Namathu Vanikam Media

டாடா டிரென்ட் பங்குகள் 19% வீழ்ச்சி

டாடா குழுமத்தின் டிரென்ட் பங்குகள் ஏப்ரல் 7 அன்று 19% சரிந்தன. நான்காவது காலாண்டு வருவாய் எதிர்பார்த்ததைவிட குறைவாக இருந்ததாலும், ஆய்வாளர் நிறுவனங்கள் இலக்குகளை குறைத்ததாலும் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

Read More

பங்குச்சந்தையில் ₹14 லட்சம் கோடி இழப்பு!

அமெரிக்காவின் புதிய வரிவிதிப்பு காரணமாக இந்திய பங்குச்சந்தை கடுமையாக வீழ்ந்தது. சென்செக்ஸ் 2,200 புள்ளிகளுக்கும் மேலாக சரிந்து, ₹14 லட்சம் கோடியை முதலீட்டாளர்கள் இழந்தனர்.

Read More

சூடு பிடிக்கும் சைனா செமிகண்டக்டர் துறை!

உலக சந்தையில் செமிகண்டக்டர் துறையில் முன்னணி வகிக்கும் நிறுவனங்களில் எம் சைனா நிறுவனம்.” ஒன்று ஆர். சமீபத்தில், ஆர். எம். சைனா நிறுவனம் தனது தலைமை அதிகாரியாக டாக்டர் ரென்சென் லியுவை நியமித்துள்ளது. டாக்டர் லியு, சீனாவின் தொழில்நுட்ப துறையில் பல ஆண்டுகளாகப் பணியாற்றி, பல தொழில்நுட்ப முதலீட்டு நிதிகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களில் பொது மேலாளர் அல்லது முதலீட்டு குழு உறுப்பினராக இருந்துள்ளார். நநதுள்ளார். அவரின் அனுபவம், ஆர்.எம். சைனா நிறுவனத்தின் வளர்ச்சிக்கும், புதிய வாய்ப்புகளைத்…

Read More

வட்டி விகிதங்களைக் குறைக்கும் ஆஸ்திரேலிய வங்கிகள்!

ஆஸ்திரேலியாவின் அடிப்படை பணவீக்கம் எப்போதுமில்லாத வகையில் 3.2 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது கடந்த மூன்று ஆண்டுகளில் காணப்பட்ட மிகக் குறைந்த அளவாகும். இந்த மாற்றம், ஆஸ்திரேலிய ரிசர்வ் வங் (RBA) வட்டி விகிதங்களை குறைக்க எடுக்கும் முடிவின் வாய்ப்பை அதிகரிக்கிறது. முந்தைய காலங்களில், RBA, தனது வட்டி விகிதங்களை 4.35 சதவீதமாக உயர்த்தியது, ஆனால் தற்போதைய பணவீக்கம் குறைவதால், வட்டி விகிதங்களை குறைக்கும் முடிவை எடுக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. “டிலாய்ட் அசெஸ் எகனாமிக்ஸ்” அறிக்கையின் படி, RBA…

Read More

இந்திய ஜவுளி ஏற்றுமதி, ஏழு சதவீதம் அதிகரிப்பு

இந்தியாவில், ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதி கடந்த ஏப்ரல்- அக்டோபர் காலகட்டத்தில், ஏழு சதவீதம் உயர்ந்துள்ளது. கடந்த ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான, நடப்பு நிதியாண்டின் முதல் ஏழு மாதங்களில், கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட நாட்டின் ஜவுளி மற்றும் ஆடை ஏற்றுமதி 2,136 கோடி டாலராக உள்ளது. இது முந்தைய 2023-24 ஆம் நிதி ஆண்டின் இதே காலகட்டத்தோடு ஒப்பிடுகையில் ஏழு சதவீதம் அதிகம். நடப்பு 2024-25 ஆம் நிதி ஆண்டின் ஏப்ரல் அக்டோபர் காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட,…

Read More

மீண்டெழுந்த அசுல் ஏர்லைன்ஸ்!

