நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news வங்கி எஃப்டி-யை மிஞ்சும் தபால் அலுவலக திட்டம்! 7.5% வட்டி, வரி விலக்குனு லாபம் அள்ளும் முதலீட்டாளர்கள்! Just now
news ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 100% வரி விதிப்பு... அமெரிக்காவில் மசோதா நிறைவேற்றம்! 1 days ago
news Gen Z இளைஞர்கள் கவனத்திற்கு : ஹோம் லோன் எடுப்பதற்கு முன் இந்த ஐந்து விஷயங்களை மறந்துடாதீங்க 2 days ago
news யுபிஐ, இன்டர்நெட் இல்லாமலேயே பணம் அனுப்பலாம்... புதிய வசதியை அறிமுகம் செய்த ரிசர்வ் வங்கி! 11 Sep 2026
news Bank Strike | நாடு முழுவதும் நாளை வங்கிகள் செயல்படுமா..? ஊழியர் சங்கங்கள் சொல்வது என்ன? 10 Sep 2026
news பிசினஸ் தொடங்க கடன் வேணுமா? 16 அரசுத் திட்டங்கள்.. ஒரே தளம்.. வங்கிகளுக்கு அலையாமல் விண்ணப்பிப்பது எப்படி? 09 Sep 2026
news SBI வாடிக்கையாளர்களே அலார்ட்.. செப்டம்பர் 4 யூபிஐ சேவைகள் நிறுத்தப்படும்.. முழு விவரம் இதோ! 04 Sep 2026
news ரூ.10-க்கு ஐஸ்கிரீம் சந்தையில் என்ட்ரி ஆகும் ரிலையன்ஸ்.. அமுல், குவாலிட்டி வால்ஸுக்குப் போட்டியாக களமிறங்கும் 'பாம்பே கிரீமரி'! 03 Sep 2026
news செப்டம்பர் 15 முதல்... சர்க்கரையை 30 நாட்களுக்கு மேல் இருப்பு வைக்கத் தடை: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு! 02 Sep 2026
news உலகத்தின் Pure நெய் பட்டியலில் 6 வது இடத்தைப் பிடித்த அமுல்.. அதிகாரப்பூர்வ பட்டியலை வெளியிட்ட Tasteatles! 29 Aug 2026

தொழில்

பெங்களூரு 2வது விமான நிலையம்: ஓசூர் விமான நிலையத் திட்டத்திற்குப் பின்னடைவா?

Dec 30, 2025 30 Dec 2025 0 Views
பெங்களூருவின் இரண்டாவது சர்வதேச விமான நிலையத்தை அமைப்பதற்கான பணிகளை கர்நாடக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அதே நேரத்தில், தமிழ்நாட்டின் ஓசூர் விமான நிலையத் திட்டத்திற்கு சில சட்டப்பூர்வ கட்டுப்பாடுகள் சவாலாக அமைந்துள்ளன. மத்திய அரசுக்கும் பெங்களூரு சர்வதேச விமான நிலைய நிறுவனத்திற்கும் (BIAL) இடையே கையெழுத்தான சலுகை ஒப்பந்தத்தின்படி, கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்திலிருந்து 150 கிலோமீட்டர் சுற்றளவிற்குள் 2033-ஆம் ஆண்டு வரை வணிக ரீதியான புதிய விமான நிலையம் எதையும் அமைக்க முடியாது.

BIAL ஒப்பந்தமும் NOC சிக்கல்களும்
ஓசூர், பெங்களூரு விமான நிலையத்திற்கு மிக அருகில் இருப்பதால், அங்கிருந்து விமானங்களை இயக்க BIAL நிறுவனத்தின் ‘தடையின்மை சான்றிதழ்’ (NOC) பெறுவது அவசியமாகும். ஒருவேளை BIAL அனுமதி தராவிட்டால், ஓசூர் விமான நிலையப் பணிகளை 2033-க்குப் பிறகுதான் தொடங்க முடியும். அவ்வாறு தொடங்கினால், அது செயல்பாட்டுக்கு வர 2038-40 வரை ஆகலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். இது ஓசூர் விமான நிலையத் திட்டத்திற்குப் பெரும் பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

கர்நாடக அரசின் செல்வாக்கும் ரியல் எஸ்டேட் எச்சரிக்கையும்
பெங்களூருவின் இரண்டாவது விமான நிலையத் திட்டத்தில் கர்நாடக அரசுக்கு ஓசூரை விட கூடுதல் சாதகமான சூழல் உள்ளது. கர்நாடக அரசு BIAL நிறுவனத்தில் 13% பங்குகளைக் கொண்டுள்ளது. தனது இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஓசூர் விமான நிலையத்திற்கு அனுமதி வழங்குவதைத் தாமதப்படுத்தும் வாய்ப்பு கர்நாடக அரசுக்கு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. மேலும், பெங்களூருவின் இரண்டாவது விமான நிலையம் கனகபுரா சாலையில் அமைந்தால், அது ஓசூர் விமான நிலையத்தின் தேவையையே குறைத்துவிடும்.

எனவே, ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இப்போதே ரியல் எஸ்டேட் முதலீடுகளைச் செய்ய வேண்டாம் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். 2033-ஆம் ஆண்டுக்குப் பிறகே இந்தத் திட்டத்தின் தெளிவான நிலவரம் தெரியவரும் என்பதால், நீண்ட கால முதலீட்டாளர்கள் கவனத்துடன் செயல்படுவது அவசியம்.