இந்திய ஜவுளி ஏற்றுமதி, ஏழு சதவீதம் அதிகரிப்பு

இந்தியாவில், ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதி கடந்த ஏப்ரல்- அக்டோபர் காலகட்டத்தில், ஏழு சதவீதம் உயர்ந்துள்ளது.

கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான, நடப்பு நிதியாண்டின் முதல் ஏழு மாதங்களில், கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட நாட்டின் ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதி 2,136 கோடி டாலராக உள்ளது.

இது முந்தைய 2023-24 ஆம் நிதி ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் ஏழு சதவீதம் அதிகம். நடப்பு 2024-25 ஆம் நிதி ஆண்டின் ஏப்ரல் அக்டோபர் காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட, ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதியில் ஆயத்த ஆடைகள் பிரிவு 41 சதவீதம் பங்கு வகித்தது. அந்தக் காலகட்டத்தில் 875 கோடி மதிப்பிலான ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி ஆகின. அதைத்தொடர்ந்து ஏற்றுமதியில் 33 சதவீதம் பங்கு வகிக்கும், பருத்தி ஜவுளி பொருட்கள் ஏற்றுமதி 710 கோடிடாலராக இருந்தது. மதிப்பீட்டு காலகட்டத்தின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 15 சதவீதம் பங்கு வகித்த கைத்தறி ஜவுளி பொருட்கள் ஏற்றுமதி 310 கோடி டாலராக இருந்தது.