பிரேசிலின் முன்னணி விமான நிறு நிறுவனமான அசுல் (Azul) தனது கடன் மறுசீரமைப்பு (Debt Re-structuring) திட்டத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது. இதன் மூலம் நிறுவனம் தனது $1.6 பில்லியன் கடனை குறைத்து, புதிய முதலீடாக $525 மில்லியன் திரட்டியுள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம், அசுலின் நிதி நிலைத்தன்மை (Financial Stability) அதிகரித்து, அதன் கடன் விகிதம் 4.8 முதல் 34 ஆகக் குறைந்துள்ளது. இதன் விளைவாக, நிறுவனம் வருடத்திற்கு $170.7 மில்லியன் (சுமார் 1 பில்லியன் ரியாஸ்)…

Read More

இந்தியாவில் ரூபாய் 25,000 கோடி முதலீடு – மைக்ரோசாப்ட்

அமெரிக்காவைச் சேர்ந்த ‘மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) சத்யா நாதெல்லா ஜனவரி முதல் வாரத்தில் இந்தியா செ வருகை புரிந்தார். இந்திய பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்து பேசிய மைக்ரோசாப்ட் சிஇஓ, தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) கட்டமைப்பை விரிவாக்கம் செய்வது ஆகியவை குறித்து ஆலோசித்தார். பிரதமருடனான சந்திப்புக்கு பின், பெங்களூருவில் நடைபெற்ற, “மைக்ரோசாப்ட் ஏஐ டூர்” நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சத்யா நாதெல்லா பேசியதாவது, இந்தியாவின் கிளவுடு மற்றும்…

Read More

ரூபாய் 34,300 கோடி முதலீட்டில், தேசிய முக்கிய கனிமங்கள் திட்டம். மத்திய அமைச்சரவை ஒப்புதல்

வேகமாக வளர்ந்து வரும் தூய எரிசக்தி தொழில்நுட்பங்கள் மற்றும் காற்றாலை உள்ளிட்ட ளிட்ட மின் உள்ளிட் மின் உற்பத்தி நிறுவனங்களின் விரிவாக்க தேவைகள், மின்சார வாகனங்கள் மற்றும் அவற்றுக்கான மின்கல உற்பத்தி உள்ளிட்டவற்றுக்கு, லித்தியம், நிக்கல், கோபால்ட், செம்பு போன்ற முக்கிய கனிமங்களின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவின் பசுமை எரிசக்தி துறையில் தன்னிறைவை அடையும் வகையில், ஏழு ஆண்டுகள் செயல்படுத்த இருக்கும் தேசிய முக்கிய கனிமங்கள் திட்டத்திற்கு மொத்தம் ரூபாய் 34,300 கோடி செலவாகும்…

Read More

சிறிய ஸ்டார்ட்அப் நிறுவனம் உருவாக்கிய பெரிய விஷயம்!

சீனாவின் டீப்சீக் (DeepSeek) என்ற செயற்கை நுண்ணறிவு (AI) மாடல், உலகளாவிய தொழில்நுட்ப சந்தைகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த செலவில் திறமையான செயல் மாடல், குறைந்த செயல்திறனை வழங்கி, அமெரிக்காவின் முன்னணி AI நிறுவனங்களை சவாலுக்கு ஆளாக்கியுள்ளது. டீப்சீக், ஹாங்காங் நகரில் 2023 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. அதன் முதல் AI மாடல், அதே ஆண்டில் வெளியிடப்பட்டது. இந்த மாடல், குறைந்த செலவில் அதிக செயல்திறனை வழங்கி, OpenAl மற்றும் Google போன்ற நிறுவனங்களின் மாடல்களை…

