சைமன் சினெக்கின் “கோல்டன் சர்க்கிள் மாடல்” என்பது ஒரு வியாபாரத்தை வடிவமைக்கும் போது ஏன், எவ்வாறு, மற்றும் என்ன என்பதை விளக்கும் ஒரு வழிமுறை. மாடலின் மூன்று முக்கிய அம்சங்கள்: ஏன் (Why), எவ்வாறு (How), மற்றும் என்ன (What). இந்த முறை, குறிப்பாக ஒரு நிறுவனத்தின் நோக்கம் மற்றும் அதன் வாடிக்கையாளர்களுக்கு அதை எவ்வாறு எடுத்துச் செல்வது என்பதில் தனித்தன்மையை உருவாக்க உதவுகிறது.
கோல்டன் சர்க்கிள் மூன்று அடிப்படைப் பிரிவுகள்
ஏன் (Why): இது ஒரு நிறுவனத்தின் அல்லது முயற்சியின் அடிப்படை
தெளிவாக விளக்குவது இதன் நோக்கம்.
Apple நிறுவனத்தை எடுத்துக் கொள்ளலாம். கோல்டன் சர்க்கிள் மாடலின் அடிப்படையில் Appleன் பணி மற்றும் நோக்கத்தை தெளிவாக விளக்கலாம்.
ஏன் (Why): Apple நிறுவனத்தைப் பொறுத்தவரை நிறுவனத்தின் நோக்கம் என்பது, புதிய தனித்துவமான சிந்தனைகளை உருவாக்கி உலகத்தை அந்த சிந்தனைகளை நோக்கிப் பயணிக்க வைப்பதே ஆகும்.
Π எவ்வாறு (how): இந்த நோக்கத்தை நிறைவேற்ற Apple நிறுவனம் தனது தனித்துவமான நேர்த்தியுடன் வடிவமைக்கப்பட்ட பொருட்களால், அதைப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான அனுபவத்தை வழங்குகிறது. எளிமையான கட்டமைப்பு. சிறந்த செயல்திறன் மற்றும் நவீன தொழில்நுட்பங்களை ஒருங்கிணைப்பதன் மூலம், வாடிக்கையாளர்களுக்கு வேறுபட்ட அனுபவத்தை ஆப்பிள் நிறுவனம் வழங்குகிறது.




