நிதி மற்றும் பொருளாதாரம்
அனைத்து வங்கிகளும் ‘PRAVAAH’ போர்டலை பயன்படுத்த வேண்டும் – ஆர்.பி.ஐ உத்தரவு!
வங்கி அனுமதிகள் மற்றும் ஒப்புதல்களை விரைவாக செயலாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட ‘PRAVAAH’ போர்டலை, மே 1, 2025 முதல் அனைத்து வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கட்டாயமாக பயன்படுத்த வேண்டும் என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. இது நிர்வாக செயல்முறைகளில் தாமதங்களை தவிர்க்கும் ஒரு முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.
ஸ்ரீராம் ஃபைனான்ஸ் பிக்சட் டெபாசிட் வட்டி மாற்றம்
ஸ்ரீராம் ஃபைனான்ஸ் நிறுவனம்,மே 2, 2025 முதல் பிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்களை மாற்றியுள்ளது. புதிய மாற்றங்களின் படி, 12 முதல் 60 மாதங்கள் வரை உள்ள சில காலப்பகுதிகளுக்கான வட்டி விகிதம் 0.05% முதல் 0.25% வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
கோடாக் மகிந்திரா வங்கி சேமிப்பு கணக்கு வட்டி விகிதம் குறைப்பு!
கோடாக் மகிந்திரா வங்கி, சேமிப்பு கணக்குகளில் வழங்கப்படும் வட்டி விகிதத்தை 0.25% வரை குறைத்துள்ளது. புதிய வட்டி விகிதம் ஏப்ரல் 20 முதல் அமலாகியுள்ளது.
விரைவாக வளரும் உலகப் பொருளாதார சக்தி – இந்தியா!
IMF கணிப்பின்படி, 2025-ல் 6.2% மற்றும் 2026-ல் 6.3% வளர்ச்சி விகிதத்துடன், இந்தியா உலகின் வேகமாக வளரும் முக்கிய பொருளாதாரமாக உருவாகிறது. இது நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையை வெளிப்படுத்துகிறது.
ரிசர்வ் வங்கி தங்கத்தின் மதிப்பு 7 நாளில் ரூ.12,000 கோடி உயர்வு
ரிசர்வ் வங்கியின் தங்க கையிருப்பின் மதிப்பு கடந்த வாரத்தில் ரூ.11,986 கோடி உயர்ந்து, மொத்தமாக ரூ.6,88,496 கோடியாக அதிகரித்துள்ளது. இந்த உயர்வு, உலகளவில் தங்கத்தின் விலை உயர்வால் ஏற்பட்டது.
இயற்கை எரிவாயு குழாய் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்
சென்னையில் இயற்கை எரிவாயு குழாய் திட்டம் மத்திய அரசின் ஒப்புதலை பெற்றுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், காமராஜர் துறைமுகத்தில் உள்ள இந்திய எண்ணெய் கழகத்தின் (IOC) LNG இறக்குமதி நிலையத்திலிருந்து, மணலி தொழில்துறை பகுதிக்கு இயற்கை எரிவாயு வழங்கப்படும்.
எஸ்பிஐ மற்றும் பொதுத்துறை வங்கிகள் வட்டி விகிதம் 0.25% குறைப்பு
ரிசர்வ் வங்கி (RBI) ஏப்ரல் 2025ல் ரெப்போ விகிதத்தை 6.25% ஆக குறைத்ததைத் தொடர்ந்து, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) மற்றும் பல பொதுத்துறை வங்கிகள் தங்களின் கடன் வட்டி விகிதங்களை 0.25% (25 பிபிஎஸ்) குறைத்துள்ளன.
இந்தியா போஸ்ட் மூலம் மியூச்சுவல் பண்ட் சேவைகள்
இந்தியா போஸ்ட், மியூச்சுவல் பண்ட் முதலீடுகளை வீடு தேடி சேவை மூலம் வழங்க திட்டமிட்டுள்ளது. இந்த சேவையின் மூலம், முதலீட்டாளர்கள் தங்கள் இல்லத்திலிருந்தே மியூச்சுவல் பண்ட் கணக்குகளை தொடங்கவும், பராமரிக்கவும் முடியும். இந்த முயற்சி, நம்பகமான மற்றும் வசதியான முதலீடு வாய்ப்புகளை மக்களுக்குக் கொண்டுவரும்.
முத்ரா திட்டத்தின் 10 ஆண்டு சாதனை
பிரதமர் நரேந்திர மோடி, முத்ரா திட்டத்தின் 10ஆம் ஆண்டு நிறைவையொட்டி, இதுவரை ரூ.33 லட்சம் கோடி மதிப்பில் 52 கோடி கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த திட்டம், சிறு தொழில்கள் மற்றும் முதன்முறையாக தொழில் தொடங்குவோருக்கு முன்பணம் இல்லாமல் கடன்களை வழங்கி, அவர்களின் தொழில்முனைவுத் திறன்களை வெளிப்படுத்த உதவியுள்ளது.