Read More

இந்தியாவில் யுபிஐயி-ன் அசுர வளர்ச்சி டிஜிட்டல் பரிவர்த்தனையில், 83 சதவீதத்தை பிடித்தது

இந்தியாவின் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையில், யூனிஃபைடு பேமெண்ட்ஸ் இன்டர்பேஸ் எனப்படும், யுபிஐ இன் பங்கு 83 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் பணம் செலுத்தல் முறையில், கடந்த 2019 ஆம் ஆண்டில் யுபிஐ-ன் பங்கு 34 சதவீதமாக இருந்தது. இது சென்ற வருடம் வியக்கத்தக்க வகையில் 83 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில் யுபிஐயின் ஒட்டுமொத்த சராசரி வளர்ச்சி 74 சதவீதமாகும். பொது மக்களிடையே, யுபிஐ பயன்பாடு அதிகரித்துள்ள அதே நேரம், ஆர்டிஜிஎஸ்,நெப்ட், ஐஎம்பிஎஸ், கிரெடிட் கார்டு,…

Read More

சிட்டி யூனியன் வங்கி ஏழு விருதுகள் வென்று சாதனை!

அண்மையில், 2025 ஜனவரி 24 அன்று மும்பையில் நடைபெற்ற 20வது வருடாந்திர தொழில்நுட்ப மாநாடு, கண்காட்சி மற்றும் விருதுகள் 2024′ ல் சிட்டி யூனியன் வங்கி ஏழு விருதுகளை வென்றுள்ளது. இந்த விருதுகள் வங்கியின் தொழில்நுட்ப மேம்பாடுகளுக்கு கிடைத்த பெருமையான அங்கீகாரமாக சிட்டி யூனியன் வங்கியின் மேலாண்மைக் குழு தெரி வித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் டி. ரபி சங்கர், சிட்டி யூனியன் வங்கியின் செயல் இயக்குநர் விஜய் ஆனந்த் தலைமையிலான குழுவிடம் சிறந்த…

Read More

தேவைப்படும் நேரத்தில், பி.எஃப் பணத்தை ஏடிஎம்மில் எடுக்கும் வசதி, விரைவில் அறிமுகம்

பி.எஃப் பணத்தை இனி ஏ.டி.எம் மூலமாக எடுப்பதற்கான வசதியை நடைமுறைப்படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்கான தகவல் தொழில்நுட்ப பணிகள் விரைவில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊழியர் வருங்கால வைப்பு நிதி ஆணையம், EPFO 3.0 என்ற அடிப்படையில், தனது தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறது. இதற்கான முதல் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் அனைத்தும், வரும் ஜூன் மாதத்திற்குள் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 5-6 மாதங்களாக ஊழியர் வருங்கால வைப்பு…

Read More

Startup நிறுவனங்கள் தொடங்குவதில், தமிழகம் தொடர்ந்து சாதனை

தமிழகத்தில், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்குபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கு தமிழக அரசு மேற்கொள்ளும் பல்வேறு முயற்சிகளின் விளைவாக, 23-12-2024 நிலவரப்படி தமிழகத்தில் 10,005 நிறுவனங்கள் உள்ளன. கடந்த 3 ஆண்டுகளில் ஸ்டார்ட் அப்-களின் எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரித்து 10,000 என்ற இலக்கை அடைந்திருப்பது மிகப்பெரிய சாதனை ஆகும். 2021ம் ஆண்டு மார்ச் மாதத்தில் 2,300 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மட்டுமே…

Read More

ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி, யாருக்கு பயன் அளிக்கும்?

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு பெரும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. அதாவது, ரூபாயின் மதிப்பு 85-க்கு மேல் சரிந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, வீழ்ச்சி அடைவதற்கு பல காரணங்கள் இருந்த போதிலும், எஃப்ஐஐ விற்பனை மிக முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ள அன்னிய முதலீட்டாளர்கள் பலரும், அதை வெளியே எடுத்து வருகின்றனர். இதன் பொருள், டாலர் சந்தையிலிருந்து டாலர் வெளியேறுகிறது என்பதுதான். கிட்டதட்ட 4 பில்லியன் டாலர்…

Read More

பொது வருங்கால வைப்பு நிதி (PPF)மூலம், உங்கள் பணத்தை இரட்டிப்பாக்கலாம்.

