இந்தியாவின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில், யூனிஃபைடு பேமெண்ட்ஸ் இன்டர்பேஸ் எனப்படும், யுபிஐ இன் பங்கு 83 சதவீதமாக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் பணம் செலுத்தல் முறையில், கடந்த 2019 ஆம் ஆண்டில் யுபிஐ-ன் பங்கு 34 சதவீதமாக இருந்தது. இது சென்ற வருடம் வியக்கத்தக்க வகையில் 83 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் யுபிஐயின் ஒட்டுமொத்த சராசரி வளர்ச்சி 74 சதவீதமாகும்.
பொது மக்களிடையே, யுபிஐ பயன்பாடு அதிகரித்துள்ள அதே நேரம், ஆர்டிஜிஎஸ்,நெப்ட், ஐஎம்பிஎஸ், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு உள்ளிட்ட டிஜிட்டல் பேமெண்ட்களின் பயன்பாடு 66 சதவீதத்திலிருந்து 17 சதவீதமாக குறைந்துள்ளது.
பயன்படுத்துவதற்கு எளிதாக இருப்பதால், டிஜிட்டல் பேமெண்ட் வளர்ச்சியில் யுபிஐயின் பங்கு கணிசமான அளவில் அதிகரித்து வருகிறது. கடந்த 2018 இல் யுபிஐ பரிமாற்றம் 375 கோடியாக இருந்தது. அதே நேரம் 2024 இல் அது 1721 கோடியாக உயர்ந்துள்ளது. அதன்படி,யுபிஐ பரிவர்த்தனையின் ஒட்டுமொத்த மதிப்பு ரூபாய் 6 லட்சம் கோடியில் இருந்து 250 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.