முத்ரா திட்டத்தின் 10 ஆண்டு சாதனை
பிரதமர் நரேந்திர மோடி, முத்ரா திட்டத்தின் 10ஆம் ஆண்டு நிறைவையொட்டி, இதுவரை ரூ.33 லட்சம் கோடி மதிப்பில் 52 கோடி கடன்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த திட்டம், சிறு தொழில்கள் மற்றும் முதன்முறையாக தொழில் தொடங்குவோருக்கு முன்பணம் இல்லாமல் கடன்களை வழங்கி, அவர்களின் தொழில்முனைவுத் திறன்களை வெளிப்படுத்த உதவியுள்ளது.
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.2 உயர்வு
மத்திய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு ரூ.2 உயர்த்தியுள்ளது. இந்த உயர்வு ஏப்ரல் 8, 2025 முதல் அமலுக்கு வருகிறது. எனினும், இந்த வரி உயர்வு சில்லறை விலையில் மாற்றத்தை ஏற்படுத்தாது; அதாவது, பொதுமக்கள் வாங்கும் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இருக்காது.
Startup நிறுவனங்கள் தொடங்குவதில், தமிழகம் தொடர்ந்து சாதனை
தமிழகத்தில், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்குபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கு தமிழக அரசு மேற்கொள்ளும் பல்வேறு முயற்சிகளின் விளைவாக, 23-12-2024 நிலவரப்படி தமிழகத்தில் 10,005 நிறுவனங்கள் உள்ளன. கடந்த 3 ஆண்டுகளில் ஸ்டார்ட் அப்-களின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து 10,000 என்ற இலக்கை அடைந்திருப்பது மிகப்பெரிய சாதனை ஆகும். 2021ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 2,300 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மட்டுமே…
ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, யாருக்கு பயன் அளிக்கும்?
அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு பெரும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. அதாவது, ரூபாயின் மதிப்பு 85-க்கு மேல் சரிந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, வீழ்ச்சி அடைவதற்கு பல காரணங்கள் இருந்த போதிலும், எஃப்ஐஐ விற்பனை மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ள அன்னிய முதலீட்டாளர்கள் பலரும், அதை வெளியே எடுத்து வருகின்றனர். இதன் பொருள், டாலர் சந்தையிலிருந்து டாலர் வெளியேறுகிறது என்பதுதான். கிட்டதட்ட 4 பில்லியன் டாலர்…
பொது வருங்கால வைப்பு நிதி (PPF)மூலம், உங்கள் பணத்தை இரட்டிப்பாக்கலாம்.
பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்பது 15 வருட கால அவகாசம் கொண்ட அரசாங்க ஆதரவு திட்டமாகும். இது தற்போது 7.1% வருடாந்திர வட்டி விகிதத்தை வழங்குகிறது. இது ஆண்டுதோறும் அதிகரிக்கப்படுகிறது. பொது வருங்கால வைப்பு நிதி (PPF) ஒரு விருப்பமான முதலீட்டுத் தேர்வாகத் தொடர்கிறது. அதன் பாதுகாப்பு, உறுதியளிக்கப்பட்ட வருமானம் மற்றும் வரிச் சலுகைகள் ஆகியவற்றினால் புகழ்பெற்றது. இது நீண்டகால நிதித் திட்டமிடலுக்கு உதவுகிறது. ஆனால் PPF கணக்கில் தொடர்ந்து முதலீடு செய்தால் உங்கள்…
NACH பணப் பரிமாற்றத்தில் சிக்கலா? தீர்வுகள் என்ன?
நேஷனல் ஆட்டோமேட்டட் க்ளியரிங் ஹவுஸ் (NACH) அமைப்பு என்பது இந்தியாவில் பிரபலமான தானியங்கி பணம் செலுத்தும் முறையாகும். இதன் மூலம் EMIகள், பயன்பாட்டு கட்டணம் மற்றும் சந்தா போன்றவை செலுத்தப்படுகின்றன. சில நேரங்களில் இதன் மூலம் கட்டணம் செலுத்தும் போது, அதன் பயன்பாடுகள் தோல்வி அடைகின்றன. இதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. நிதிப் பற்றாக்குறை: வங்கி கணக்கில் போதுமான நிதி இல்லாத காரணத்தினால், இந்தப் பணப் பரிவர்த்தனை தோல்வி அடையும். தொழில்நுட்பக் குறைபாடுகள்: சில சமயங்களில், வங்கிகளில்…
நடப்பு நிதியாண்டில், மத்திய அரசின் தங்க பத்திரம் ஏன் வெளியாகவில்லை?
தங்க பத்திரங்கள் (Sovereign Gold Bonds) விற்பனையை இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கியது. மத்திய அரசின் ஆலோசனைப்படி, இந்தப் பத்திரங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளியிடப்படுவது வழக்கம். சில நாட்கள் மட்டுமே, இந்த தங்க பத்திரங்களில் முதலீடு செய்ய அனுமதி வழங்கப்படும். முதலீட்டாளர்களுக்கு தங்க பத்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகு, அதனை அவர்கள் பங்குச் சந்தையில் விற்கவும், வாங்கவும் முடியும். தனி நபர்கள் இந்த தங்க பத்திரங்களில், குறைந்தது ஒரு கிராம்…
ஏற்றுமதியில் சாதனை படைக்கும் தமிழகம்!