பொது வருங்கால வைப்பு நிதி (PPF) என்பது 15 வருட கால அவகாசம் கொண்ட அரசாங்க ஆதரவு திட்டமாகும். இது தற்போது 7.1% வருடாந்திர வட்டி விகிதத்தை வழங்குகிறது. இது ஆண்டுதோறும் அதிகரிக்கப்படுகிறது. பொது வருங்கால வைப்பு நிதி (PPF) ஒரு விருப்பமான முதலீட்டுத் தேர்வாகத் தொடர்கிறது. அதன் பாதுகாப்பு, உறுதியளிக்கப்பட்ட வருமானம் மற்றும் வரிச் சலுகைகள் ஆகியவற்றினால் புகழ்பெற்றது. இது நீண்டகால நிதித் திட்டமிடலுக்கு உதவுகிறது. ஆனால் PPF கணக்கில் தொடர்ந்து முதலீடு செய்தால் உங்கள்…

Read More

108 வருட பழமையான நிறுவனம்… வைரலாகும் ஆனந்த் மஹிந்திராவின் பதிவு!

108 வருட பழமையான சோப் நிறுவனம் குறித்த, ஆனந்த் மஹிந்திராவின் ஏக்கமான எக்ஸ் தள பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 100 சதவீதம் சந்தன எண்ணெயை பயன்படுத்தி உற்பத்தியாகும் உலகின் ஒரே சோப் என்று கூறப்படும், ‘மைசூர் சாண்டல் சோப்’ 1916 முதல் கிடைக்கிறது. மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா, சமீபத்திய தனது எக்ஸ் பதிவில், கர்நாடகா சோப்ஸ் அண்ட் டிடர்ஜென்ட்ஸ் லிமிடெட் (KSDL) தயாரிக்கும், பாரம்பரிய பிராண்டான மைசூர் சாண்டல் சோப்பைப் பாராட்டினார்….

Read More

ஆன்லைன் மோசடிகள், விழிப்புடன் இருப்பது எப்படி?

மோசடிக்காரர்கள் பொதுமக்களை ஏமாற்றுவதற்கு எந்தெந்த யுக்திகளை பயன்படுத்துகிறார்கள் என்பது சம்பந்தமான விவரங்களை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ளது. சைபர் கிரைம்கள் இந்தியா முழுவதும் தொடர்ந்து அதிகரித்து வரும் இந்த சமயத்தில் SBI மக்களை எச்சரிக்கும் இந்த அற்புதமான வேலையில் ஈடுபட்டுள்ளது. சைபர் கிரிமினல்கள் பயன்படுத்தும் 10 பொதுவான ட்ரிக்குகள்.. TRAI போன் மோசடி: ஒரு சில சைபர் கிரிமினல்கள் தாங்கள் TRAI அதிகாரிகள் என்று கூறி, மொபைல் சேவைகளை துண்டித்து விடுவதாக பயமுறுத்தி, அதிகாரப்பூர்வமற்ற செயல்கள்…

Read More

சிபில் vs கிரெடிட் ஸ்கோர்; கடன் வாங்குவதற்கு இரண்டில் எது தேவை?

