UBERல் 10 % ஊழியர்கள் பணிநீக்கம் :இந்திய IT -BPO துறைக்கான மாற்றங்களும் எச்சரிக்கையும்

சர்வதேச தொழில்நுட்பத்தில் ஏஐ யால் கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நேரத்தில் uber நிறுவனத்தில் 10 % ஊழியர்கள் தங்களின் வேலையை இழந்துள்ளனர். இதனால் IT மற்றும் BPO துறையில் வேலை செய்பவர்களுக்கான எச்சரிக்கை என்ன ? என்பதை பார்க்கலாம்

ஏஐ தொழில்நுட்ப உலகில் பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. பல்வேறு நிறுவனங்கள் ஏஐ தொழில்நுட்பத்திற்கு தங்களை மாற்றிக்கொண்டு வருகின்றன. மனிதர்கள் செய்யும் சில வேலைகளை ஏஐ மிக எளிமையாக செய்து முடிப்பதால் சிலருக்கு வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பல நிறுவனங்களில் ஏஐ தாக்கத்தால் வேலை இழப்பு ஏற்பட்டு வருவதாகவும், பணிநீக்கம் நடந்து வருவதாகவும் சொல்லப்படுகின்றது.

ஆட்குறைப்பு செய்து அதன் மூலம் சேமிக்கும் பணத்தை ஏஐ யில் முதலீடு செய்து லாபத்தை ஈட்ட நிறுவனங்கள் முடிவெடுத்துள்ளது. அந்த வகையில் தற்போது UBER நிறுவனத்திலும் பணிநீக்கம் நடந்துள்ளது.சர்வதேச டாக்சி நிறுவனமான UBER தன் வாடிக்கையாளர் சேவையில் 10 % ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. அதற்கு பதில் இந்நிறுவனம் ai generative ஐ அறிமுகம் செய்துள்ளனர்சர்வதேச தொழில்நுட்பத்துறை ஒரு மிகப்பெரிய கட்டமைப்பு மாற்றத்தை சந்தித்து வருகின்றது. அனைத்து நிறுவனங்களும் பெரும்பாலும் ஏஐ தொழில்நுட்பத்தை நாடி வருகின்றனர். UBER நிறுவனமும் தற்போது இந்த கட்டமைப்பு மாற்றத்தை செயல்படுத்த துவங்கிவிட்டது. இது IT மற்றும் BPO துறையில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு ஒரு எச்சரிக்கை எனவும் சொல்லலாம். இந்த கட்டமைப்பு மாற்றத்தால் யார் பாதிக்கப்படுவார்கள் ? அதிலிருந்து அவர்கள் எப்படி தங்களை காப்பாற்றிக்கொள்ள வேண்டும் ? என்பதை பார்க்கலாம்

TIER 1 வேலைகளுக்கு ஆபத்து
இந்த ஏஐ வளர்ச்சியால் வழக்கமான வாடிக்கையாளர் சேவை வேலைகள் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. நிறுவனங்களில் தகவல்களை சரிபார்ப்பது, அடிப்படை புகார்களை கையாளுவது போன்ற வேலைகளை ஏஐ மிக எளிதாக பார்த்துவிடுகின்றது. இதிலிருந்து பணியாளர்கள் தங்களை காப்பாற்றிக்கொள்ள சில விஷயங்களை செய்தே தீர வேண்டும்

பணியாளர்கள் செய்ய வேண்டிய விஷயங்கள்
*துறைசார் அறிவை உயர்த்திக்கொள்ளுதல்
*ai கருவிகளை கற்றுக்கொள்ளுதல்
*hybrid roles இலக்கு வைத்தல்

ஆகிய விஷயங்களை ஊழியர்கள் மேன்படுத்திக்கொண்டால் தற்போது வேலைவாய்ப்புகளில் ஏற்பட்டு இருக்கும் சவால்களை சமாளித்து முன்னேறலாம். மேலும் ai என்பது நம் வேலையை இழக்க வைப்பது இல்லை. வேலையின் தன்மை உயர்நிலையை அடைகின்றன. எனவே அதற்கு ஏற்றாற்போல நாமும் வளர்ச்சியடைய வேண்டும். நம் வேலையில் அப்டேட் செய்துகொண்டு லேட்டஸ்ட் தொழில்நுட்பங்களுக்கு ஏற்றவாறு நம்மை வளர்த்துக்கொள்ள வேண்டியது ஒவ்வொரு ஊழியர்களுக்கும் அவசியமாகும்