இந்தியாவில் ரூபாய் 25,000 கோடி முதலீடு – மைக்ரோசாப்ட்

அமெரிக்காவைச் சேர்ந்த ‘மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) சத்யா நாதெல்லா ஜனவரி முதல் வாரத்தில் இந்தியா செ வருகை புரிந்தார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்து பேசிய மைக்ரோசாப்ட் சிஇஓ, தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கட்டமைப்பை விரிவாக்கம் செய்வது ஆகியவை குறித்து ஆலோசித்தார்.

பிரதமருடனான சந்திப்புக்கு பின், பெங்களூருவில் நடைபெற்ற, “மைக்ரோசாப்ட் ஏஐ டூர்” நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சத்யா நாதெல்லா பேசியதாவது,

இந்தியாவின் கிளவுடு மற்றும் செயற்கை நுண்ணறிவு திறனை மேம்படுத்துவதற்காக, அடுத்த இரண்டு ஆண்டுகளில் மைக்ரோசாப்ட் நிறுவனம் 3 பில்லியன் டாலரை (ரூபாய் 25,000 கோடி) முதலீடு செய்ய உள்ளது.

இந்த முதலீடு அதிகரித்து வரும் கிளவுடு சேவைகள் மற்றும் ஏஐ கட்டமைப்புக்கு ஆதரவளிக்கும். இதன் மூலம் வரும் 2030 ஆம் ஆண்டுக்குள், இந்தியாவில் ஒரு கோடி பேருக்கு ஏஐ குறித்து பயிற்சி அளிப்பது தான் எங்கள் நோக்கம்.

எங்கள் நிறுவனம், இந்தியாவில் பிராந்திய அளவில் பரவலாக விரிவாக்கம் செய்து வருகிறது. இந் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு நபருக்கும், நிறுவனத்துக்கும் அதிகாரம் அளிக்க வேண்டும் என்ற மைக்ரோசாப்டின் நோக்கம் தான் இந்த நிறுவனத்தை இயக்குகிறது’. இவ்வாறு அவர் தெரிவித்தார்.