உங்களுடைய கடன் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு பொருளாதார ஆரோக்கியத்தை சிறந்த முறையில் பராமரிப்பது மிகவும் அவசியம். பர்சனல் லோனாக இருந்தாலும் சரி அல்லது ஒரு கிரெடிட் கார்டாக இருந்தாலும் சரி நீங்கள் நிச்சயமாக கிரெடிட் ஸ்கோர் மற்றும் சிபில் ஸ்கோர் போன்ற வார்த்தைகளை கேட்டிருக்க வேண்டும். எந்த ஒரு கடனுக்கு விண்ணப்பிப்பதற்கு முன்பும் இந்த இரண்டு ஸ்கோர்களுக்கு இடையிலான வித்தியாசத்தை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இது குறித்து இந்த பதிவில் விளக்கமாக பார்க்கலாம். கிரெடிட் ஸ்கோர்…

Read More

தமிழக அரசு, கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம்; 20 லட்சம் இளைஞர்களுக்கு பயிற்சி

தமிழ்நாட்டில் சுமார் 20 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு குறித்து, செயற்கை நுண்ணறிவுடன் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க, கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, தமிழக தொழிற்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தெரிவித்ததாவது., தொழில் முதலீட்டாளர் மாநாட்டில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் அனைத்தையும் செயல்படுத்தும் பணிகள் நடைபெறுகிறது. அதற்காக எனது தலைமையில், தலைமைச் செயலாளர் மற்றும் அனைத்து துறை செயலாளர்கள் இணைந்த ஒருங்கிணைப்புக் குழுவை முதலமைச்சர் ஸ்டாலின் உருவாக்கியுள்ளார். இந்த குழு சார்பில்,…

Read More

கோவையில் சர்வதேச பருத்தி கவுன்சில் கூட்டம்; புதிய தர அளவீட்டு கருவி அறிமுகம்

ஜவுளித்துறையின் சிறப்பான வளர்ச்சிக்கான, நவீன முன்னேற்றங்கள் மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து, தொழில்துறை தலைவர்கள் மற்றும் நிபுணர்கள் கலந்து கொண்ட ‘பருத்தி தினம் 2024’ நிகழ்வு கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் ஓட்டல் அரங்கில் நடைபெற்றது. சர்வதேச பருத்தி கவுன்சில் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், நிலைத்தன்மை, தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய வர்த்தகத்தில் கவனம் செலுத்துதல், உலகளாவிய பருத்தி உற்பத்தியில் அமெரிக்க பருத்தி மற்றும் இந்திய ஜவுளித் துறையின் பங்கு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், இதில் தொழில்துறையின்…

Read More

NACH பணப் பரிமாற்றத்தில் சிக்கலா? தீர்வுகள் என்ன?

நேஷனல் ஆட்டோமேட்டட் க்ளியரிங் ஹவுஸ் (NACH) அமைப்பு என்பது இந்தியாவில் பிரபலமான தானியங்கி பணம் செலுத்தும் முறையாகும். இதன் மூலம் EMIகள், பயன்பாட்டு கட்டணம் மற்றும் சந்தா போன்றவை செலுத்தப்படுகின்றன. சில நேரங்களில் இதன் மூலம் கட்டணம் செலுத்தும் போது, அதன் பயன்பாடுகள் தோல்வி அடைகின்றன. இதற்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. நிதிப் பற்றாக்குறை: வங்கி கணக்கில் போதுமான நிதி இல்லாத காரணத்தினால், இந்தப் பணப் பரிவர்த்தனை தோல்வி அடையும். தொழில்நுட்பக் குறைபாடுகள்: சில சமயங்களில், வங்கிகளில்…

Read More

கைவினை கலைஞர்களை, ‘தொழில் முனைவோராக்கும்’ கலைஞர் கைவினை திட்டம்

ரூபாய் 3 லட்சம் வரை கடனுதவி வழங்கும் கலைஞர் கைவினை திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளுமாறு கைவினை கலைஞர்களுக்கு தமிழக சிறு,குறு தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். சமூக நீதி அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள கைவினை கலைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலும், அவர்களை தொழில்முனைவோர்களாக உயர்த்தும் நோக்கிலும் கலைஞர் கைவினை திட்டம் என்ற புதிய திட்டம் உருவாக்கப்பட்டு அதற்கான அரசாணையையும் வெளியிடப்பட்டு இருக்கிறது. இத்திட்டம், குடும்ப தொழில் அடிப்படையில் இல்லாமல் 25 கைவினை கலைகள் மற்றும்…

Read More

நடப்பு நிதியாண்டில், மத்திய அரசின் தங்க பத்திரம் ஏன் வெளியாகவில்லை?