தமிழகத்தில் இருந்து, நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை ரூபாய் 1.92 லட்சம் கோடி மதிப்புள்ள பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அதிக ஏற்றுமதியில் காஞ்சிபுரம் 68,666 கோடி ரூபாயுடன் முதலிடத்திலும், சென்னை 22,891 கோடி ரூபாயுடன் இரண்டாவது இடத்திலும், திருப்பூர் 16,371 கோடி ரூபாயுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு. மாவட்டங்களில் பல்வேறு நிறுவனங்கள். மோட்டார் வாகனங்கள், எலக்ட்ரானிக் சாதனங்கள், ஜவுளி உள்ளிட்ட தொழில்களில் அதிகம் ஈடுபட்டுள்ளன. மற்ற மாவட்டங்களில், வேளாண்…
பாதுகாப்பான முதலீடுகள் லாபம் கேரண்டி! நோ ரிஸ்க்.
எதிர்கால திட்டமிடலுக்கு நீண்ட கால முதலீடு நல்லது. ரிஸ்க் குறைவான, கேரண்டியான நிச்சய லாபம் தரக்கடிய சில முதலீட்டுத் திட்டங்களை இந்தப் பதிப்பில் பார்ப்போம். சுகன்யா சம்ருதித் திட்டம் பெண் குழந்தைகளுக்கான கல்வி மற்றும் திருமணத்திற்கு இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். இதில் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ரூ.250 250 முதல் ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும். பெண் குழந்தைக்கு 10 வயது ஆகும் வரை இந்த திட்டத்தில் சேரலாம். ஆனால், ஒரு பெண்…
ரத்தன் டாட்டாவின் மறைவுக்கு பின்னர், டாட்டா டிரஸ்ட் தலைவர் ஆனார், நோயல் டாட்டா
சிறந்த தொழில்துறை தலைவரான ரத்தன் டாட்டா இறந்ததைத் தொடர்ந்து, டாட்டா குழுமத்தின் பாரம்பரியத்தை மேலே கொண்டு செல்லும் பொறுப்பை யார் ஏற்றுக்கொள்வர் என்ற விவாதம் எழுந்தது. இந்நிலையில். ரத்தன் டாட்டாவின் தமையனும், சிறந்த நிர்வாகிகளுள் ஒருவருமான நோயல் டாட்டா, டாட்டா டிரஸ்ட்ஸ் தலைவர் பதவிக்கு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். டாட்டா டிரஸ்ட் குழுமம், சர் தோரப்ஜி டாட்டா டிரஸ்ட் மற்றும் சர் ரத்தன் டாட்டா டிரஸ்ட் ஆகியவற்றின் கீழ் செயல்படுகின்றது, இது டாட்டா சன்ஸ் நிறுவனத்தில் ஒரு முக்கிய…
அந்நியச் செலாவணி கையிருப்பு, 62,560 கோடி டாலராக அதிகரிப்பு
மார்ச் 1- ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில், நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 6.5 கோடி டாலர் உயர்ந்து 62,562.6 கோடி டாலராக உள்ளது. பிப்ரவரி 23-ஆம் தேதியுடன் நிறைவடைந்த முந்தைய வாரத்தில் அது, 297.5 கோடி டாலர் உயர்ந்து 61,907 கோடி டாலராக இருந்தது. அக்டோபர் 2021 இல், நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு, 64,500 கோடி டாலரை எட்டியது. உலகளாவிய பொருளாதார சூழல்களால் ஏற்படும் அழுத்தங்களுக்கு இடையே, ரூபாய் மதிப்பை பாதுகாப்பதற்காக அந்நிய செலாவணி…
உலக நாடுகளின் நாணய வலிமை
சர்வதேச அளவிலான வர்த்தக நடவடிக்கைகளின் உயிர்நாடி நாணயம். இது ஒரு நாட்டின் பொருளாதார ஆற்றலை பிரதிபலிப்பதுடன், வலிமை, ஸ்திரத்தன்மை, வலுவான நிதி ஆரோக்கியத்திற்கு தக்க சான்றாகும். நாணயம் மீதான மதிப்பு உயரும்போது, அந்த நாட்டின் பொருளாதாரத்தின் மீதான நம்பிக்கையும் உயர்கிறது. இதனால் முதலீடுகளை எளிதாக ஈர்க்கவும், சர்வதேச கூட்டாண்மையை வலுப்படுத்தவும் முடியும். அந்த வகையில் ஐக்கிய நாடுகள் சபை, உலகெங்கிலும் உள்ள 180 நாடுகளின் நாணயங்களை சட்டபூர்வமாக அங்கீகரித்துள்ளது. அதில் சில நாணயங்கள் பிரபலமானவை என்பதுடன், அதன்…




