நமது வணிகம் நிகழ்வுகள்-நமது வணிகம் நியூஸ் 24/7
Youtube Live
Banner
LATEST NEWS
news வங்கி எஃப்டி-யை மிஞ்சும் தபால் அலுவலக திட்டம்! 7.5% வட்டி, வரி விலக்குனு லாபம் அள்ளும் முதலீட்டாளர்கள்! Just now
news ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு 100% வரி விதிப்பு... அமெரிக்காவில் மசோதா நிறைவேற்றம்! 1 days ago
news Gen Z இளைஞர்கள் கவனத்திற்கு : ஹோம் லோன் எடுப்பதற்கு முன் இந்த ஐந்து விஷயங்களை மறந்துடாதீங்க 2 days ago
news யுபிஐ, இன்டர்நெட் இல்லாமலேயே பணம் அனுப்பலாம்... புதிய வசதியை அறிமுகம் செய்த ரிசர்வ் வங்கி! 11 Sep 2026
news Bank Strike | நாடு முழுவதும் நாளை வங்கிகள் செயல்படுமா..? ஊழியர் சங்கங்கள் சொல்வது என்ன? 10 Sep 2026
news பிசினஸ் தொடங்க கடன் வேணுமா? 16 அரசுத் திட்டங்கள்.. ஒரே தளம்.. வங்கிகளுக்கு அலையாமல் விண்ணப்பிப்பது எப்படி? 09 Sep 2026
news SBI வாடிக்கையாளர்களே அலார்ட்.. செப்டம்பர் 4 யூபிஐ சேவைகள் நிறுத்தப்படும்.. முழு விவரம் இதோ! 04 Sep 2026
news ரூ.10-க்கு ஐஸ்கிரீம் சந்தையில் என்ட்ரி ஆகும் ரிலையன்ஸ்.. அமுல், குவாலிட்டி வால்ஸுக்குப் போட்டியாக களமிறங்கும் 'பாம்பே கிரீமரி'! 03 Sep 2026
news செப்டம்பர் 15 முதல்... சர்க்கரையை 30 நாட்களுக்கு மேல் இருப்பு வைக்கத் தடை: மத்திய அரசின் அதிரடி அறிவிப்பு! 02 Sep 2026
news உலகத்தின் Pure நெய் பட்டியலில் 6 வது இடத்தைப் பிடித்த அமுல்.. அதிகாரப்பூர்வ பட்டியலை வெளியிட்ட Tasteatles! 29 Aug 2026

தொழில்

பட்ஜெட்: இனி உங்க மாவட்டத்திலேயே ஐடி வேலை- டைடல் பூங்காக்கள் குறித்து வெளியான முக்கிய அறிவிப்பு!!

Feb 17, 2026 17 Feb 2026 0 Views
தமிழக நிதி துறை அமைச்சர் தங்கம் தென்னரசு 2026-2027ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். இதில் பல்வேறு மாவட்டங்களுக்கும் சிறப்பு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

ஐடி வேலைவாய்ப்புகளை பெருக்கும் டைடல் பூங்காக்கள் மாநிலத்தின் பல்வேறு நகரங்களில் கட்டப்பட்டு வருவதை குறிப்பிட்ட நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு. திருச்சி, மதுரை, ஓசூர் ஆகிய நகரங்களில் 1070 கோடி ரூபாய் முதலீட்டில் புதிதாக டைடல் பூங்காக்களை கட்டி வருவதை சுட்டிக்காட்டினார். அதே போல விழுப்புரம், தஞ்சாவூர், சேலம், தூத்துக்குடி, வேலூர், காரைக்குடி, திருப்பூர் ஆகிய இடங்களில் 7 நியோ டைடல் பூங்காக்கள் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

நாமக்கல், திருவண்ணாமலை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, நாகப்பட்டினம், கரூர், புதுக்கோட்டை ஆகிய 9 நகரங்களில் நியோ டைடல் பூங்காக்கள் 388 கோடி ரூபாயில் பணிகள் நடைபெற்று வருகின்றன என கூறினார். இதனால் 25,000க்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகும் என தெரிவித்தார். இதன் மூலம் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஐடி வேலைகள் என்ற நிலையை நோக்கி தமிழ்நாடு படிப்படியாக முன்னேறி வருகிறது. டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும் மூலம் ஐடி நிறுவனங்கள் சென்னை, கோவை போன்ற நகரங்களை கடந்து இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களையும் சென்றடைகின்றன. இதன் மூலம் அந்தந்த மாவட்டங்களிலேயே ஐடி வேலை வாய்ப்புகள் உறுதி செய்யப்படுகின்றன. Als

தகவல் தொழில்நுட்பத்துறைக்கு ரூ.219 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக கூறிய அவர் தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 2.5 லட்சம் கோடி தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ஏற்றுமதி நடப்பதாக கூறினார். அமைச்சர் தங்கம் தென்னரசு சென்னையில் 250க்கும் அதிகமான உலகளாவிய திறன் மையங்கள் உள்ளன, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களிலும் உலகளாவிய திறன் மையங்கள் அமைக்கப்படுவது ஊக்குவிக்கப்படுவதாக தெரிவித்தார்.

விரைவில் தமிழ்நாட்டிற்கான கப்பல் கட்டுமான கொள்கை அறிவிக்கப்படும் என தெரிவித்த அவர் தூத்துக்குடியில் 5,200 கோடி ரூபாய் முதலீட்டில் கப்பல் கட்டும் தளம் அமைக்கப்படும் என அறிவித்தார்.அதே போல வளர்ச்சி அடைந்து வர கூடிய செமி கண்டக்டர் பிரிவில் தமிழ்நாடு முன்னிலை வகிக்க ஏதுவாக தமிழ்நாடு செமி கண்டக்டர் இயக்கம் 2030 விரைவில் அறிவிக்கப்படும் சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பில் இந்த இயக்கம் செயல்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.