தங்க பத்திரங்கள் (Sovereign Gold Bonds) விற்பனையை இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கியது. மத்திய அரசின் ஆலோசனைப்படி, இந்தப் பத்திரங்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளியிடப்படுவது வழக்கம். சில நாட்கள் மட்டுமே, இந்த தங்க பத்திரங்களில் முதலீடு செய்ய அனுமதி வழங்கப்படும். முதலீட்டாளர்களுக்கு தங்க பத்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகு, அதனை அவர்கள் பங்குச் சந்தையில் விற்கவும், வாங்கவும் முடியும். தனி நபர்கள் இந்த தங்க பத்திரங்களில், குறைந்தது ஒரு கிராம்…

Read More

ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநர் ஆனார் சஞ்சய் மல்கோத்ரா

இந்திய ரிசர்வ் வங்கியின் 26 ஆவது ஆளுநராக முன்னாள் வருவாய்த்துறை செயலர் சஞ்சய் மல்கோத்ரா(56) பொறுப்பேற்றுள்ளார். 2024 டிசம்பர் 10ஆம் தேதி உடன் சக்தி காந்த தாஸ் அவர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததை அடுத்து புதிய ஆளுநராக சஞ்சய் மல்கோத்ரா பொறுப்பேற்றுள்ளார். இவர் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இப்பதவியில் நீடிப்பார். கணினி அறிவியல் பொறியாளர் ஆன சஞ்சய் மல்கோத்ரா கான்பூர் ஐஐடியில் பட்டம் பெற்றவர். 1990 ஆம் ஆண்டு ராஜஸ்தான் பிரிவு ஐஏஎஸ் அதிகாரி ஆவார். அமெரிக்காவின் பிரின்ஸ்டன்…

Read More

அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு தயாராகும் கோத்தாரி நிறுவனம்

125 ஆண்டுகள் பாரம்பரியமிக்க, சென்னையை தலைமையிடமாகக் கொண்ட ‘கோத்தாரி இன்டஸ்ட்ரியல் கார்ப்பரேஷன்’ நிறுவனத்தின் 10 சதவீத பங்குகளை கத்தாரை சேர்ந்த அந்நாட்டின் மன்னர் குடும்பத்திற்கு சொந்தமான ‘கே.எஃப் குளோபல் அண்டு இன்வெஸ்ட்மென்ட்’ நிறுவனம் வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. உரம், உணவு, ஆரோக்கியம், சுரங்கம், ட்ரோன், காலணி போன்ற பல்வேறு துறைகளை சேர்ந்த வணிகத்தில் கோத்தாரி நிறுவனமான KICL ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்தின், 10 சதவீத பங்குகளை, அதாவது 70.56 லட்சம் பங்குகளை வாங்க ‘கே. எஃப் குளோபல்…

Read More

இந்தியாவில் கடலுக்கு அடியில் அமைக்கப்படும், கண்ணாடி இழை கேபிள் கட்டமைப்பு

இந்தியாவில், கடலுக்குள் அமைக்கப்படும் கண்ணாடி இழை கேபிள் கட்டமைப்பில், சர்வதேச நிறுவனங்களான கூகுள் மற்றும் மெட்டா ஆகியவை அதிக அளவு முதலீடு செய்கின்றன. இதனால், இங்கு ஏற்கனவே டேட்டா சேவைகளை வழங்கும் ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் டாடா கம்யூனிகேஷன் ஆகிய நிறுவனங்களுடன் நேரடி போட்டி நிலவும் சூழ்நிலை உருவாகியுள்ளது. நடப்பாண்டின், முதல் காலாண்டில் கூகுள் நிறுவனம் மும்பையில் ப்ளூ-ராமன் சப்மெரின் கேபிள் சிஸ்டம் என்ற தகவல் தொடர்பு இணைப்பை தொடங்க உள்ளது. 218 டிபிபிஎஸ் திறனுள்ள…

Read More

அந்நிய நேரடி முதலீட்டில் 6-வது இடத்தில் தமிழகம்

மத்திய தொழில் வளர்ச்சி மற்றும் உள்நாட்டு வர்த்தக துறை வெளியிட்டுள்ள செய்தியில் அந்நிய நேரடி முதலீடுகளை ஈர்க்கும் மாநில வரிசையில் தமிழகம் ஆறாவது இடத்தை பெற்றுள்ளது.

Read More

ஏற்றுமதியில் சாதனை படைக்கும் தமிழகம்!

தமிழகத்தில் இருந்து, நடப்பு நிதி ஆண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை ரூபாய் 1.92 லட்சம் கோடி மதிப்புள்ள பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. அதிக ஏற்றுமதியில் காஞ்சிபுரம் 68,666 கோடி ரூபாயுடன் முதலிடத்திலும், சென்னை 22,891 கோடி ரூபாயுடன் இரண்டாவது இடத்திலும், திருப்பூர் 16,371 கோடி ரூபாயுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு. மாவட்டங்களில் பல்வேறு நிறுவனங்கள். மோட்டார் வாகனங்கள், எலக்ட்ரானிக் சாதனங்கள், ஜவுளி உள்ளிட்ட தொழில்களில் அதிகம் ஈடுபட்டுள்ளன. மற்ற மாவட்டங்களில், வேளாண்…

Read More

பாதுகாப்பான முதலீடுகள் லாபம் கேரண்டி! நோ ரிஸ்க்.

எதிர்கால திட்டமிடலுக்கு நீண்ட கால முதலீடு நல்லது. ரிஸ்க் குறைவான, கேரண்டியான நிச்சய லாபம் தரக்கடிய சில முதலீட்டுத் திட்டங்களை இந்தப் பதிப்பில் பார்ப்போம். சுகன்யா சம்ருதித் திட்டம் பெண் குழந்தைகளுக்கான கல்வி மற்றும் திருமணத்திற்கு இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம். இதில் ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் ரூ.250 250 முதல் ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்ய முடியும். பெண் குழந்தைக்கு 10 வயது ஆகும் வரை இந்த திட்டத்தில் சேரலாம். ஆனால், ஒரு பெண்…

Read More

இறங்குமுகத்தில் பங்குச்சந்தை. முதலீடுகளை வேகப்படுத்தலாமா? வேண்டாமா?

பங்குச்சந்தை தொடர்ந்து இறங்குமுகமாக இயங்கி வருவதால் பங்குவர்த்தகர்கள் இடையே சில குழப்பம் நிலவி வருகிறது. அதில் தற்போது முதலீடுகளை துரிதப்படுத்தலாமா அல்லது காத்திருக்கலாமா என்ற கேள்வியும் ஒன்று. இதற்கான ஒரு அலசலைப் பார்ப்போம், 2016ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை பங்குகளின் மதிப்பு அதிகமாக இருந்ததால் பங்குச்சந்தை பாசிட்டிவ் க்ளோஸாகவே இருந்தது. இடையில்,கொரோனா பாதிப்பினால் இறங்கியிருந்தாலும் ஆண்டுக்கணக்கில் பார்க்கும்போது, அதுவுமே பாசிட்டிவ் க்ளோஸ் நாள். இந்த ஆண்டும். இதுவரை பார்க்கும்போது பெரும்பாலும் பாசிட்டிவ் க்ளோஸ் தான்….

Read More