நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news வங்கி எஃப்டி-யை மிஞ்சும் தபால் அலுவலக திட்டம்! 7.5% வட்டி, வரி விலக்குனு லாபம் அள்ளும் முதலீட்டாளர்கள்! Just now
news ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 100% வரி விதிப்பு... அமெரிக்காவில் மசோதா நிறைவேற்றம்! 1 days ago
news Gen Z இளைஞர்கள் கவனத்திற்கு : ஹோம் லோன் எடுப்பதற்கு முன் இந்த ஐந்து விஷயங்களை மறந்துடாதீங்க 2 days ago
news யுபிஐ, இன்டர்நெட் இல்லாமலேயே பணம் அனுப்பலாம்... புதிய வசதியை அறிமுகம் செய்த ரிசர்வ் வங்கி! 11 Sep 2026
news Bank Strike | நாடு முழுவதும் நாளை வங்கிகள் செயல்படுமா..? ஊழியர் சங்கங்கள் சொல்வது என்ன? 10 Sep 2026
news பிசினஸ் தொடங்க கடன் வேணுமா? 16 அரசுத் திட்டங்கள்.. ஒரே தளம்.. வங்கிகளுக்கு அலையாமல் விண்ணப்பிப்பது எப்படி? 09 Sep 2026
news SBI வாடிக்கையாளர்களே அலார்ட்.. செப்டம்பர் 4 யூபிஐ சேவைகள் நிறுத்தப்படும்.. முழு விவரம் இதோ! 04 Sep 2026
news ரூ.10-க்கு ஐஸ்கிரீம் சந்தையில் என்ட்ரி ஆகும் ரிலையன்ஸ்.. அமுல், குவாலிட்டி வால்ஸுக்குப் போட்டியாக களமிறங்கும் 'பாம்பே கிரீமரி'! 03 Sep 2026
news செப்டம்பர் 15 முதல்... சர்க்கரையை 30 நாட்களுக்கு மேல் இருப்பு வைக்கத் தடை: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு! 02 Sep 2026
news உலகத்தின் Pure நெய் பட்டியலில் 6 வது இடத்தைப் பிடித்த அமுல்.. அதிகாரப்பூர்வ பட்டியலை வெளியிட்ட Tasteatles! 29 Aug 2026

தொழில்

ஜியோ, ஏர்டெல் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி! ஜூன் 2026 முதல் ரீசார்ஜ் கட்டணம் 15% உயர்வு?

Jan 10, 2026 10 Jan 2026 0 Views
இந்தியாவில் தொலைத்தொடர்பு சேவையில் முன்னணியில் உள்ள ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் வரும் ஜூன் 2026-க்குள் மீண்டும் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சர்வதேச நிதி நிறுவனமான ஜெஃப்ரீஸ் (Jefferies) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் இந்தத் தகவல் இடம்பெற்றுள்ளது.

ஜெஃப்ரீஸ் அறிக்கையும் 15% கட்டண உயர்வும்
கடந்த 2024 ஜூன் மாதத்தில் செல்போன் கட்டணங்கள் 15 முதல் 25 சதவீதம் வரை உயர்த்தப்பட்ட நிலையில், சரியாக இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்த உயர்வு வரவுள்ளது. வரும் ஜூன் 2026-க்குள் மொபைல் ரீசார்ஜ் கட்டணங்கள் 15% வரை உயர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. ஜியோ நிறுவனத்தின் ஐபிஓ (IPO) வெளியீடு மற்றும் ஒட்டுமொத்த தொலைத்தொடர்பு துறையின் மதிப்பினை உயர்த்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படலாம் எனக் கருதப்படுகிறது.

வாடிக்கையாளர்களை அதிவேக 5ஜி தொழில்நுட்பத்திற்கு மாற்றவும், ஒரு பயனருக்கான சராசரி வருவாயை (ARPU) அதிகரிக்கவும் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. தற்போது பெரும்பாலான மக்கள் ஸ்மார்ட்போன் மற்றும் அதிக டேட்டா கொண்ட திட்டங்களையே பயன்படுத்துவதால், நிறுவனங்கள் டேட்டா இல்லாத பழைய ரீசார்ஜ் திட்டங்களை முழுமையாகக் கைவிட்டு வருகின்றன. இதன் மூலம் நிறுவனங்களின் லாபம் 2027-ஆம் ஆண்டில் 16 சதவீதம் வரை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிஎஸ்என்எல் நோக்கித் திரும்பும் வாடிக்கையாளர்கள்
தனியார் நிறுவனங்களின் இத்தகைய தொடர் கட்டண உயர்வுகளால், நடுத்தர வர்க்க மக்கள் மீண்டும் அரசுக்குச் சொந்தமான பிஎஸ்என்எல் (BSNL) பக்கம் திரும்ப வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது. வோடபோன் ஐடியா நிறுவனம் தனது கடன் நிலுவைகளைச் சமாளிக்க 2030-ஆம் ஆண்டிற்குள் ஒட்டுமொத்தமாக 40% வரை கட்டணங்களை உயர்த்தத் திட்டமிட்டுள்ளதும் வாடிக்கையாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.