி 24 அன்று மும்பையில் நடைபெற்ற 20வது வருடாந்திர தொழில்நுட்ப மாநாடு, கண்காட்சி மற்றும் விருதுகள் 2024′ ல் சிட்டி யூனியன் வங்கி ஏழு விருதுகளை வென்றுள்ளது. இந்த விருதுகள் வங்கியின் தொழில்நுட்ப மேம்பாடுகளுக்கு கிடைத்த பெருமையான அங்கீகாரமாக சிட்டி யூனியன் வங்கியின் மேலாண்மைக் குழு தெரி வித்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் டி. ரபி சங்கர், சிட்டி யூனியன் வங்கியின் செயல் இயக்குநர் விஜய் ஆனந்த் தலைமையிலான குழுவிடம் சிறந்த செயல்பாடுகளுக்கான விருதுகளை வழங்கினார்.

வங்கி கீழ்கண்ட பிரிவுகளில் சிறப்பான செயல்பாடுகளுக்கான விருதுகளைப் பெற்றுள்ளது.

* கட்டணங்கள் மற்றும் ஈர்ப்பான சேவைகள்

* சிறந்த தொழில்நுட்ப மேலாண்மை

* சிறந்த தொழில்நுட்ப இணைப்பு

* டிஜிட்டல் முறை

* சிறந்த நிதி உட்சேர்க்கை

* சிறந்த ஏ.ஐ பயன்பாடு

* சிறந்த தொழில்நுட்ப வங்கி பே பிரிவுகளில் சிறப்பு விருதுகள் வ போன்ற விருதுகள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் பேசிய விஜய் ஆனந்த், “இந்த விருதுகள், எங்கள் வாடிக்கையாளர்களுக்காக சாத்தியமான தொழில்நுட்ப சேவைகளை வழங்குவதற்கான எங்களின் உறுதியை இன்னும் வலிமையாக வெளிப்படுத்துகின்றன. 2024 ஆம் ஆண்டு Global Fintech Fest இல எங்களின் 8 புதிய டிஜிட்டல் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தினோம். எதிர்காலத்தில் இன்னும் புதுமைகளை சேர்க்க நாங்கள் உறுதியாக உள்ளோம்.” என தெரி வித்தார்.

சிட்டி யூனியன் வங்கி 1904 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த வங்கி, 120 ஆண்டுகளாக வங்கித் துறையில் முன்னணி வங்கியாக செயல்பட்டு வருகிறது. 827 கிளைகள், 1,697 ஏடிஎம்கள் கொண்ட இந்த வங்கி, வாடிக்கையாளர்களுக்கான பல்வேறு டிஜிட்டல் சேவைகளை வழங்குவதில் முன்னோடியாக உள்ளது.

வங்கி வழங்கும் புதுமையான சேவைகளில் குரல் அடிப்படையிலான UPI123Pay, பன்மொழி சாட்பாட் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

சிறந்த தொழில்நுட்பங்களை கொண்டு வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் சிட்டி யூனியன் வங்கி, தனது சாதனைகளை தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது.