இந்திய ரிசர்வ் வங்கியின் 26 ஆவது ஆளுநராக முன்னாள் வருவாய்த்துறை செயலர் சஞ்சய் மல்கோத்ரா(56) பொறுப்பேற்றுள்ளார்.
2024 டிசம்பர் 10ஆம் தேதி உடன் சக்தி காந்த தாஸ் அவர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து புதிய ஆளுநராக சஞ்சய் மல்கோத்ரா பொறுப்பேற்றுள்ளார். இவர் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இப்பதவியில் நீடிப்பார். கணினி அறிவியல் பொறியாளர் ஆன சஞ்சய் மல்கோத்ரா கான்பூர் ஐஐடியில் பட்டம் பெற்றவர். 1990 ஆம் ஆண்டு ராஜஸ்தான் பிரிவு ஐஏஎஸ் அதிகாரி ஆவார்.
அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில், பொதுக் கொள்கைகள் துறையில் மேற்படிப்பை முடித்தவர். கடந்த 33 ஆண்டுகளாக மின்சக்தி, நிதி, வரி, தகவல் தொழில்நுட்பம், சுரங்கம் உள்ளிட்ட துறைகளில் பணியாற்றிய அனுபவம் மிக்கவர். இதற்கு முன், மத்திய நிதி அமைச்சகத்தில் வருவாய் துறை செயலாளராக இருந்தவர். மத்திய, மாநில அரசுகள் அளவில், நிதி மற்றும் வரிவிதிப்பு துறையில் நீண்டகால அனுபவம் மிக்கவர். பொருளாதர வளர்ச்சியில் இந்தியா முக்கியமான காலகட்டத்தில் உள்ள இந்தச் சூழலில், ரிசர்வ் வங்கி ஆளுநராக சஞ்சய் மல்கோத்ரா அவர்கள் நியமிக்கப்பட்டிருப்பது கவனம் பெற்றுள்ளது.




