எங்கும் எதிலும் மோசடிகள். இப்பொழுது பெயரிலும்…உஷார்!

பங்குச் சந்தை மோசடிகள் முன்பேல்லாம் அங்கே ஒன்று, இங்கே ஒன்று என்று இருந்த காலம் போய், இப்பொழுது பங்குச்சந்தையைப் பயன்படுத்தியே முழுநேர மோசடியில் ஈடுபடும் நிறுவனங்கள் நிறைய முளைத்துவிட்டன.

மெசேஜ்கள் பின்னால் வரும். ஆனால், அதை நம்பவே நம்பாதீர்கள். பங்குச்சந்தையில் நீங்கள் முதலீடு செய்யும்போது முகம் தெரியாத, முன்பின் தெரியாத யாருடைய அறிவுரையையும் கண்டிப்பாக ஏற்காதீர்கள். அவர்கள் பரிந்துரைப்பதுப்போல பரிந்துரைத்து நாம் முதலீடு செய்யும் பணத்தை திருடிவிடுவார்கள்.

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் போஸ்ட் மூலம் இந்த மோசடிகள் வரலாம். ஆகையால், மோசடிகள் எதில் வந்தாலும், எத்தனை டைப்களில் வந்தாலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டியது நம் கடமை.

ஆன்லைன் மட்டுமில்லாமல் கைபேசி வழியாக வரும் எந்தவொரு முகம் தெரியாத முதலீட்டு ஆலோசனைகளையும் ஏற்காமல் இருப்பதே இதுபோன்ற மோசடிகளில் இருந்து முழுதாக தப்பிக்கும் வழி.