ஆஸ்திரேலியாவின் அடிப்படை பணவீக்கம் எப்போதுமில்லாத வகையில் 3.2 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது கடந்த மூன்று ஆண்டுகளில் காணப்பட்ட மிகக் குறைந்த அளவாகும். இந்த மாற்றம், ஆஸ்திரேலிய ரிசர்வ் வங் (RBA) வட்டி விகிதங்களை குறைக்க எடுக்கும் முடிவின் வாய்ப்பை அதிகரிக்கிறது. முந்தைய காலங்களில், RBA, தனது வட்டி விகிதங்களை 4.35 சதவீதமாக உயர்த்தியது, ஆனால் தற்போதைய பணவீக்கம் குறைவதால், வட்டி விகிதங்களை குறைக்கும் முடிவை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
“டிலாய்ட் அசெஸ் எகனாமிக்ஸ்” அறிக்கையின் படி, RBA தனது 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் வட்டி விகிதங்களை 2.85 சதவீதமாகக் இன்னும் குறைக்கலாம், இது சராசரி கடனாளர்களுக்கு ஆண்டுதோறும் சுமார் $8,000 சேமிப்பை ஏற்படுத்தும். இது வீட்டுக்கடன் கொண்டவர்களுக்கும் நிவாரணமாக இருக்கும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணவீக்கம் குறைந்தாலும், வேலைவாய்ப்பின் வலிமை, அதிக அரசு செலவுகள்,மற்றும் நாணயத்தின் மதிப்பு குறைவு போன்ற காரணிகள் RBA வின் முடிவுகளை மாற்றும் காரணிகளாக பார்க்கப்படுகிறது. எனினும், பொருளாதார நிபுணர்கள், பணவீக்கம் குறைவதால், RBA விரைவில் வட்டி விகிதங்களை இன்னும் குறைக்கும் என எதிர்பார்க்கிறார்கள்.
நிதியமைச்சர் ஜிம் சால்மர்ஸ், புதிய பணவீக்க அறிக்கைகள் முன்பாக, ஆஸ்திரேலியர்களை பொருளாதார ரீதியில் நம்பிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக்கொண்டார், ஆனால் அதே சமயத்தில் அலட்சியம் காட்டாமல் சேமிப்பில் கவனம் செலுத்தவும் அறிவுறுத்தியுள்ளார் அவர், பணவீக்கம் குறைவதால், 2025 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவின் பொருளாதார வலிமையில் நம்பிக்கை அதிகரிக்கும் என கருத்து தெரிவித்தார்.




